சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கி���் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
RCB played outstanding cricket throughout the tournament and fully deserved to be crowned champions. Winning the title is special; defending it and lifting the trophy for a 2nd consecutive year is a remarkable feat.
The men in yellow have the habit of making spectacular comebacks. CSK will be back with a bang next season!
#IPLFinal #RCBVsGT
நான் நெதர்லாந்துக்குச் சென்று வந்ததிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சோழர் கால செப்பேடுகள் குறித்து பேரார்வம் நிலவுகிறது. எனவே #MannKiBaat நிகழ்ச்சியில் அதுபற்றிப் பேசியதுடன், சத்தீஸ்கரில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தியாகத்தையும், கருணையையும், ஈகையையும் போதிக்கும் புனித பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், மக்களிடையே சகோதரத்துவம், அமைதி, மனிதநே��ம் ஆகிய உயர்ந்த பண்புகள் மேலும் வலுப்பெறவும், அனைவரின் இல்லங்களிலும் நலனும் வளமும் நிரம்பியிருக்கவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த ம���ர்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாத��காப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சே���ிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும�� என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறத��.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும�� என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந���த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape.
In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now.
However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30.
This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes.
I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014.
These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised.
The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first.
With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within.
India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities.
Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
Had the divine blessing of meeting @Gurudev Sri Sri Ravi Shankar avl on the occasion of his 70th birthday. His presence radiates peace, wisdom, and an unwavering commitment to humanity.
Gurudev’s lifelong mission of spreading harmony and inner transformation continues to inspire millions worldwide. Heartfelt prayers for his good health and continued guidance.
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெர��விழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Hearty birthday wishes to our @BJP4India National President Thiru @NitinNabin avl.
From humble beginnings to leading the world’s largest political party, his journey is a testament to dedication, discipline, and an unwavering commitment to nation-building.
His leadership continues to inspire millions of karyakartas across the nation. Wishing him good health and many more years of service to the nation.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரிய���ு. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடை��்கப் பெறாத மாணவ, மாணவியர் சோர்ந்து போகாமல், மீண்டும் நன்றாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையவும், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாகவ���ம், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
A glimpse of Kashi in Rome!
Mr. Giampaolo Tomassetti, an Italian painter, presented his work on Varanasi. His passion for Indian culture goes back over four decades. In the 1980’s he started as an illustrator for books on Vedic culture. From 2008 to 2013 he worked on 23 large paintings relating to the Mahabharat.