@djayakumaroffcl நல்லா படிக்கணும் டா எல்லாரும்
நல்லா படிச்சா எல்லாருக்கும் பரிசு தருவேன்
அந்த குழந்தைகளை மீண்டும் நீங்கள் எப்ப வருவீர்கள் என்று
கேட்பதெல்லாம்
தலைவர்களுக்கு உண்டான குணங்கள் ✌️🌱
திருவொற்றியூர் பகுதியில் சொந்த வீடு கட்டும் ஒருவரிடம், தான் வட்ட செயலாளர் என்றும் தனக்கு 50,000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ளார்.
இன்னொரு பக்கம், சேலத்தில் நான் சொல்பவர்களை தான் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மற்றொரு தவெக நிர்வாகி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இப்படி தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகி என்ற பெயரில் பல முறைகேடுகள் நடப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.
ஆய்வு என்ற பெயரில் Shooting நடத்துவது, அரசு பள்ளி மாணவியிடம் தனது ஆங்கில புலமையை காட்டுவது, கோவிலில் வியாபாரியிடம் Expiry Date க்கே Expiry Date கேட்பது போன்ற செயல்களை விட்டு விட்டு முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் தங்களின் சொந்த கட்சிக்காரர்களை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.
மாற்றம் என்று மக்கள் வாக்களித்தது மாமூல் வாங்க அல்ல!!!
*இன்றைய அரசு பள்ளி மாணவர்கள்*
*நாளை நமது* *தேசத்தின்*
*தலைவர்கள்*
*நேற்று ஒரு பெண் அமைச்சர், அரசு பள்ளியில் 'ஆய்வு' என்ற பெயரில், கேமராக்களை வைத்துக் கொண்டு, தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உடல் மொழியுடன்*
*ஆய்வு என்ற பெயரிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும்; அதற்கு பதில் சொல்ல தடுமாறும் பொழுது, அந்த குழந்தையை வைத்துக் கொண்டே, இந்த மாணவிக்கு*
*Simple சிம்பிளான கேள்வி தான் இதுவே தெரியவில்லை என்று அந்த குழந்தையை வைத்துக் கொண்டே சொல்வதும் ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்வதும்...*
*இதைப் பார்க்கும் பொழுது, அந்த குழந்தைகளின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையும், ஒரு காயத்தையும் ஏற்படுத்தி இருக்கும்*
*பள்ளி குழந்தைகளின், அவர்களின் அறிவு சார்ந்த சிறிய முயற்சியைக் கூட, குழந்தைகளை மனம் மகிழ்சியடையும் படியும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும், 'All The Best' Super " என்று ஊக்கப்படுத்த வேண்டும். தட்டிக் கொடுக்க வேண்டும்.*
*அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் முன்னாள் இந்திய ஜனாதிபதி இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் பேரறிஞர் அண்ணா இதே மாணவி நாளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக வரலாம்.*
*இன்றைய தா வெ க அரசுக்கும் அமைச்சர்களுக்கும்*
*நிர்வாகம் தான் தெரியவில்லை என்றால்* *குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்!*
*"மொந்தை தான் வேறு, சரக்கு ஒன்று தான்" என்பது போல ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...*
கடந்த திமுக ஆட்சியில் விருது நிகழ்ச்சிகளிலும், விருந்து நிகழ்ச்சிகளிலும் தூய்மை பணியாளர்களை சீருடையில் வரவழைத்து தங்களின் எளிமையை காட்டிக் கொண்டார்கள் அன்றைய ஆட்சியாளர்கள்.
இன்று வெளிப்படையாகவே தூய்மை பணியாளர்களை தங்களின் வீட்டு பணியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர் இன்றைய தவெக ஆட்சியாளர்கள்...
நாட்டை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை அமைச்சர் வருகிறார் என்று செருப்புகளை எடுப்பதற்கும், எம்எல்ஏ வின் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் எச்சில் இலை எடுப்பதற்கும் பயன்படுத்துவது ஒருவித நவீன தீண்டாமையே!!
இன்று (07/07/2026) இராயபுரம் பகுதியில் 53 ஆவது வட்ட கழக செயலாளர் திரு.ரிஸ்வான் அவர்களின் தயாரின் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய போது….
கல்லால மரம் போல
பெரும் பாறையிலே வேரூன்றி வளர்ந்தது - நம் கழகம்!!
விழுதுகள் தேவை இல்லை,
வெறும் அடிமட்ட வேர்களில்
விருட்சமாய் நிற்பது - நம் கழகம்!!
எம்பெருமான் ஈசனாய்,
நம் இருபெரும் தலைவர்கள் எடுத்துரைத்த,
கழகத்தின் கொள்கைகளை
வேதமாய் நாம் கற்போம்!!
யார் வந்தாலும் போனாலும்
கல்லால மரமான,
நம் கழகத்தை
காத்து நிற்போம்!!
(இடம் : கேரளா - கபினி ஆறு)
@djayakumaroffcl தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் துறை சார்ந்து நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் முயற்சிகளும் இன்று வரை யாரும் செய்யாதது ✌️🌱
இன்று (05/07/2026) திருவள்ளூர் மாவட்டம் - பொத்தூர் பகுதியில் நடைபெற்ற தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி.ஆ.பொற்கொடி அவர்களின் கணவர் மறைந்த திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்திய போது….
இன்று (05/07/2026) இராயபுரம் பகுதியில் நடைபெற்ற கழக தோழர் திரு.இராமையா அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….