அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக ஓய்வறியாமல் உழைத்திட்ட என் அன்பு சகோதரன் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.
திரு.ஆர்.சாமி வழியில் கழகத்தின்(@ammkofficial) மீது விசுவாசத்துடன் நின்று மக்கள் நம்பிக்கையை வென்றெடுத்து தேர்தல் களத்தில் வெற்றிகளை குவிப்பதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், இல்ல நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகிக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது தானியங்கி மூலம் மது விற்பனை என்ற தி.மு.க அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது.
டாஸ்மாக் கடைகளில் மதுவை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பதாக வரும் புகார்களை தவிர்க்கவே இந்த தானியங்கி மது விற்பனை என்பது தி.மு.க அரசின் முதிர்ச்சியற்ற சிந்தனையையே வெளிக்காட்டுகிறது.
மது பழக்கத்தினால் இளைய சமுதாயம் தினமும் சீரழிந்து வரும் நிலையில் அவர்களையும், பொதுமக்களையும் மதுவின் பிடியிலிருந்து மீட்டெடுக்க என்ன வழி என்பதைப் பற்றி சிந்திக்காமல், தினமும் டாஸ்மாக் மதுவிற்பனை பற்றிய விதவிதமான வினோத அறிவிப்புகளை வெளியிடுவது தமிழக மக்களை மேலும் மதுவிற்கு அடிமையாக்கும் செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது.
ஆகவே, முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு டாஸ்மாக் மது விற்பனை பற்றி தீர்க்கமான முடிவு எடுப்பதுடன், இளைஞர் சமுதாயத்தை போதைக் கலாச்சாரத்திலிருந்து முழுமையாக விடுவிக்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu@V_Senthilbalaji #TASMAC
உலகெங்கும் வாழும் தொழிலாளர்களின் உரிமைகளை போராடி வென்றெடுத்த இந்த நன்நாளில் தொழிலாளர் தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். #MayDay2023
தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.
1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?
இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!
@CMOTamilnadu #DMK
மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கனிம வளக் கொள்ளைகளைத் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் படுகொலை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி என சொல்லி, ஒருபுறம் மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. மறுபுறம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதலும், படுகொலைகளும் சமூக விரோதிகளால் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தீர்வு என்றால் இந்தப் படுபாதக செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..? @CMOTamilnadu #VAO
Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக்கொள்ள வகைசெய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அனைத்து வீடுகளிலும் மதுவைப் பயன்படுத்தும் வகையில் அறிவித்து மது விற்பனையை விஸ்தரித்திருப்பது இதுவரை போதைக்கு அடிமை ஆகாதவர்களையும் குறி வைத்து சமூக மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை விடியா அரசு மேற்கொண்டுள்ளதா?
தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறுவர்கள், இளைஞர்கள் போதை வஸ்துக்களின் தாரளப் புழக்கத்தினால் அதற்கு அடிமையாகி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது, போதையில் வாகனத்தை இயக்கி பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற செயல்கள் அதிகமாகி வரும் சூழலில் இந்தச் சிறப்பு அனுமதி கூடுதலாக பல உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கும், பல குடும்பங்களை சீரழிவிற்கு உள்ளாக்குவதற்குமான முயற்சியே!
இந்த சிறப்பு அனுமதி மூலம் இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா?
எனவே, இந்த சிறப்பு மது அனுமதி அரசாணையை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டி அமமுக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கின்றேன். @CMOTamilnadu@V_Senthilbalaji #TASMAC
தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
மனித இரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாக தொழில் நிறுவனங்கள் மாற துணைப்போகும் அரசு மக்களுக்கான அரசு அல்ல.. மக்கள் விரோத அரசு..
மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு.
மக்களை வஞ்சிக்கும் திராவிட மாடல்
@CMOTamilnadu #DMKFails
ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாம் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #Ramzan#Ramadan2023
எளிய தமிழில் தினத்தந்தி நாளிதழை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்ட பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று. (1/2)
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பு சேர்த்ததுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி துறையிலும் சிறந்து விளங்கியவர். அன்னாரின் நினைவு நாளில் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். (2/2)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. (1/2) @ActorMadhavan#VedaantMadhavan
திரு. மாதவன் அவர்களின் மகன் வேதாந்த்துக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன். (2/2)
திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. (1/4)