Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
எப்போதும் உங்களை தடுக்க தடைக்கற்கள் நிரம்பிக்கிடக்கின்றன..
அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல வழக்கமான ஒன்றே!!
எல்லோரும் போல் ரசிகனாக
தம்பியாக
ஜனநாயகன் வரும் நாளே பொங்கல் என
காத்திருக்கிறேன் அண்ணா… @actorvijay#JanaNayagan#PongalPostponed
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻
@actorvijay
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.
'பெண்கள் நலனைப் போற்றும் அரசு, பெண்களுக்கான அரசு' என தொடர்ந்து விளம்பரம் செய்துவரும் திமுக அரசு, உண்மையிலேயே பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது? இன்று உரிமைக்காகப் போராடிவரும் பெண் செவிலியர்களை மோசமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு. இதுதான் பெண்கள் நலனை நீங்கள் காக்கும் விதமா?
'தொகுப்பூதிய பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' உட்பட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுகிறார்கள் செவிலியர்கள். தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றியது திமுக. இன்று, ஜனநாயக அற வழியில் அவர்கள் போராடும்போது, இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தைக் கலைத்தது, பெண்கள் என்றும் பார்க்காமல் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வது என சர்வாதிகாரத்தின் முழு அடையாளமாய் மாறியிருக்கிறது மக்கள் விரோத திமுக ஆட்சி.
''நாங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைங்க இல்லையா, உங்க அக்கா தங்கச்சி இல்லையா'' என்று கைதான ஒரு செவிலியர் சகோதரியின் அழுகுரலைக் கேட்கும்போது நெஞ்சம் கனக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசுகிறார். இத்தகைய பொறுப்பற்ற திமுக அரசுக்கு எனது வன்மையான கண்டனம். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்களோடு துணை நிற்போம்.
செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்ட்டோ-ஜியோ) என அனைவரும் இன்று தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். அந்தளவிற்கு இந்த திறனற்ற திமுக ஆட்சி, அவலங்களின் சாட்சியாக மாறியிருக்கிறது.
அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராட்ட முடிவை நோக்கித் தள்ளினால் மாநில நிர்வாகம் எப்படித் திறம்பட நடக்கும்? மக்களுக்குப் போய் சேரவேண்டிய நலத்திட்டங்கள் எப்படிப் போய் சேரும்? இதைப்பற்றி எல்லாம் விளம்பரங்களிலும், புதுப்புது டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் திமுக அரசுக்கு அக்கறையிருக்கிறதா?
அரசு ஊழியர்களின் எதிர்ப்பையும், பொதுமக்களின் கோபத்தையும் ஒருங்கே சம்பாதித்துள்ள இந்த திறனற்ற திமுக அரசுக்கு மக்கள் அனைவரும் இணைந்து தக்க பாடம் புகட்டுவார்கள்.
பெண்மையைப் போற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு, கர்ப்பிணி செவிலியர்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?
இதுதான் நீங்கள் சொன்ன விடியலா @mkstalin அவர்களே? நிறைமாதக் கர்ப்பிணி செவிலியர்களைக் கூட வேலைக்கு வரச் சொல்லி வற்புறுத்துவதும், ஊதியம் கேட்டால் நீதிமன்றத்திற்கு அலையவிடுவதும், பணி நிரந்தரம் கேட்டால் திமிராகப் பதில் சொல்வதும் தான் உங்கள் 'திராவிட மாடல்' ஆட்சியா?? செவிலியர்களின் கண்ணீர் இந்த ஆட்சியை நிச்சயம் வீழ்த்தும்!
முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா உள்ளிட்ட தம் ஆதரவாளர்களுடன் இன்று பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?
ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.
சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFOQSf
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ் வாழ்க!
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்!
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFPoHN
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFOQSf
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.