அகிம்சையின் அடையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது!
தியாகதீபம் திலீபனின் நினைவுநாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. தங்களுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.
உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.
தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாட்டரி பணத்தில் தவெக - ஆதவ் அர்ஜூனாவுடன் ஒப்பந்தம்
பத்திரிகையாளர் அய்யநாதன் அதிரடி!
அரசியல் களத்தில் நடக்கும் முறைகேடுகள், கட்சிகளின் நிதி ஆதாரங்கள் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் நகர்வுகள் குறித்த சமீபத்திய நேர்காணல் 👇
🔗 https://t.co/dzhuCTl1Ql
#TVK#AadhavArjuna #TamilNaduPolitics #PoliticalDebate #EngalDesamOfficial
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
திமுக மீது குற்றச்சாட்டு வைத்தால் நாம் தமிழர் கட்சி பதில் சொல்வதாகவும், நான் வரிந்துகட்டிக் கொண்டு ட்வீட் போடுவதாகவும் எனது கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பித்து, திரித்து அவதூறுப் பரப்புகிறார் அன்பிற்கினிய அண்ணன் @Ahmedshabbir20 . ரூட் மாபியா செய்யும் அதே கருத்துருவாக்கத்தை இவரும் செய்கிறார்.
சரி! அதனைக் குற்றச்சாட்டாகவே அவர் வைக்கட்டும். அதுகுறித்து சனநாயகப் பூர்வமாக விவாதம் செய்யவும், விளக்கம் அளிக்கவும் அணியமாக இருக்கிறேன்.
அண்ணன் சபீருடைய The News Minute Tamil ஊடகத்தில் விவாதமோ, நேர்காணலோ எதுவாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். சபீர் மூத்தப் பத்திரிக்கையாளராகக் கேள்விகளைத் தொடுத்தாலும் சரி! தவெகவின் ஆதரவாளராக விவாதம் செய்தாலும் சரி! அவரோடு தர்க்கம் செய்யத் தயாராக இருக்கிறேன்?
எப்போது, எங்கு வர வேண்டுமென சபீர் அண்ணன்?
உண்மை ஒருநாளும் வெளியே வராது !
#karurstampede
கண்ணை விட்ட மறையாத கரூர் பேரிழப்பு | ஓராண்டாக கண்டுபிடிக்காத குற்றவாளிகள் | Karur stampede
https://t.co/RCXuiD2hv4