எங்கள் வாழ்வாதாரத்தைச் சிதைக்காதீர்கள் என்பதே பரந்தூர் மக்களின் ஒரே கோரிக்கை - வேல்முருகன்...!
விவரம் : https://t.co/NkaJP2NQvx
#latestnews | #paranthur | #tnnews | #TVk | #velmurugan
@VelmuruganTVK விவசாயியின் நிலம் என்பது வெறும் மண் அல்ல அது அவரது உயிரும் வரலாறும் எதிர்காலமும் ஆகும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக நிலம் கையகப்படுத்துவதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும்
என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது.
நெய்வேலி: என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி மக்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தென்குத்து கிராமத்தில் உள்ள கல்குவாரி இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதன் உரிமையாளரிடமிருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. அதிகாரிகள் வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, நேற்று காலை தென்குத்து கிராமத்தில் காவல்துறை பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் ஊருக்கு அருகில் 20 மீட்டர் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியைத் தொடங்கினர். இதற்கு தென்குத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடலூர் - ஆபத்தாரணபுரம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 15,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது. அந்த நிலங்களில் முதலில் நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும். புதிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தக் கூடாது.
தமிழர்களின் நிலங்களைப் பறித்து நடத்தப்படும் இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வழங்காமல் புறக்கணித்துவிட்டு, வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அதிக அளவில் பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. பணியின் பாதிப்பால் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) செய்து வருகின்றனர்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2023-2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், நெய்வேலி அருகே வடக்குவெள்ளூர் கிராமத்தில் குடிநீரில் பாதரசம் (Mercury) அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. என்.எல்.சி.யின் தெர்மல் பவர் ஸ்டேஷனில் நிலக்கரி எரிக்கும்போது வெளியேறும் பறக்கும் சாம்பல் மழைநீரில் கலந்து நீர் நிலைகளுக்குச் செல்வதாலும், சுரங்க நீர் வெளியேற்றத்தாலும் பாதரச மாசு ஏற்படுகிறது. இது நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல், கருவுறுதல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. பார்வைக் கோளாறு, நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களை கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே, மத்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் புதிதாக நிலம் கையகப்படுத்த முன்வரக் கூடாது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தபோது “மக்களின் விருப்பத்திற்கு மாறாக விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்” என வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல் என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் மக்களின் நிலங்களையும் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்த மாட்டோம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
@VelmuruganTVK தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும் அரசுப் பணியும் உடனடியாக வழங்க வேண்டும். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது; அதே வேகத்தில் நீதியும் கிடைக்க வேண்டும்.
@VelmuruganTVK வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணை குறிவைத்து நடந்த இந்த மனிதத்தன்மையற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை சமூகத்திற்கு அவமானம்.
புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ரூ 50 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உடனே வழங்க வேண்டும்;
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதான, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், அரிசி ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 17ம் தேதி பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற கறம்பக்குடி மணக்கொல்லையைச் சேர்ந்த சேகர் (56) மற்றும் மாரிமுத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை காருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராடிய அப்பெண்ணை தாக்கி, கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
அந்த வழியாக வந்த தலைமை காவலர் வாசுகி, அப்பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.
பின்னர் திண்டுக்கல்லில் சேகரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மழையூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து, வழக்கை விரைந்து முடித்து அதிகபட்ச தண்டனை வழங்கிட காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@VelmuruganTVK குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உருவாகும்.