விஜய் என்ன அவதாரமா?
சமூக வலைத்தளத்தில் களமாடும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற கழக உடன்பிறப்பு ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், விஜய்யை அவர் விமர்சித்து விட்டார் என்ற புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டது ஈவு இரக்கம் துளியுமற்ற தவெக அரசின் காவல்துறை.
மருத்���ுவ பரிசோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி தங்கமணியை கொடூரமாக அலைக்கழித்திருக்கிறார்கள். அவருடைய நிலையைப் பார்த்து நீதிமன்றமே ஜாமீன் வழங்கி உள்ளது.
முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு விஜய் பேசிய பீப் வார்த்தைகளை விட மோசமாக இன்னொருவர் விமர்சனம் பண்ணி விட முடியுமா?
விமர்சனமே செய்யக்கூடாது என்கிற அளவுக்கு விஜய் என்ன அவதாரமா?
ஆணவத்தால் ஆடிய���ர்களின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். ரொம்ப ஆடாதீங்க..
குற்றவாளிகளின் கூடாரம் தவெக.
மேடை கிடைச்சா போதும் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஊழலற்ற அரசியல்னு வாய்கிழிய தத்துவம் பேசுறதும், நிஜத்துல தப்பு பண்றவங்களை எல்லாம் தவெக வாஷிங் மெஷினில் போட்டு தங்களோட தூய்மையான கட்சி நிர்வாகியா மாத்துறதும் தான் விஜய்யோட கொள்கையா? இவங்களோட இந்த இரட்டை வேடத்தையும், இதுக்குத் துணை போற காவல்துறையையும் நாங்க வன்மையா கண்டிக்கிறோம்.
ஈரோடு பவானியில 8 கிலோ குட்கா, 3 கார்கள், பணத்தோடு தவெக செயற்குழு உறுப்பினர் அருண் என்பவரைப் போலீஸ் கையும் களவுமாகப் பிடிச்சிருக்காங்க. இதே அருணை கடந்த ஒன்றரை டன் குட்கா கடத்துனதுக்காக திமுக ஆட்சி காலத்துல குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள வச்சாங்க. அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் பின்னணி கொண்ட ஆளுக்கு தவெக-வுல பெரிய பொறுப்பு கொடுத்ததே தப்பு.
அதைவிட கொடுமை என்னன்னா, இப்போ அவர் தவெக நிர்வாகி ஆயிட்டாருங்கிற ஒரே கார��த்துக்காக, விஜய் கீழ இயங்குற காவல்துறை அவரை இரவோடு இரவா ஸ்டேஷன் பெயில்ல வெளிய விட்டுருக்கு.
சட்டம் யாருக்காக வளைக்கப்படுது? ஒன்றரை டன் குட்கா கடத்துன ஒரு பழைய குற்றவாளி, மறுபடியும் குட்காவோடு மாட்டும் போது எப்படி இரவோடு இரவா ஸ்டேஷன் பெயில் கொடுக்க முடியும்? இதுக்கு பேருதான் சட்டம் தன் கடமையைச் செய்யுறதா? இல்ல அரசியல் செல்வாக்கா?
விஜய்யோடபோதை ஒழிப்பு கொள்கை இதுதானா? போதைப்��ொருளை ஒழிப்போம்னு மேடையில உறுதிமொழி எடுக்குறீங்களே விஜய் அவர்களே, இப்போ ��ங்க கட்சி நிர்வாகியே போதைப்பொருள் கடத்திட்டு வந்து மாட்டியிருக்காரே இதுக்கு உங்க பதில் என்ன? உங்களால ஒரு ...... புடுங்க முடியாதுன்னு மக்கள் பேசுறது நிஜம் தானா?
