#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!
இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!
பெற்ற உரிமைகளைக் காப்போம்!
மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்!
திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!
#JusticeParty
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே...
ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.
இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள்.
ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள்
இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
எங்களால் போராட முடியல 💔
எங்களுக்கு தெம்பும் இல்லை
நீதி இல்லைனாலும் பரவால்ல சார் எங்க அண்ணன் உடலை தாங்கன்னு அந்த குடும்பம் கெஞ்சியப்போ
தவெக நண்பர்களே உண்மையாவே உங்களுக்கு கொஞ்சமாச்சும் உறுத்தி இருக்கனும்
ஆனா உங்களுக்கு உறுத்தாது
காலம் எல்லாத்தயும் பார்த்துகிட்டு தான் இருக்கு
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more.
You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
என்ன ஒரு தைரியம்? எப்படி இந்த துணிச்சல்?
அதிகாரிகளுக்கு தெரியாமல், அரசிடம் முன் அனுமதி பெறாமல் தேனி மாவட்டத்தின் சோத்துப்பாறை அணை நீரை தவெகவினர் தன்னிச்சையாக திறந்ததாக வெளியாகியுள்ள காணொளியும், எழுந்துள்ள குற்றச்சாட்டும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையையும், சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கான பாசனத் தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் சோத்துப்பாறை அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரம் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மட்டுமே உள்ள நிலையில், எதன் அடிப்படையில் தவெக கட்சியினரால் அணை திறக்கப்பட்டது?
அணையின் நீர்வரத்து, நீர் கையிருப்பு, சமூகத்தின் நீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அரசின் முன் அனுமதி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரமும் துணிச்சலும் தவெகவினருக்கு எப்படி வந்தது? அரசு அதிகாரிகளை விட, தவெக கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் அதிகாரம் மிக்கவர்களா? தனது கட்சியினரின் ஆணவத்தை திரு. @TVKVijayHQ அவர்கள் இனியும் கண்டுகொள்ளாமல் இருந்தால், அரசு இயந்திரம் முடங்கி விடும்!
எனவே, உடனடியாக இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உறுதி செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது அணை பாதுகாப்பு சட்டம், 2021 கீழ் வழக்குப்பதிவு செய்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#BREAKING | “ஆபாச பதிவுகளை பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?” -காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, ஒரு பதிவை தவிர மற்ற அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு விட்டதாகவும், ஆபாச பதிவும் நீக்கப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த பதிவுகளை பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆபாச பதிவுகளை பதிவிடுபவர்களுக்கு எதிராக எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
#SunNews | #MadrasHC | #TNPolice