வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
என்னத்த சொல்வேனுங்க வடுமாங்கா ஊறுதுங்க,
செல்லப் பேரு ஆப்பிள் சைஸா கடிச்சிக்கோ,
டாடி மாமி வீட்டில் இல்ல விளையாடலாமா'னு புரட்சிக்கரமான சிந்தனைகள் எவ்வளவோ இருக்க ஏன் விஜய் அவரோட அரசியல் போஸ்டர்ல "ஒரு காலம் வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்"னு இருக்கு. 🥱🥱
பன்னிக்கு பதவி கிடைச்சா பந்தியில சோத்துக்கு பதிலா கண்டதை வெக்கணும்னு சட்டம் போடும்.
அதுக்கு சொல்லிப் புரியவைக்கவும் முடியாது புரிஞ்சிக்கற அளவுக்கு புத்தியும் இல்ல.
ஒளிவு மறைவெல்லாம் கட்டுப்படும்போது மட்டும் தான். எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளும் சுதந்திரம் இருக்கையில் எதையும் செய்யாமல் 'ஙே' என்று தான் அமர்ந்திருக்கத் தோன்றுகிறது.
இவளுகளா ஒரு கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பி அதுக்கு பசங்க ரிப்ளை பண்ணா படிச்சிட்டேன்னு ப்ளூ டிக் மட்டும் காட்டிட்டு தம்போக்குல இருக்கறதுதான் பிறவி சைக்கோவுக்கு சரியான உதாரணம்..
மகிழ்ச்சியான மனநிலையில் ஒருவரைத்தான் நினைக்கத் தோன்றும். தனிமையின் தவிப்பிலும் அவரே நினைவில் வரக்கூடும்.
கடந்த காலம் என்ற ஒன்றில் அவர்கள் இல்லாமல் வேறு வாழ்க்கையே வாழவில்லையோ என்கிற அச்சம் வருவது இயல்பு தான்.