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்களை உங்க கட்சி வாஷிங் மெஷினில் போட்டுப் புனிதர்களாக்கப் பார்க்காதீங்க. பொதுமக்களோட உயிரோடு விளையாடுற போதைப்பொருள் கடத்தல்காரங்களுக்கு ஆதரவா இருக்குற தவெக-வின் இந்த அரசியலையும், க���வல்துறை காட்டியிருக்கிற இந்த மெத்தனப்போக்கையும் சும்மா விட முடியாது. பிணையில் விடப்பட்ட அருண் மீது உடனே கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு மறுபடியும் சிறையிலடைக்க வேண்டும்.
தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள் ஆமா, நீங்க என்ன டாஷ் புடுங்கினீங்கன்னு உங்க நடவடிக்கையிலேயே தெரியுது.
100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போ��்டு பண்ணியிருக்காங்க
ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்சஅடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்���மிட்ட பகல் கொள்ளை.
முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன டாஷ் பண்ணிட்டு இருக்கீங்க?
அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க.
தாய்மாமனின் தடியடி! .
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோர�� பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு.
நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா?
முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!
டெல்லியிடம் உரிமைகளை பறிகொடுக்கும்
முதுகெலும்பற்ற மு��ல்வர்!
கடந்த தி.மு.கழக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை முதலமைச்சரே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்ததோடு, இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திலும் நடத்தி வந்தது.
ஆனால், தற்போததைய த.வெ.க அரசோ மாநில உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அடி பணிந்து துணைவேந்தர் தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தவும், அதில் ஒன்ற��ய அரசின் UGC சார்பிலான உறுப்பினரையும் சேர்க்கத் துடிக்கிறது.
முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களையும் மாநில உரிமையையும் அடமானம் வைத்து, நம்முடைய பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் அடமானம் வைக்கும் முதுகெலும்பில்லாத கோழைதான் விஜய் என்பதை வரலாறு நினைவில்கொள்ளும்!
#Wingகுரல்
பாலியல் வெறிக் கழகம்!
பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள், தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது உங்கள் கட்சியின் யோக்கியதையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கியவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது முதல், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான புகார்கள் வரை, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து நீங்கள் காட்டிவரும் அலட்சியம் உங்கள் போலித்தனத்தின் உச்சம்.
கரூரில் திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’, பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான்; இது வெறும் தொடக்கம் மட்டுமே.
சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக, உங்கள் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெண்களைச் சீண்டும்போது மவுனம் காப்பது, இந்தத் தவறுகளை நீங்களே மறைமுகமாக ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.
மிஸ்டர் விஜய், இனிமேல் இந்த அராஜகங்களை எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்! பெண்களைப் பாதுகாப்பதில் திராணியற்று, குற்றவாளிகளை அரவணைக்கும் உங்கள் இந்த ‘பாலியல் வெற்றிக் கழக’த்தின் அட்டகாசம் தொடர்ந்தால்,
இன்று கரூரில் ரமேஷுக்குக் கிடைத்த அடி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தவெக-வினருக்குத் தேடி வரும்.
மக்கள் வீதிக்கு இறங்கிப் பாடம் புகட்டத் தொடங்கிவிட்டார்கள்; உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களின் கிர���மினல் செயல்களை நிறுத்தத் திராணியில்லை என்றால், மக்களின் கோபத்திற்கு நீங்களே பலியாவீர்கள்!
#பாலியல்_வெறிக்_கழகம்!
#ஆலோசனை_கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தோவாளை வடக்கு ஒன்றியம், ஞாலம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது அந்தரபுரம் சமூக நலக்கூடத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.பூதலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் ��ிரு.பிராங்களின் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்து கழக வளர்ச்சி பணிகள் மற்றும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய கள பணிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினேன். மேலும் ஞாலம் ஊரா��்சி பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஊராட்சி திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு.கேட்சன், முன்னாள் ஞாலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சதீஷ், ஒன்றிய பொருளாளர் திரு.கண்ணன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர��வாகிகள், BLA-2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
@arivalayam
@mkstalin
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari
தவெக அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில்,
இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
கல்விக் கூடங்கள் என்பவை அறிவை வளர்க்கும் ஓர் இடம், அவை எதிர்காலத் தூண்களை உருவாக்கும் புனிதமான இடங்கள். ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரு���் சில அரசியல் கூத்துகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளன.
