சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Vilathikulam DMK MLA G.V. Markandayan was arrested next day for his on stage speech, when are you are going to arrest this pagal kudikaran MLA/Deputy Speaker for physical assault and threatening to kill entire family @CMOTamilnadu
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?