வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
நாமெல்லாம் ஏமாந்த இடம் இதுதான் அதாவது தற்குறிகள் பார்ப்பதை நாம் பார்க்கவில்லை, நமக்கு அது பார்க்க கிடைத்து இருந்தால் நம்முடைய பகுத்தறிவை தேர்தலுக்கு முன்பே பயன்படுத்தி இருக்கலாம்.
உண்மை, பொய் பிரித்து அறிவித்திருக்கலாம்.
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ?
இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீங்க என்ன சக்தி நாரசக்தியா..??
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி அவர்கள்
#TVKFails