தவெக தலைவர் பிறந்தநாள் என்ற பெயரில், தவெகவினர் பள்ளிகளுக்குள் நுழைந்து, பிஞ்சு மாணவர்களைத் தங்களின் சுயவிளம்பரத்திற்காகப் பயன்படுத்தி வாழ்க கோசம் போட வைப்பது ஆபாச வரிகள் கொண்ட பாடலுக்கு நடனம் ஆட வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்னும் விவரம் தெரியாத பிஞ்சு உள்ளங்களில் இப்போதே உங்களின் அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?
தவெகவின் அமைச்சர் ஒருவர் கல்வி கற்கும் இடத்தில், ஆபாச வரிகள் கொண்ட சினிமா பாடல்க���ுக்கு மாணவர்களை நடனமாட வைப்பதுதான் நீங்கள் கற்றுக்கொடுக்கும் ஒழுக்கமா? உங்கள் அரசியல் புகழைப் பாடுவதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தான் உங்களுக்குக் கிடைத்த பகடைக்காய்களா?
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது நல்ல ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்கத்தான். ஆனால், ஊரான் வீட்டு நெய்யில் தங்கள் சுய புகழைப் பாட நினைக்கும் இந்த கேடுகெட்ட அரசியல், மாணவ���்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலாகும்.
பள்ளிக் கல்வித்துறை இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளி வளாகங்களுக்குள் எந்தவொரு அரசியல் கட்சியின��� தலைவரையோ, நடிகரையோ முன்னிறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. மாணவர்களைத் தங்கள் அரசியல் சுயலாபத்திற்குப் பயன்படுத்தும் தவெகவினர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இனிமேலும் பள்ளிக்கூடங்களை அரசியல் வியாபாரக் களமாக மாற்ற நினைத்தால், தமிழ்நாட்டு பெற்றோர்களும் பொதுமக்களும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிற��ம்!
#TVKFails
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இ���்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
-மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்
முதலமைச்சரை சந்திக்க முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்பதை மக்களுக்கு அவர் விளக்க வேண்டும்.
- தேமுதிக பொதுச் செயலாளர் திருமிகு @PremallathaDmdk அவர்கள்
#TVKFails
புதுமையான ஆட்சி! புதுமையான ஆட்சி! என சொன்னீங்க ஆனா புஷ்பா பட பாணியில ஆட்சி நடந்துட்டு இருக்கு!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly#TVKFails
'மாற்று அரசியல்' என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
நேற்று உங்கள் தனிப்பட்ட ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பொறுப்பைக் கொடுத்து facepalm ஆனது.
இப்போது உங்களின் Rolls-Royce கார் தொடர்பான வரி ஏய���ப்பு வழக்கில் உங்கள் சார்பில் வாதாடிய Advocateக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த 'Advocate General' பதவியைத் தாரை வார்க்கப் பார்க்கிறீர்கள் என்ற தகவல் மிகக் கேவலமானது.
உங்களுக்குச் சேவை செய்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தமிழ்நாட்டின் முக்கியப் பதவிகளைத் தூக்கிக் கொடுப்பதற்கு இது என்ன உங்கள் ரசிகர் மன்றமா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVKFails
உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா? இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்ச��.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#TVKFails
தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெருபான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. 65% மக்களால்
நிராகரிக்கப்பட்ட தவெக ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சம���க நம்பிக்கை குறைந்து வருகிறது.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly #TVKFails
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#DMK
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட ���ுன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்த�� 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமைய���னதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நம���ு கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான�� 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சி��ாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட���டேன். மீண்டும் வெல்வோம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
#DMK
"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எ���ிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே ��ொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்���ுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி...