செந்தூர்சக்கரவர்த்தி ஶ்ரீசண்முகர்
மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை காணும்
முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும்
வண்ணமுகம் ஒன்று!
நூறுமுகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு!