சமூக சீர்திருத்தத்துக்காகவும், சமத்துவத்துக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, திராவிட இயக்கத்தின் கொள்கைக் தூண்களில் ஒருவராக விளங்கிய பெருமைக்குரிய பேராசிரியர் க. அன்ப��கன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#திராவிட_மாதம்
எளிய மக்களின் நீதிக்கான குரலாக ஒலிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படக் குழுவினருக்கு என் நெஞ்���ம் நிறைந்த பாராட்டுகள்!
மண்ணையும் ஆற்றையும் தங்கள் வாழ்வாகக் கொண்ட மக்களின் வலியைப் பேசும் படமாக ‘லெனின் பாண்டியன்’ வெளிவந்துள்ளது. அதிகாரமும் பணபலமும் துணைநிற்கும் மணல் கொள்ளையை எதிர்த்து, ஓர் எளிய மனிதர் நீதிக்காக நிற்கும்போது அவர் சந்திக்கும் அச்சமும் அவமானமும் எத்தனை பெரியவை என்பதை இப்படம் உணர்த்துகிறது. தன் தோற்றத்தால் ஒதுக்கப்பட்ட ஓர் இளம் காவலர், இன்னொருவருக்க��த் துணையாக நிற்கும்போது தன் கடமையையும் தன்னம்பிக்கையையும் கண்டடைவது கதைக்கு மேலும் நெகிழ்ச்சியைத் தருகிறது.
நம் ஆறுகளில் அள்ளப்படுவது மணல் மட்டுமல்ல; அது நாளைய தலைமுறையின் வாழ்வாதாரம். அந்தக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எளிய மக்களின் பக்கம் கலை நிற்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் முதல் படத்திலேயே கதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்கு��ர் தம்பி டி.டி. பாலச்சந்திரனை மனமாரப் பாராட்டுகிறேன்.
நீதியைத் தேடும் முதியவரின் அன்பையும் வேதனையையும் காட்டும் அப்பா கங்கை அமரன் நடிப்பை கண்டு மெய்மறந்தேன். அவருக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் பாசத்தையும் உறுதியையும் அண்ணி ரோஜா செல்வமணி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் மூலம் திரைக்கு அறிமுகமாகும் தமிழ் கலையுலக அடையாளம் எங்கள் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ���ேரன் ஆருயிர் தம்பி தர்சன் கணேசன், தன் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்; இந்த நல்ல தொடக்கத்தின் மூலம் அன்னை இல்லத்தின் பெருமையை அடுத்தக் கட்டத்திற்கு என் தம்பி தர்சன் கொண்டு செல்வார் என நம்புகிறேன். அன்புத்தம்பி தர்சனுக்கு என் வாழ்த்துக்கள்..
நீதிபதியாக ஜார்ஜ் மரியான், சட்டத்தின் மீது எ���ிய மக்கள் வைத்திருக்கும் ��ம்பிக்கைக்கு முகம் கொடுக்கிறார். ஸ்ரிதா ராவ் இளம் தலைமுறையின் உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அர்ச்சனா ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த காட்சிகளில் அழுத்தமான தடம் பதிக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன் வாசுதேவன், போஸ் வெங்கட் ஆகியோர் தங்கள் பாத்திரங்களின் வழியே கதையின் மோதலுக்கும் உணர்வுக்கும் வலுச் சேர்த்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என் பாராட்டுகள்.
இச��� இறைவன் இசைஞானி இளையராஜாவின் இசை காட்சிகளின் உணர்வோடு இணைந்து பயணிக்கிறது; முதல் மரியாதையில் வரும் "பூங்காற்று திரும்புமா" பாடலை மீண்டும் திரையில் கேட்கையில் எப்பொழுதும் போல் இசை ஞானியின் இசையில் நம்மை மறந்து படத்தோடு ஒன்றிவிடுகிறோம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளும் படைப்புக்குத் துணை நிற்கின்றன. மானாமதுரை மண்ணின் வாழ்வியலைக் காட்சிகளாகப் பதிவு செய்துள��ள ஒளிப்பதிவ���ளர் எட்வின் சகாய், கதையின் உலகத்தை உருவாக்கியுள்ள கலை இயக்குநர் அதுரி ஜெயகுமார் ஆகியோரின் உழைப்பு பாராட்டுக்குரியது. எப்பொழுதும் நல்ல கதை, தரமான பட உருவாக்கம், பணியில் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஐயா சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் இத்தகைய சமூக அக்கறையுள்ள கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்தமைக்கு ஐயாவிற்கும், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் என் வாழ்த்துக��்.
எளிய மனிதனின் குரல் அதிகாரத்தின் முன் சிறிதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் குரலைக் கேட்கச் செய்வதே கலையின் கடமை. அக்கடமையை உணர்ந்து ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் என் அன்பையும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணை��்பாளர்
நாம் தமிழர் கட்சி
@ilaiyaraaja @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao
@singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @aimsathishpro @teamaimpr @riseandroar_inc @SathyaJyothi