தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் (2026–27) அறிமுகக் கூட்டம் இன்று இனிதே நடைபெற்றது.
அரசுத் துறைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு சிறப்புடன் செயல்படுவோம்.
#EstimatesCommittee
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு, தமிழர் பெருமைமிகு பேரரசர் இராஜராஜ சோழனின் சதய விழா, இன்று தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மரபும், தமிழ்மொழியின் பெருமையும் போற்றும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழர் கட்டிடக்கலையின் உச்சமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பி, தமிழர் பெருமையை உலகறியச் செய்த மாமன்னரைப் போற்றி வணங்குவோம்!
தமிழர் வரலாறு நம் பெருமை! தமிழ் மரபு நம் அடையாளம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர் பெருமை!
@CMOTamilnadu | @TVKVijayHQ
இடைத்தேர்தலில் தீய சக்தியையும், தீர்ந்து போன சக்தியையும் சூரசம்ஹாரம் செய்த ஆருயிர் தலைவருக்கு வாழ்த்துகள்!
வெற்றி வேல்! வீர வேல்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு தளபதி விஜய் தலைமையிலான மக்களாட்சியில் இனி மன்னரின் வாரிசுகள் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்,பார்த்துவிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும் .
நேற்று தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அருமை அண்ணன் CTR நிர்மல் குமார் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்களான அருமை நண்பர்கள் வழக்கறிஞர் கோவை விஜயராகவன் ,வழக்கறிஞர் கோவை ஆனந்தராஜ் ,வழகறிஞர் அண்ணன் சங்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் மற்றும் நானும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட மகிழ்ச்சியான தருணம் .
உண்மையை உரக்க சொல்லும் உன்னை காணும் போது அவர்களுக்கு ஏற்படும் பயமே உன் மீது அவதூறுகளை வீச வைக்கிறது.
விமர்சனங்களை தாங்கிக் கொள்பவனே
சிறந்த புரட்சியாளன் 🔥
பேரன்பிற்குரிய பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று (01-09-2026) முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது திருக்கோயில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.
அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம்.
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
Warm greetings to all the devotees and public!
With effect from 01-09-2026, based on the existing court directions and with the objective of ensuring a peaceful and serene atmosphere for devotees to worship and have darshan, the use and carrying of mobile phones has been restricted in 52 major temples under the administrative control of the Hindu Religious and Charitable Endowments Department, Tamil Nadu.
It may be noted that mobile phones are already prohibited in Palani, Tiruchendur, Madurai and Rameswaram temples.
This restriction has been introduced as incidents of devotees and visitors taking photographs and recording videos of the deities and idols inside various temples have been occurring repeatedly.
Therefore, devotees are kindly requested to leave mobile phones with camera facilities in their vehicles or in their rooms, wherever possible, before visiting the temples.
Arrangements have also been made to provide secure locker facilities at the temples for keeping mobile phones.
Necessary arrangements have been made to assist devotees in case of emergencies, with temple officials and security personnel available to provide the required assistance.
It has also been clarified that this restriction does not apply to ordinary mobile phones without camera facilities.
The cooperation of all devotees is essential to create a healthy, peaceful and spiritually conducive atmosphere for worship in our temples.
Let us all work together to preserve the sanctity and serenity of our temples.
We sincerely seek the cooperation of everyone.
@CMOTamilnadu | @TVKVijayHQ