#JustNow || ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழக காவல் துறை வரலாற்றில் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.!
#ArunIPS | #IPS | #PolimerNews
உண்மையாகவே வீரமணி வழக்கில் நீங்கள் சவுக்கை சுழற்றி விட்டீர்கள் சார்......
எவ்வித சார்பும் இன்றி நடுநிலையோடு சொல்கிறேன்
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகளை ஒழுங்காக வேலை வாங்கி இருந்தால் வீரமணி எப்போதோ சிறை சென்றிருப்பான்.
அதிகாரத்தில் இருக்கும் போது கோட்டை விட்டுட்டு இப்போ அறிக்கை விடுறத என்னனு சொல்றது
#mkstalin#dmk#gemveeramani#Gemgraniteveeramani
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#BREAKING | வீரமணி வழக்கில் நாளுக்குநாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன- EPS
Gem Veeramani | Newsreport | 24 September 2026
#EPS#NewsReport#NewsTamil24x7
தமிழகத்தில் உருவானது புதிய அரசியல் இயக்கம்
அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகம்😂😂😂😂😂😂😂😂😂
நடிகர் அஜித் குமாரை மையமாக வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஆரம்பமானது புதிய இயக்கம்
#கடவுளேகாப்பாத்து#முடியலடசாமி#Ajithkumar#AK#actorajith#anmk
சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா?
வன்னியரசே, விபரீத முடிவு எடுக்க வேண்டாம்!
.......................................
தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நாம் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, மாதாந்திரக் கட்டணம் வெறும் 150 ரூபாயாக இருந்ததை 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.
இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசித் தேவைகளின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் தின அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர்.
மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.
ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போல ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம்.
அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது.
மாணவர் விடுதிகளில் ’மாட்டிறைச்சி’ பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த மாட்டிறைச்சி குறித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.
ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே, வன்னியரசின் மாட்டுக்கறி மாமிசக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.07.2026
சூரியனுக்கும் தாமரைக்கும் ஏற்கனவே மறைமுகமாக உறவு பலமாக உள்ளது.அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
விசிலுக்கும் மாம்பழத்துக்கும் இடையில் பானை உள்ளதால் சற்று சந்தேகமாக உள்ளது.ஒரு வேளை மாம்பழத்தையும் பானையையும் விசில் சேர்த்து வைத்தால் அரசியல் மாஸ்டர் கேம் ஆக இருக்கும்.
இரண்டு சமுதாயம் ஒன்று சேர வழிவகுக்கும்...
#Dmk #bjp #pmk #vck #அரசியல் #Political #tvk #vckjoinpmk
#WATCH | Chennai, Tamil Nadu: After launching the expansion of the rechristened Perunthalaivar Kamarajar Free Breakfast Scheme at Government Middle School in Gandhi Gramam, Thiruvanmiyur, Chief Minister C. Joseph Vijay eats breakfast with the students of the school.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் 30 இலட்சத்தில் கட்டப்பட்டு 19.40 இலட்சத்தில் பழுது பார்க்கப்பட்ட ஆடு இறைச்சி கூடம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது...
விரைவில் பயன்பாட்டிற்கு வருமா என பூந்தமல்லி மக்கள் கேள்வி???
@CMOTamilnadu@TiruvallurCollr@avadipolice .