சுதந்திர தின விழாவில் ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக தேசிய கொடியேற்றும் CM விஜய். இதற்கான முதல் ஒத்திகை 3 கட்டங்களாக சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது
#CMJosephVijay#ThanthiTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
திண்டிவனம் தொகுதி - மரக்காணம் ஒன்றியம், ஆச்சுக்காடு கிராமத்தில் மயானப்பாதை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இன்று (08.08.26) ஆச்சுக்காடு கிராமத்திற்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று, மயானப்பாதைக்கான இடத்தை ஆய்வு செய்தோம்.
மயானப்பாதை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், மழைக்காலத்திற்கு முன்பாகவே இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
தன்னை காண காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை கண்டதும் உடனே காரை நிறுத்த சொல்லி நடந்து சென்று சந்தித்த முதலமைச்சர் விஜய்.. தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் முடிந்து முதலமைச்சர் விஜய் வெளியே வந்த போது எடுக்கப்பட்ட காட்சி..!
#Chennai | #CMVijay | #Delimitation | #PolimerNews
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு.ரஜ்னிஷ் பதியில், திரு.ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே.முத்துக்குமார், திரு.ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ரவீக்குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி.சுமதி, திருமதி எஸ்.அல்லி, திருமதி சி.திருமகள், திரு.சண்முகம் கார்த்திகேயன், திரு.முருகேசன் பாலுச்சாமி, திரு.என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 6.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஞா.ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை
ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.
ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.
பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டலில், டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளோடு இன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் அவர்கள், திரு. செங்கோட்டையன் அவர்கள், திரு. CTR. நிர்மல் குமார் அவர்கள், திரு. வெங்கட்ரமணன் அவர்கள், திரு. ராஜ்மோகன் அவர்கள், திரு. V. காந்திராஜ் அவர்கள் மற்றும் திரு. R. வினோத் அவர்களுடன் பங்கேற்றேன்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டன. இந்தக் கூட்டம் குறித்த விவரங்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1/2
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (6.8.2026) எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay