#Scene - 3.5/5🌟
GOOD WATCH ❤️
#Sceneblockbuster
Crime, Comedy, Investigation-னு கலந்து ஒரு வித்தியாசமான கதையா கொடுத்திருக்காரு #JithuMadhavan 👏
ஆரம்பத்துல கொஞ்சம் மெதுவா போனாலும், ஒவ்வொரு Character-ஆ உள்ள வர வர படம் சூடு பிடிக்குது.
❇️ குறிப்பா 2nd Half Investigation
1/4⬇️
ShivFlix - 🎬 Obsession – ✍️ Movie Review
Obsession படம் பேரு வச்சதுக்காக இவ்ளோ Obsession ஆ?🫣
Last year Weapons படத்தை திரையில் பார்க்கத் தவறவிட்டது போலவே, இந்த வருடம் Obsession படத்தையும் திரையில் பார்க்க மிஸ் செய்துவிட்டேன்.
மிகக் குறைந்த பட்ஜெட். நான்கு லொகேஷன்கள். அதிலும் ஒரு வீடுதான் படத்தின் முக்கியமான களம். 2 பிரதான கதாபாத்திரங்கள், 2 Supporting Characters. இவ்வளவு குறைவான விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
நமக்குப் பிடித்த ஒன்று கிடைத்துவிட்டால் வாழ்க்கை சந்தோஷமாகிவிடும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த ஆசை நிறைவேறிய பிறகு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை Fantasy கலந்து சொல்லியிருக்கும் விதம் நன்றாக இருந்தது.
ஒருவருடைய காதலைப் பெறுவதற்காக அவருடைய சுதந்திரத்தையே பறித்துவிட்டால் அது காதலா அல்லது வெறியா? இந்தக் கேள்வியைப் படம் சொல்லாமல் சொல்கிறது.
Hero Bear, எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று Nikkiயிடம் சொல்ல, அவன் வேலைக்குச் சென்று திரும்பும் வரை அதே சிரித்த முகத்துடன் இருப்பது, சிறுநீர் கூட அங்கே கழிப்பது, தூங்கும்போதும், மற்றவர்களிடம் பேசும்போதும் அவளுடைய பார்வை Bear மீது மட்டும் இருப்பது என Nikki கதாபாத்திரத்தின் ஒவ்வொரு செயல்பாடும் வித்தியாசம்.
சில காட்சிகள் உண்மையிலே அட போட வைத்தது. குறிப்பாக bear , Sarah பேசி கொண்டு இருக்கும் போது வரும் Nikki entry 🔥
Nikki கதாபாத்திரத்தில் நடித்த Inde Navarrette உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். அந்தப் பார்வை, முகபாவனை, உடல்மொழி என ஒரு சைக்கோத்தனமான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.
Bear கதாபாத்திரத்தில் நடித்த Micheal Johnson அவரும் பயமும் , காதலும் , ஏமாற்றமும் கலந்த அருமையான நடிப்பு 👍
பெரிய நடிகர்கள் இல்லை, பிரம்மாண்டம் இல்லை. ஆனாலும் ஒரு சின்ன ஐடியாவை வைத்து பார்வையாளர்களை கடைசி வரை உட்கார வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை சமீபத்தில் பார்த்த சிறந்த படங்களில் Obsession நிச்சயம் ஒன்று. ❤️
🔞 காட்சிகள் உண்டு .!
#Ranabaali (Tamil/Telugu) – ஒரு கொடூரமான வரலாற்றை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்!
Rating : 2.25/5
#Netflix#Taxiwala, #ShyamSinghaRoy படங்களை இயக்கிய ராகுல் சங்கிரித்யன், 1876–78 காலகட்டத்தில் நடந்த மெட்ராஸ் பஞ்சத்தை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய மக்கள் அனுபவித்த கொடுமைகளையும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும் மிகவும் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார். செழிப்பாக இருந்த ஊர்களில்கூட பஞ்சத்தை ஏற்படுத்தி, மக்களை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் திட்டங்களைப் படத்தில் காட்டிய விதம் அருமை.
பார்க்கும்போதே மனதைப் பாதிக்கும் பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு கைப்பிடி சோற்றை எடுத்த சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மனதை உலுக்குகிறது. அன்றைய மெட்ராஸ் பஞ்சத்தின் உண்மையான புகைப்படங்களை ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது படத்திற்கு இன்னும் யதார்த்தமான உணர்வைக் கொடுக்கிறது.
கதை நன்றாக இருந்தாலும், சில காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தாலும், படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக, அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் சில இடங்களில் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் படத்தை இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம். சில காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
விஜய் தேவரகொண்டாவின் அறிமுகக் காட்சியிலேயே ஒருவரின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு நடந்து வருகிறார். அதற்குத் தனியாக ஒரு அறிமுகப் பாடலும் வேறு! தலை வெட்டுவது, கை, கால்களைத் துண்டிப்பது என படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகம். இதற்கிடையில் முத்தக் காட்சிகள், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் காட்சி என அதிர்ச்சியளிக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
அதுமட்டுமில்லாமல், ஹீரோ படம் முழுவதும் பேசும் சில பஞ்ச் வசனங்களும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. இவ்வளவு விஷயங்கள் தேவையா என்ற எண்ணம் சில இடங்களில் வருகிறது.
வில்லன் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, #TheMummy படத்திலிருந்து வில்லனையே அழைத்து வந்து இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கதாபாத்திரம் பெரிய அளவில் வலுவாக இல்லை. படத்தில் இன்னும் அழுத்தமான வில்லன் கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கலாம்.
ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் இரண்டுமே செம. அந்தக் காலகட்டத்தைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்கத்தின் உழைப்பு நன்றாகத் தெரிகிறது.
மொத்தத்தில்: ஒரு நல்ல வரலாற்றுக் கதையை எடுத்துக்கொண்டு, அதைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தேவைக்கு அதிகமான வன்முறை, நீளமான திரைக்கதை, சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் #Ranabaali இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
#Ranabaali #VijayDeverakonda #RahulSankrityan #MovieReview #TeluguCinema
#AnbhudanMahi ❤️
#GVPrakash & #MalavikaManoj ஜோடியும் பார்க்க ரொம்ப cute-ஆ இருக்கு. Poster பார்க்கும்போதே ஒரு அழகான love story vibe கிடைக்குது. ❤️
#Joe படத்துக்குப் பிறகு #HariharanRamS இயக்கத்தில் இன்னொரு அழகான காதல் கதை வருதுப்போல 🙌🏻✨
Waiting for this one! @gvprakash ❤️
#AakasamLoOkaTara 🔥
Trailer நல்லா இருக்கு! ஒரு வித்தியாசமான content-ஓட படம் வரப்போகுது போல. 👀
@dulQuer-க்கு ஒரு தரமான comeback-ஆ அமைய னும். ❤️
அதிலும் @gvprakash இசை கேட்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு இருக்கு.🎶🤞
#GVprakash
சண்டக்காரி – விமர்சனம் 🫙
லண்டன்ல வேலை, காதல், லண்டன்ல பிரச்சனை… இதையெல்லாம் வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா படம் பார்த்த நமக்குத்தான் பிரச்சனை அதிகமாகுது..
படத்தோட கதை என்னன்னா, விசா பிரச்சனையைத் தீர்க்க சொந்த அசிஸ்டன்ட்டையே கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் ஷ்ரேயாவுக்கு விமல் செய்யும் ரகளை தான் படமே..
ஷ்ரேயா பத்து வருஷதுக்கு முன்னாடி அழகா இருந்துருக்காங்க… விமல் நடிப்பை பத்தி சொல்லவே ஒன்னுமில்ல.
காமெடி வர வேண்டிய இடத்துல சீரியஸா இருக்கு. சீரியஸா இருக்க வேண்டிய இடத்துல காமெடி பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க.
லண்டன்ல இருந்து கிராமத்துக்கு வந்ததும் கதை வேகம் எடுக்கும்னு பார்த்தா, நம்ம பொறுமைதான் வேகம் எடுத்து ஓடுது..
மொத்தத்துல பழைய கதைக்கு புதுசா பெயர் வச்சு, எந்த நம்பிக்கையில லண்டன் வரைக்கும் ஷூட்டிங் போனாங்கன்னு தெரியல.
#Sandakari படத்தோட சண்டை போட வேண்டாம். நேரத்தை மட்டும் கொஞ்சம் சேமிச்சுக்கோங்க😂
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5)
OTT: Manorama Max
Tamil Dub: ✅
இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம்.
வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது.
படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை.
திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ …
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான்.
Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
#SathyavanSavithiri ❤️
நாளைக்கு #Savithiri & படக்குழுவினருடன் ஒரு ஜாலியான சந்திப்பு காத்திருக்கு! 😍
சென்னை VR Mall-ல மாலை 5 மணிக்கு Grand Pre-Release Event. 🔥
நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் ! 🎬❤️
#KeerthySuresh
#Bouma - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
சேட்டன்ஸோட வழக்கமான Crime / Thriller பாணியில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் வித்தியாசம் காட்ட Fantasy Elements-ஐயும் சேர்த்திருக்காங்க 🙂↔️
First Half சுமாராகவே போனாலும், Second Half முதல் Pre-Climax வரைக்கும் வரும் ட்விஸ்ட்கள் ஓரளவுக்கு என்கேஜிங்காக கொண்டு போகுது.
ஆனா, ஒரு படத்துக்கு சரியான முடிவு ரொம்ப முக்கியமில்லையா? 🤦🏻♂️
Ending-ஐ இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகவ கொடுத்திருக்கலாம்.
கதையை முழுமையாக முடிக்காமல் Second Part-க்கான லீட் கொடுத்த மாதிரி இருக்கு.
Dark Atmosphere-ல் ஒரு Fantasy / Suspense / Investigation Thriller பார்க்கணும்னா ஒரு முறை Try பண்ணலாம்.
மொத்தத்தில், சுமார் ரகம்
#Daayra - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
OTT: Netflix
Tamil Dub: ❌
நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவம், Press & Media-வில் பெரும் பேசுபொருளாக மாறுகிறது…
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த நால்வரையும் Encounter செய்கின்றனர்.
ஆனால், இது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்ற கேள்வி எழுகிறது. அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த Daayra.
Nirbhaya வழக்கின் விசாரணையை நினைவுபடுத்தும் கதைக்களம். மிகவும் Sensitive-ஆன ஒரு Subject-ஐ கையில் எடுத்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாமல் நகர்ந்து முடிந்துவிடுகிறது.
Prithviraj-ன் சுமாரான படங்களின் பட்டியலில் இதற்கும் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டு மணி நேரம் ஏதோ ஓடுகிறது என்ற உணர்வைத் தவிர, படத்தில் பெரிதாக ஈர்க்கும்படி எதுவுமே இல்லை.
ரொம்ப சுமார்
#troymovie ஸ்பார்ட்டா நாட்டின் அரசி ஹெலனை டிராய் இளவரசன் பாரிஸ் காதலித்து ட்ராய்க்கு அழைத்து சென்று விடுகிறான் இதனால் கிரேக்கப் படைகள் டிராய் நாட்டின் மீது போர் தொடுகிறார்கள் அதன் விளைவாக என்னன்னே நிகழ்கிறது என்பது தான் கதை.
எனக்கு இது போன்ற வரலாற்று படங்கள் அவ்வளவு செட் ஆகாது
#GVPRAKASH 🔥
#Joe இயக்குநருடன் GVP இணைந்திருக்கும் அடுத்த படத்தோட Title announcement நாளைக்கு வருது! 👀
Shooting ஏற்கனவே ஆரம்பமாகி விறுவிறுப்பா போயிட்டு இருக்கு. #MalavikaManoj -ம் இதுல நடிக்கிறாங்க. ❤️
இந்த கூட்டணியில் ஒரு நல்ல படம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம். 💯
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடபழனி முருகன் கோவிலில் ஏற்பாடுகள் ரொம்ப சிறப்பா இருக்கு. 👏🙏
நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்யும் வகையில் வசதிகள் அமைத்திருப்பது மகிழ்ச்சி. ❤️
@RameshOffcl வாழ்த்துகள்!👍
#VadapalaniMuruganTemple
#JohnDoe 🔥
#ArjunDas -க்கு அந்த கம்பீரமான voice-உம் screen presence-உம் இருக்கு. ஒரு Police Officer கதாபாத்திரத்துல அவரைப் பார்க்கும்போது நல்லா இருந்துச்சு. 👏
படம் பார்த்தவங்களும் positive-ஆ தான் சொல்றாங்க🙌🏻
@iam_arjundas-க்கு இந்தப் படம் ஒரு நல்ல வெற்றியா அமையட்டும்! ❤️