இன்று (03.01.2026), சனிக்கிழமை, திருச்சியில் எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான திடலில், மாநாட்டுப் பந்தலுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வு எனது தலைமையில், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில், கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்த மாநாடு முத்தரையர் சமுதாயத்தின் அரசியல் அதிகார மீட்புப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைய உள்ளது. பந்தல்கால் நடப்பட்டதன் மூலம், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பான முத்தரையர் உறவுகளே! அரசியல் அதிகாரத்தை மீட்கும் நமது மாபெரும் இலக்கை அடைய, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் திரண்டு வந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்!
நம் சமுதாயத்தின் உரிமைக்கான குரலை ஒலிக்கச் செய்வோம்! வாருங்கள், வரலாறு படைப்போம்!
#முத்தரையர்_மாநாடு_2026
திவ்யப் பிரபந்தம் பாடிய 12 ஆழ்வார்களில், திருமாலின் வில்லின் அம்சமாக அவதரித்தவர் திருமங்கை ஆழ்வார். இவர் முத்தரையர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு, பல திருத்தலங்களில் உள்ள நடைமுறைகளும், குலமரபுச் சான்றுகளும் அசைக்க முடியாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன!
நிரூபண ஆதாரங்கள்:
திருவரங்கம் ஆயிரங்கால் மண்டபம்:
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்திற்கு, அவர் பிறந்த முத்தரையர் இனத்தின் பெயரால் "முத்தரசன்குறடு" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
திருவரங்கம் வேடுபரி விழா மரியாதை:
ஆண்டுதோறும் நடைபெறும் திருவரங்கம் வேடுபரி திருவிழாவில், திருமங்கை ஆழ்வார் முத்தரையர் வழிவந்த திரு. பெரியண்ணன் முத்தரையர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே அறங்காவல்துறையால் சிறப்பு மரியாதை செய்யப்படுவது, அவரது குல உரிமையை இன்றளவும் பறைசாற்றுகிறது.
திருமணங்கொல்லை குலமரபு:
திருமங்கையாழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில் உள்ள திருமணங்கொல்லை கிராமத்தில் பங்குனி மாதம் நடக்கும் வேடுபரி விழாவில், முத்தரையர்களுக்கு மட்டுமே பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது.
மேலும், இந்த விழாவில் திருமங்கை ஆழ்வாரை தூக்கிச் செல்லும் முழு உரிமையும் முத்தரையர்களுக்கு மட்டுமே என்பது குலமரபுச் சான்றாகத் திகழ்கிறது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் வேடுபரி நிகழ்ச்சியின் போதும், முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது, சுமார் 30 கி.மீ தூரம் வரை ஆழ்வாரைத் தூக்கிச் சென்று சேர்ப்பதை முத்தரையர்கள் மட்டுமே முழு உரிமையுடன் செய்து வருகின்றனர்.
இங்கேயே, "திருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம்" எனவும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இன்று நமது குல மன்னர் திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் திருநாளில், அவரது தொண்டையும், வீரத்தையும் முத்தரையர் குலத்தின் தொன்மையான உரிமைகளையும் போற்றுவோம்!
முத்திரையர்களின் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாட்டிற்காக திருச்சி வடக்கு மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப் பாளையத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
முத்திரையர்களின் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாட்டிற்காக திருச்சி வடக்கு மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப் பாளையத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
மாணவி ஷாலினி அவர்கள் காதலை மறுத்த காரணத்திற்காக பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மாணவி ஷாலினி படுகொலை, தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது!
குற்றவாளி முனியராஜ்-க்கு விரைந்து தண்டனையை பெற்றுதர அரசு முன்வரவேண்டும்!!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேதுபதி நகர் அருகே, 12ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அவர்கள் காதலை மறுத்த காரணத்திற்காக பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளிக்குச் செல்லும் ஒரு இளம் மாணவியின் பாதுகாப்பைக்கூட உறுதிசெய்ய முடியாதது,தமிழக காவல் துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. மாணவியை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் குற்றவாளி முனியராஜ் மீது. முன்னரே நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறியுள்ளது. காவல் துறையின் இந்தச் செயலற்ற தன்மையே, குற்றவாளி தைரியமாக இந்தக் கொலையைச் செய்ய வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில், காதலை மறுக்கும் இளம் பெண்களும், சிறுமிகளும் கொலை செய்யப்படுவது என்பது ஒரு தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க, அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளி முனியராஜ்-க்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுதர அரசு முன்வரவேண்டும். சம்பவம் நடந்த பகுதியின் காவல்துறை அதிகாரிகள் மீது, கடமையில் இருந்து தவறியதற்காகவும், மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காகவும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கொலைக்கு போதையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. எனவே, சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு, அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், அக்குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!
@CMOTamilnadu@tnpoliceoffl
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மாணவி ஷாலினி படுகொலை, தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது!
குற்றவாளி முனியராஜ்-க்கு விரைந்து தண்டனையை பெற்றுதர அரசு முன்வரவேண்டும்!!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேதுபதி நகர் அருகே, 12ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அவர்கள் காதலை மறுத்த காரணத்திற்காக பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளிக்குச் செல்லும் ஒரு இளம் மாணவியின் பாதுகாப்பைக்கூட உறுதிசெய்ய முடியாதது,தமிழக காவல் துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. மாணவியை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் குற்றவாளி முனியராஜ் மீது. முன்னரே நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறியுள்ளது. காவல் துறையின் இந்தச் செயலற்ற தன்மையே, குற்றவாளி தைரியமாக இந்தக் கொலையைச் செய்ய வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில், காதலை மறுக்கும் இளம் பெண்களும், சிறுமிகளும் கொலை செய்யப்படுவது என்பது ஒரு தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க, அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளி முனியராஜ்-க்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுதர அரசு முன்வரவேண்டும். சம்பவம் நடந்த பகுதியின் காவல்துறை அதிகாரிகள் மீது, கடமையில் இருந்து தவறியதற்காகவும், மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காகவும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கொலைக்கு போதையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. எனவே, சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு, அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், அக்குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!
@CMOTamilnadu@tnpoliceoffl
இன்றைய தினம்,13.11.2025, வியாழக்கிழமை - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 50க்கும் மேற்பட்ட முத்தரையர் கிராம சொந்தங்களை நேரில் சந்தித்து, வருகின்ற சனவரி 25,2026 திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள, முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினேன்!
செல்லும் இடமெல்லாம், இன்முகத்துடன் என்னை வரவேற்ற, சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
தென் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் சக்தி இருந்தும், அரசியலில் புறந்தள்ளப்பட்ட சமூகமாக இந்த முத்தரையர் சமூகம் இருந்து வருகிறது.
இந்த சூழலை மாற்ற கடந்த 2021ல் "தென்னகமே திரளும் வலையர் வாழ்வுரிமை மாநாடு" என்கின்ற பெயரில், மாநாடு நடத்தி இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வலையர் புனரமைப்பு வாரியத்திற்கான அரசாணையை பெற்று தந்தோம்!
இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதோடு,அரசியல் அதிகாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், "முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டினை" முன்னெடுத்துள்ளோம்.
சனவரி 25,2026 திருச்சியில் திரள்வோம்! வென்றெடுப்போம் முத்தரையர்களின் அரசியல் அதிகாரத்தை!!
#முத்தரையர்_மாநாடு_2026
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி!
பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் தலைமையிலான, தேசிய சனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதற்கு, உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, பீகார் மக்கள் நிலையான ஆட்சியின் மீதும், வளர்ச்சித் திட்டங்களின் மீதும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
வெற்றிக்காக உழைத்திட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்,அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் சரியான அரசை தேர்வு செய்து வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்றைய தினம் 15.11.2025, சனிக்கிழமை - தமிழர் தேசம் கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், திருமயத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்விற்கு தலைமையேற்று, அலுவலகத்தை திறந்து வைத்தேன். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினேன்.
வருகின்ற சனவரி 25,2026 அன்று திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு வெற்றிபெற உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளின் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
#முத்தரையர்_மாநாடு_2026
தமிழர் பெரும்பாட்டன் பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால்தலை வெளியிட வலியுறுத்திய தமிழக அரசுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!!
கிபி 6-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை தமிழ் மண்ணையும், மக்களையும் திறம்பட ஆட்சி செய்த முத்தரையர் பேரினத்தில், தன்னுடைய ஆட்சிகாலமே "பொற்கால ஆட்சி” என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றத்தக்க வகையில் நீர் மேலாண்மையிலும், நில மேலாண்மையிலும், சிறந்து விளங்கி, தன் அவைக்களத்திலே தமிழ் புலவர்களை வைத்து தன் போர்க்கள வெற்றிகளையெல்லாம் மெய்கீர்த்திகளை) தமிழ் வெண்பாக்களாக்கி தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றி, தன் வாழ்நாளில் தான் எதிர்கொண்ட 14 போர்களிலுமே வெற்றியை மட்டுமே பெற்று தமிழர்களின் வீரம், கொடை, கலைநயம், தமிழ்பற்று ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றிய தமிழர் பெரும்பாட்டன் பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி இருக்கின்ற மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கும் சமீபத்திய திருமண நிகழ்வொன்றில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முத்தரையர்களின் பக்கம் தன் பார்வையை திருப்பிய மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்...
17.11.2025, திங்கட்கிழமை - சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 40 க்கும் மேற்பட்ட முத்தரையர் கிராம உறவுகளை நேரில் சந்தித்து, முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினேன்!
சென்ற கிராமங்களில், எம்மின உறவுகள் அளித்த சிறப்பான வரவேற்பு என் இதயத்தை நெகிழச் செய்தது! என்மீது நீங்கள் காட்டிய அன்பும், மாநாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நம் இலக்கை நோக்கிய பயணத்தின் வெற்றிக்கு சாட்சி.
சாலை, குடிநீர், பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களின் அவல நிலையை நேரடியாகக் கண்டேன்.
இந்த நிலை மாற வேண்டும்! நமது முத்தரையர் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாலேயே, இன்னும் பல கிராமங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்த அவலத்தை நிரந்தரமாகத் துடைக்க ஒரே வழி, "அரசியல் அதிகாரம்!" வரும் சனவரி 25,2026, ஞாயிற்றுக்கிழமை அன்று, திருச்சியில் நடைபெறவுள்ள, முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் மாநாட்டில், குடும்பமாக கலந்துகொள்ளுங்கள்.
"ஒன்று திரள்வோம்! நம் குரல் அதிகார பீடத்தை அதிரவைக்கட்டும்!"
இன்றைய தினம் 18.11.2025, செவ்வாய்க்கிழமை - இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த, தமிழர்களின் வீரத்தை உலகறியச் செய்த மாபெரும் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
வணிகத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை, முழுக்க முழுக்க இந்தியர்களால், இந்தியப் பணத்தில், இந்திய உழைப்பால் உருவான சுதேசி கப்பல் கம்பெனி மூலம் ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்திற்கு எதிராக களமாடிய முதல் தமிழர்.
'வந்தே மாதரம்' என்ற முழக்கத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, காலில் இரும்புச் சங்கிலி பூட்டி, செக்கிழுத்து சித்திரவதைக்கு ஆளான தியாகச் செம்மல்.
வழக்கறிஞர் என்ற முறையில் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு, தொழிலாளர் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய முன்னோடி.
அவருடைய தியாகத்தையும், துணிவையும், நாட்டுப்பற்றையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, அவருடைய லட்சியப் பாதையில் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
சுதந்திர வேள்விக்குத் தம் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் தியாகிக்கு வீர வணக்கம்!
சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களின் பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
பைசன் காளமாடன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். சாதிய திரைப்படம் என பைசன் விமர்சிக்க பட்ட நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் முழுக்க முழுக்க திரைப்படத்தின் மீது கவனத்தை வைத்திருக்கும் படியாக கதைக்களம் அமைந்திருந்தது.
தென் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய பகையினால் ஏற்பட்ட மோதலுக்கும், சாதிய சிக்கலுக்கும் மத்தியில், தனது இலட்சியத்தை அடையும் ஒரு இளைஞனின் போராட்டத்தை, தமிழரின் வீரவிளையாட்டான கபடி மூலம் உணர்வுபூர்வமாக அனைவரது மனதிலும் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் விதைத்துள்ளார் என்றால் மிகையாகாது.
தாய்க்கு நிகரான சகோதரியின் அன்பையும், ஒரு தந்தையின் நம்பிக்கை எந்தளவிற்கு ஒரு பிள்ளை தனது லட்சியப் பாதையை அடைய உறுதுணையாக இருக்கும் என்பதனையும், இந்த திரைப்படத்தின் மூலம் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இந்த சமூகத்திற்கு காட்சிபடுத்தியிருக்கிறார்.
சாதிக்க துணிந்தால், எத்தனை பெரிய வேலி போட்டாலும் தன்னம்பிக்கையால் அதனை தகர்த்து விடலாம் என்பதனை மிக தெளிவாகவும், நேர்த்தியாகவும் பைசன் மூலம் காட்சி படுத்தியுள்ளார். இத்திரைபடத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பை தந்த சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களையும், படக்குழுவினரையும் மனதார வாழ்த்துகிறேன்.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற பாண்டியராஜக்களின் நெஞ்சுரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
#BisonKaalamaadan
#Bison
தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, பொது சேவை மனப்பான்மையுடன், மக்கள் பணி செய்து வந்தவர் @CPRGuv அவர்கள்.
அவருடைய மக்கள் பணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே ஒரு சாமானியன், குறிப்பாக ஒரு தமிழன் நாட்டின் உயர்ந்த பதவியினை அடையலாம் என்பதற்கு இது ஒரு வரலாற்று சான்றாகும்.
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
#புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், #மேனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயதில் முத்தரையர் மக்களின் வழிபாட்டு உரிமையை பெற்று தரககோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மேலாம்பட்டி ஊர்பொதுமக்கள் மற்றும் #தமிழர்_தேசம்_கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
@KKSelvakumaroff