விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
The aura, the charm, the confidence
Indira Gandhi is missed today by crores of Indians. Such leadership is born once in 100 yrs.
This is her press conference 🔥
50 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது!
சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மாநில உரிமைகளை காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள்.
ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது.
இந்த முக்கிய அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர்.
ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்!
சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!
லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.
#INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்.
அனைவரும் வருக!
#கழக_இளைஞரணி_மாநாடு
#DMKYW4StateRights
#JUSTIN |கலைஞரின் கனவுத் திட்டம் பரிசோதனை!
தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் ‘வெள்ள நீர் கால்வாய்’ திட்டமானது கடந்த திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞரால் 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டப் பணிகள் தற்போது முழுமை பெற்றுள்ளன.
குமரி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து சுமார் 30,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலைஞரின் கனவுத் திட்டமான வெள்ளநீர் கால்வாய் பணிகள் முழுமை அடைந்துள்ள நிலையில், வெள்ள நீர் கால்வாயில் சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து சேரன்மாதேவி அருகே உள்ள வெள்ளங்குளி என்ற பகுதியில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கலைஞரின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தில் வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டபணி ₹989 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன் பெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், 2,657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் என மொத்தம் 50 கிராமங்கள், 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன் பெறும். விரைவில் இந்த திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்” என தெரிவித்தார்.
#SunNews | #NellaiRains | @AppavuSpeaker | @mkstalin