2014 காலகட்டம். நான் கத்துக்குட்டியாய் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். ஜிஞ்சர் என்கிற பாத்திரத்தில் #சூரி அண்ணன் நடித்துக் கொண்டிருந்தார். படம் முடிகிற நிலையில் ஒருநாள் இருவரும் காலாற நடந்தோம்.
“அண்ணன், இனி உங்களுக்கு காமெடி கேரக்டர்ஸ் செட்டாகாது. ஹீரோவா பண்ண ஆரம்பிச்சிடுங்க…” என்றேன். இரண்டு அடி தூரம் பின்னே போன சூரி அண்ணன், “ஏண்ணே ஏம்பொழப்புல மண்ண போடப் பாக்குறீங்க?” என்றார் பதறிப்போய்.
“அண்ணே, நான் உங்களை உசுப்பேத்தவோ புகழ்ந்து தள்ளவோ இப்படி சொல்லலை. என் படத்துல மட்டுமில்ல… பல படங்களில் நீங்க நடிக்கிறப்பவும் நான் உங்களைக் கவனிக்கிறேன். எதுவுமே உங்களுக்குப் போத மாட்டேங்குது. இன்னும் நல்லா பண்ணி இருக்கனும்கிற உணர்வுல நீங்க தத்தளிக்கிறீங்க. உங்களுக்கு இருக்கிறது பெரிய பசி. அதுக்கு காமெடி பாத்திரங்கள் சரியான தீனியா இருக்காது. ஒரு முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கக்கூடிய சக்தி உங்க நடிப்புக்கு இருக்கு. அதனால ஹீரோவா பண்ணினாத்தான் உங்க பசி அடங்கும்ணே…” என்றேன். “அண்ணே, எச்சியை முழுங்கிற மாதிரி நாம இப்படி பேசிக்கிட்டதையும் முழுங்கிடுவோம். ஒன்றிரண்டு ஹீரோக்கள் தயவுல ஒரு காமெடியனா என் வாழ்க்கை நல்லா ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு பங்கம் வந்திடக் கூடாதுண்ணே” எனக் கும்பிட்டார் சூரி அண்ணன்.
ஆனாலும் நான் அடங்கிய பாடில்லை. ‘கத்துக்குட்டி’ பட புரோமோஷனுக்கு எனச் சொல்லி ஸ்டைலிஷான உடைகளை அண்ணனுக்காக வாங்கி வந்து அவர் லுக்கையும் மாற்றி ஸ்டில் ஷூட் எடுத்தோம். ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் அண்ணன் ரகளையாக இருந்தார்.
‘யாரிடமும் காட்டக் கூடாது’ என அண்ணனிடம் உத்திரவாதம் கொடுத்து எடுத்திருந்த புகைப்படங்களை அவருக்குத் தெரியாமல் அவர் பிறந்த நாளுக்கான போஸ்டர்களாக மாற்றினோம். பலதரப்பட்ட ஆட்களும் போன் பண்ணி, “சூரி, போஸ்டர் நல்லா இருக்கு…” எனச் சொல்ல, அலறியடித்து அண்ணன் தெரு பக்கம் வந்து பார்த்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் என் வீட்டுக்கு வந்தார்.
“இந்த வருச பிறந்த நாளை நான் மறக்க முடியாதுண்ணே… என்னோட போட்டோஸ் பார்க்க எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, இந்தப் பயலுக்கு இதெல்லாம் ஒரு கேடான்னு யாரும் சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்குண்ணே…” என்றார் கலங்கிப்போய். அவர் தரப்பிலான ஆட்கள் மூலமாக அவருடைய போஸ்டர்களை அவரே கிழிக்கவும் செய்தார். விவரமறிந்து நான் வருத்தப்பட்டபோது, “வேணாம்ணே…” என்றார் சங்கடத்துடன்.
