மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி
ராஜஸ்தானில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டது முதல் பேச இயலாத நிலையில் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் எனது முதல் தயாரிப்பாளர், எனது வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வத் திருவுருவம். இன்று நான் ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கியமானக் காரணம் திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் "உதயாவை நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி, கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'திருநெல்வேலி' திரைப்படத்தின் மூலம் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பல இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒரு கதாநாயகனாக முதன்முறையாக அறிமுகப்படுத்தியது என்னைத் தான் என்பது எனக்கு எப்போதும் பெருமையும், நெகிழ்ச்சியும் அளிக்கும் விஷயம். அந்தத் தருணமே எனது வாழ்வின் தொடக்கமாகும்.
அவர் ஒரு தந்தை நிலையில் இருந்து என்னை அரவணைத்தாலும், ஒரு சிறந்த நண்பராகவும் பழகினார். திரையுலகின் தற்போதைய வணிகச் சூழல் மற்றும் சவால்களைப் பற்றி எங்களிடம் வெளிப்படையாக உரையாடுவார். ஜீவா, ரமேஷ் மற்றும் நான் என அனைவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். அவர் தான் அறிமுகப்படுத்திய கதாநாயகர்களையும் சரி, இயக்குநர்களையும் சரி, தன் சொந்தப் பிள்ளைகளாகவே கருதி அன்பு செலுத்தினார். திறமை வாய்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
உடல்நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு, என்றும் உற்சாகத்துடன் செயல்பட்ட அவர், எங்களுக்குப் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நான் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டபோது, "இன்றைய இண்டஸ்ட்ரி சூழலில் உனக்கு இது தேவையா? நீ ஒரு நல்ல நடிகன், நடிப்பில் கவனம் செலுத்து. ஆனால் நீ தயாரிப்பாளராகவும் ஜெயித்தால் உன்னை விட நான் தான் அதிக சந்தோஷப்படுவேன்," என்று உரிமையுடன் அறிவுரை கூறினார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட்ட போதும் எனக்கு அறிவுரை வழங்கினார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் கதாநாயகனாக என்னைப் பெருமைப்படுத்தியவர் அவர். நடிகர் சங்கத் தேர்தலாக இருந்தாலும் சரி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்.
நேற்று ஒரு விபத்தின் மூலம் அவரை நாம் இழந்துவிட்டோம் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் அவரிடம் ஆசி பெறுவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அத்தகைய ஒரு பேராளுமையை இன்று இழந்திருப்பது திரையுலகிற்கே பேரிழப்பாகும்.
ஜீவா, ரமேஷ், சுரேஷ் சார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மகனாக நான் கூறுகிறேன்: "அப்பா, நீங்கள் என்றும் எங்களோடுதான் இருக்கிறீர்கள்." இந்த விபத்துச் செய்தியை என்னால் ஏற்க முடியவில்லை. இப்போதும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நீங்கள் இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் என்றும் எங்களது தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்துவீர்கள். 'ஆர்.பி. சௌத்ரி வழங்கும்' என்ற வாசகம் மீண்டும் திரையில் ஒளிர வேண்டும் என்பதும், உங்கள் பணி தொடர்ந்து இன்னும் பல புதிய திறமைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதுமே எனது விருப்பம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்,
நடிகர் உதயா
#RIPChoudarySir
@JiivaOfficial@JithanRamesh@ACTOR_UDHAYAA
From the Desk Of Actor #Udhaya
Vanakkam,
This is actor Udhaya. May 4, 2026 is a day that deserves to be written in history. We are witnessing a tremendous people’s verdict. People’s verdict is the verdict of God. Believing that change is necessary, the people of Tamil Nadu have voted for the Tamilaga Vettri Kazhagam led by Thalapathy Vijay and have delivered a massive victory today. Once again, it has been proven that there is no power greater than the power of the people.
