தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
பெண்கள் முன்னேற்றம்
சுயமரியாதை
பகுத்தறிவுச் சிந்தனை
சமூக சீர்திருத்தக்கொள்கை
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை தமிழக வெற்றிக் கழகம், கோவை புறநகர் மாவட்டத்தின் குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் V.ராஜ்குமார் மலர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
#தமிழகவெற்றிக்கழகம்@TVKVijayHQ@DharmanJayarman
கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.V.ராஜ்குமார் அவர்களின் தலைமையில், கோவை மண்டல வழக்கறிஞர் அணி இணை
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜே.மகேஸ்வரன் அவர்களின் புதிய சட்ட அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
#தமிழகவெற்றிக்கழகம்@TVKVijayHQ@DharmanJayarman
Warm birthday wishes to Coimbatore Suburban North District Secretary Mr. V. Rajkumar. May your life be filled with good health, joy, and many more milestones of success.
#தமிழகவெற்றிகழகம்@TVKVijayHQ@DharmanJayarman