இன்று திரும்பிய திசையெங்கும் சூரி அண்ணன் கதாநாயகனாகக் காட்சியளிக்கும் ‘மண்டாடி’ போஸ்டர்கள்… கதை நாயகனாக, கதாநாயகனாக, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக ஆன்லைன் முழுக்க சூரி அண்ணனின் முகம்… எவரையும் மிதிக்காமல், எவர் கண்ணையும் உறுத்தாமல் உழைப்பும் அர்ப்பணிப்புமாய் உயர்ந்து நிற்கும் @sooriofficial அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். ‘மண்டாடி’ படம் உங்களின் உச்ச வெற்றியாக அமைய முருகப்பெருமானிடம் மன்றாடி வேண்டுகிறேன் அண்ணன்🙏
"கலைஞர் பேசிய வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" - பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என கலைஞர் பேசியதை சொன்ன சபாநாயகர்
#TNAssembly | #JCDPrabhakar | #Karunanidhi
நேபாளப் பேரழிவு
நெஞ்சில் நிலநடுக்கம்
ஏற்படுத்துகிறது
மலைகளின் மீது
வெள்ளத்தின் படையெடுப்பு
குன்றுகளைப் பெயர்த்து
கோலியாடிக்கொண்டே செல்லும்
வெள்ளம் பார்த்து
உலகம் உறைந்து நிற்கிறது
இது நிலநடுக்கத்தின்
விளைவல்ல
பனிப்பாறை சரிந்ததில்
5 ரிக்டருக்குமேல்
பூமி அதிர்ந்திருக்கிறது என்று
அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது
நேபாளியோ இந்தியனோ
தமிழனோ பிறநாட்டாரோ
எல்லாரும் மனிதர்கள்
உயிருள்ள ஒவ்வொருவரும்
சேதாரமின்றி
மீட்கப்பட வேண்டும் என்பதே
காலத்தின்
கவலையாக இருக்கிறது
இயற்கை
இவ்வளவு மோசமாக
மனிதர்களை
எச்சரிக்க வேண்டியதில்லை
இந்த நிகழ்வு
உலகுக்கொரு பாடம்
இயற்கையை
இயற்கையாக
இருக்கவிடும் வரைக்கும்
மனிதர்கள் இந்த பூமியில்
வாழ்ந்து போகலாம்
இறந்தோர்க்கு இரங்கல்;
இருப்போர்
மீட்கப்பட வேண்டுமே
என்பது என் தவிப்பு
இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். !
நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியலிருந்து ஏற்பட்ட வெடிப்பு் ஏற்படுத்திய பெருவள்ளம் அந்த நாட்டை புரட்டிபோட்டுள்ளது.
இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இன்று @poovulagu இணையத்தில் வெளிவரும்
ஆனால் இந்த பெருவெளலளம் ஏற்படுத்திய துயரம், நிலைகுலைய செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.
இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொருங்கிவிட்டன, 40 கிமீ சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின்நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள்.
மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், இமையமலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.
ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம்.
அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ட்ட யுகத்திற்குள்”(அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது.
இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும்.
இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை!
Rest can wait!
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
#Nepal #NepalGlof #Glof
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
அடேய் நீங்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் அரசியலுக்கு வந்தவர்கள், நாங்கள் பிறந்ததே அரசியலுக்காக.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் எனும் நஞ்சு பிளக்கப்பட்டார்..
#WATCH | குழந்தையின் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கினால் செய்யவேண்டிய முதலுதவி என்ன - மருத்துவர் அருண்குமார் விளக்கம்
#SunNews | #Erode | #FirstAid | #Doctor
A birthday without my dad feels different.
I wish I could hear his voice, see his smile… call me சிங்கா .. one more time ..
Some birthdays are not about growing older, but about missing the ones who made you who you are today, who built you , who blessed you , who made every birthday special❤️
Miss you daddy - சிங்கா ❤️
எப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக 🤨🤐🤐
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்லவேண்டும் இத பாத்து கத்துக்கோங்க.