Although the full results are yet to come, it is my duty to congratulate Vijay Anna right now. A man who has faced countless problems, humiliations, and opposition with unwavering confidence, and with the sole aim of doing good for the people, sacrificed a top position as an actor to enter public service and has now won the hearts of the people.
Despite numerous criticisms, mockery, and defamatory campaigns, the fact that he has overcome everything and emerged victorious today is truly remarkable. They said he would not enter politics—he did. They said even if he came, he would not stand boldly—he did. They said even if he stood, he would not win—today, he has proven them wrong. This victory is a certificate of his good intentions, kind heart, and the love people have for him. In every constituency, people voted as if Vijay Anna himself was contesting, and have given this victory.
When a top actor entered politics to serve the people, many mocked him in various ways. Many people from the film industry themselves mocked him, calling him “just a cinema person,” and stayed silent without offering support. However, through his self-confidence and good intentions, he has proven that not only those from the film industry, but anyone from any field can succeed in politics if they have the support of the people.
It is everyone’s wish that Vijay Anna assumes office as the Chief Minister of Tamil Nadu and creates a new history. We have firm belief that he will do good for the people. From the beginning, I have supported TVK, and I will always stand by Vijay as a younger brother and a loyal supporter.
This victory has been given by the people in unity, without any divisions or ego. There is a strong possibility that TVK will win with a clear majority. I believe that after this victory, not only the film industry but all sectors will flourish further.
Once again, I extend my heartfelt congratulations and love to Vijay Anna. Thank you.
Yours always,
Actor Udhaya
#Vijay #TVKVijay @actorvijay@TVKVijayHQ@ACTOR_UDHAYAA
ஒரு தந்தையின் பதிவு :
தம்பி எனக்கு அரசியல்ல அவ்ளோ ஆர்வம்.ஆனா என்னோட குடும்பத்துக்கு அரசியல்னாலே புடிக்காது
நா செய்தி சேனல் போட்டாலே கோவப்படுவாங்க.நா எதாச்சும் கட்சிய பத்தி பேசனாலே So ஏங்க இம்ச பண்றீங்க யார் ஆட்சிக்கு வந்தா என்ன ? யார் வந்தாலும் கோடி கோடியா சம்பாதிக்கதா போறாங்க.யார்தா மக்களுக்காக உண்மையா இருக்க போறாங்க?
அதனால அதபத்திலாம் வெட்டியா பேசிட்டு இருக்காம நம்மளோட பொழப்பு என்ன அடுத்து என்ன பண்ணலாம்னு அத மட்டும் பாருங்க, அரசியல் வந்து சோறு போடாது இப்டிலா சொல்லி என்னோட மனைவி மகன் மகள் என குடும்பத்துல இருக்க 3 பேரும் திட்டுவாங்க
என்னோட மகனும் மகளும் அரசியல் பக்கம் ஆர்வமே இல்லாம இருக்காங்கன்னு வருத்தமா இருந்துச்சு
எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு ஒரு நாளாச்சும் குடும்பத்துல இருக்க மொத்த பேரும் சேந்து அரசியல் பேசணும்னு
ஏன்னா என்னோட குடும்பமே அரசியல் குடும்பம்தான். என்னோட அப்பாலாம் அரசியல்ல ஊறி போய் பெரிய பதவில இருந்தாரு.
எங்க அப்பா அரசியல் பேசி பேசிதா எனக்கும் அரசியல் மேல ஈடுபாடு வந்துச்சு
ஆனா என்னோட பசங்க இப்டி இருக்காங்களேன்னு நெனச்சுட்டு இருக்கப்ப விஜய் திடீர்னு கட்சி ஆரம்பிச்சாரு
என்னோட பையன் தீவிர விஜய் ரசிகன்.என்னைக்கு விஜய் கட்சி ஆரம்பிச்சாரோ அன்னைக்கு அரசியல் பேச ஆரம்பிச்சான் என்னோட மகன்
இப்ப வரைக்கும் நிறுத்தல.எப்ப வீட்ல TV முன்னாடி உக்காந்தாலும் செய்திதா பாக்கறான்
என்னோட பொண்ணு அஜித் ரசிகர் ஆனா அரசியல்ல விஜய புடுச்சு போய் ஏ பொண்ணும் என்னோட மகனோட சேந்து அரசியல் பாக்க ஆரம்புச்சுட்டா
என்னோட மனைவிக்கு இந்த சினிமா மோகம்லா இல்ல.சீரியல் மட்டும்தா பாப்பாங்க
ஆனா வீட்ல என்னோட மகன் விஜய் பேசறத போட்டு போட்டு அதுல என்னோட மனைவி விஜயோட பணிவையும் அன்பையும் பேச்சையும் பாத்து அவங்களும் விஜய்க்கு support பண்ண ஆரம்பிச்சுட்டாங்க
இப்ப தினமும் நாங்க 4 பேர் TV முன்னாடி உக்காரப்ப செய்தி மட்டும்தா ரொம்ப அதிகமா பாக்கறோம்
மனசுவிட்டு அரசியல் அதிகமா பேசறோம்.எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு
என்னோட பிள்ளைங்க அரசியல் கட்சி, அந்த கட்சி கொள்கை, அவங்க கூட்டணி,விஜய் கட்சி கொள்கை, அவரோட வாக்குறுதி, பூத் ஏஜெண்ட், வாக்கு சதவிகிதம், மொத்த வாக்காளர்கள், ஓட்டு சதவிகிதம் ,கடந்த கால வெற்றி அரசியல், ஒரு நாளைக்கு என்னென்ன குற்றங்கள் நடக்குது,அமைச்சர்கள் யாரு ,தமிழ்நாடு வளர்ச்சி இன்னும் சொல்ல முடியாத ஏகப்பட்ட விசயங்களை finger tip la வச்சு அரசியல் பேசறாங்க
என்னோட குடும்பமே அரசியல்ல அடிப்படை விசயம் எல்லாமே தெருஞ்ச ஒரு அரசியல் குடும்பமா மாறிடுச்சு
சிலபேர் சொல்லுவாங்க விஜய் பின்னாடி எதும் தெரியாத ஒரு ரசிக கூட்டம்தா இருக்குதுன்னு
ஆனா அதெல்லாம் சுத்த பொய்.எதும் தெரியாத ரசிக சண்டை போட்டுட்டு இருந்த கூட்டத்தைதா விஜய் ஒட்டுமொத்தமா அரசியல் பக்கம் திருப்பிருக்காரு
என்னோட குடும்பம் மாறி அரசியல்ல இருந்து ஒதுங்கியே நிக்கற ஏகப்பட்ட குடும்பத்த அரசியல் பேச வச்சுருக்காரு
இந்த குறுகிய 2 வருச காலத்துல இவ்ளோ பெரிய கூட்டத்த அரசியல் பேச வச்சு அரசியல் பாக்க வச்சு அரசியல்ல கவனிக்க வச்சதெல்லாம் மிகப்பெரிய சாதனை
அதுக்காகவே எனக்கு விஜய ரொம்ப புடுச்சு போச்சு.அந்த தம்பி ஜெயிக்கணும்னு எங்க குடும்பமே வேண்டிட்டு இருக்கோம்.
அவர் மேலயும் அவரோட ஆதரவாளர்கள் மேலயும் காட்டப்பட்ட ஒவ்வொரு வெறுப்பும் தரம்தாழ்ந்த விமர்சனமும் அடக்குமுறையும் விஜய் ஜெயிச்சே ஆகணும்னு குடும்பத்துல ஒருத்தரோட வெற்றி மாறி எதிர்பாக்க ஆரம்பிச்சுட்டோம்
என்ன மாறி ஏகப்பட்ட குடும்பம் அவரோட வெற்றிய எதிர்பாத்துட்டு இருக்கு
மக்கள் மனசுல இடம்புடுச்சவாங்க தோத்ததா சரித்திரமே இல்ல...
எல்லார் மாறியும் அந்த தம்பியோட வெற்றிய எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....❤️