📢 தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – முக்கிய அறிவிப்பு
📅 19.08.2026
📍 இடம்: சிவபாக்யா மஹால், ஆரப்பாளையம், மதுரை
உயர்மட்ட குழு கூட்டம் மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் மக்கள் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
🔴 முக்கிய முடிவு:
🌿 மேகமலை பகுதியில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களை, மாற்று வாழ்விட ஏற்பாடுகள் செய்து கொடுக்காமல் அங்கிருந்து வெளியேற்றக் கூடாது.
மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்விட உரிமையையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வதை த���ன்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
⚖️ நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மக்களை உடனடியாக அகற்றாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய மாற்று ஏற்பாடும், பாதுகாப்பான வாழ்விடமும் அரசு வழங்க வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு.
📢 12.09.2026 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
🕒 மாலை 3.00 மணி ம���தல் இரவு 8.00 மணி வரை
மேகமலை மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்கவும், மாற்று ஏற்பாடின்றி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
👥 இந்த முக்கிய கூட்டத்தில்
• மாநில பொறுப்பாளர்கள்
• மாவட்ட பொறுப்பாளர்கள்
• நகர பொறுப்பாளர்கள்
• ஒன்றிய பொறுப்பாளர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
குற���ப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்காக…
மக்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களின் எதிர்காலத்தை அரசு சிந்திக்க வேண்டும்!
✊ மக்களுக்காக குரல் கொடுப்போம்!
மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாப்போம்!
கே.சி. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
உதயநிதி ஸ்டாலின் கைது – ஜனநாயகத்தின் வெற்றியா? அதிகாரத்தின் வெளிப்பாடா?
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டு அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருத்து வேறுபாடுகளை கைது மூலம் முடிவுக்கு கொண்டு வர முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல.
அரசு நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று – அதிகாரம் நிரந்தரமல்ல; ஆனால் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் நிரந்தரமானவை. கருத்தை எதிர்கொள்ள வேண்டியது கருத்தால்; அதிகாரத்தால் அல்ல.
அதேவேளை, உதயநிதி ஸ்டாலின் உள்���ிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளையும் செயல்பாடுகளையும் அரசியல் முதிர்ச்சியுடனும் சமூகப் பொறுப்புடனும் வெளிப்படுத்த வேண்டும். மக்களைப் பிரிக்கும் வார்த்தைகளை விட, மக்களை ஒன்றிணைக்கும் அரசியலே காலத்தால் மதிக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு தேவை பழிவாங்கும் அரசியல் அல்ல; பொறுப்பான நிர்வாகம்.
அச்சுறுத்தும் அதிகாரம் அல்ல; அனைவருக்கும் சமமான நீதி.
கைது அரசியல�� வெல்லாது; மக்களின் தீர்ப்பே இறுதியில் வெல்லும்.
– கே.சி. திருமாறன் ஜி
நிறுவனர் தலைவர்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
மேலூர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது!
இன்று மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே, முக்குலத்தோர் சட்டப்பேரவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெர��ம் விழாவில், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான என் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்
Kcதிருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
பாரதிய ஜனதா கட்சியில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாண்பு இருந்தது ஒரு காலத்தில் இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்த கட்சி வழிநடத்தி இருக்கிறார்கள் ஆனால் இன்ற��� இருக்கக்கூடிய பாஜக தலைமை கட்சியை வளர்ப்பதற்கோ கட்சியை முன்னேற்றுவதற்கு எந்த சிந்தனையும் இல்லை ,
ஒரு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாத தலைமை தான் இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது
தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசத்தின் உன்னத தலைவன் திரு நரேந்திர மோடிஜியின் கரத்தை வழுப்படுத்த மட்டுமே நாங்கள் இந்த கூட்டணியில் உள்ளோம் வேற எந்த ஆதாயமும் சுயநலமும் இல்லை இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணி அங்க வைத்தோம் என்றால் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் தெய்வீகம் நிலைக்கப்பட வேண்டும் சனாதன தர்மம் மேலோங்க வேண்டும் இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோசமாக ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம் ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இருக்க கூடிய தலைமையோ அவர் எங்கிருந்து வந்தார் அவருடைய சித்தாந்தம் என்ன அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவு தான் இன்று சட்டமன்றத்திலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கேட்டு பெற்று நின்ற வே���்பாளர்கள் அனைவரையும் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தவர் தற்போதைய மாநிலம் தலைமை
இவர்களை பாஜக தலைமை மாற்றவில்லை என்றால் தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளை பின்தங்கி சென்று விட்டது மேலும் கட்சி அழியாமல் இருக்க பாஜக மாநில தலைமை மட்டுமல்ல தற்போது மாநிலத்திற்கு உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும், தேர்தல் என்று வந்துவிட்டால் இவர்கள் தான் நிக்க வேண்டும் ���வர்கள் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள் தான் தற்போது இருக்கக்கூடிய மாநில பொறுப்பாளர்கள் அடிப்படை தொண்டன் அடிப்படை தொண்டனாகவே இருக்க வேண்டும், திமுக அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவில் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை மேலும் எத்தனையோ இளைஞர்கள் எங்களை போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பு அக்கறையும் கொண்டிருக்கிறோம் நான் 2016 ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன் ஆனால் இவர்கள் என்னை ஒரு காலத்தில் மதித்ததில்லை பல்வேறு கட்சிக்கு போய் திரும்பி வந்தவர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவதும் எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனம் படுத்துவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது. தற்போது வர���க்கும் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம் என்னை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதாவது நானாக இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள், பாஜக விட்டு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு இது போன்ற செயல்கள் தான் முக்கியமான காரணம்,
நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியா�� மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவன் என்ற முறையில் அனைத்து சமுதாயத்திற்கும் நற்காரியங்களுக்கும் அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு அவர்களுக்காக வாதாடி போராடிய ஒருவன் என்ற முறையில் தேசிய தலைமையான திரு நரேந்திர மோடி ஜி, திரு
பி எல் சந்தோஷ், ஜி திரு அமிட்சா ஜி ,அவர்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றோம், பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண்டும் இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை, பாஜக கட்சியின் சித்தாந்தத்தை என்னை போன்றவர்கள் கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள் பாஜகவை வளர்ப்பதற்கு உயிரை கொடுத்து ரத்தத்தை ��ிந்தி வளர்த்து இருக்கிறோம் எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது நாங்கள் யார் என்பது. 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்து சனாதன தர்மத்திற்காக போராடிய வருகின்ற ஒருவன் நான் ஆனால் இன்று இருக்க தலைமை எங்கிருந்து எந்த சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தேசிய தலைமை சிந்திக்க வேண்டும்.
Kc. திருமா��ன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக்
ஆர் எஸ் எஸ் இன் ஸ்தாபகர் திருமிகு கேசவ பலராம்
ஹெட் கேவார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை நாவல் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நான் இதில் கலந்துகொண்டு திரு கேசவக பலராம் ஹெட் கேவாரின் நினைவுகளை பேசி மகிழ்ந்தோம் உடன் மதுரை மாவட்ட
காரிய கருத்தாக்கல் அதிகமானோர் கலந்து கொண்டனர்
Kc திரு மாறன் ஜி.B.pharm
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்
சென்னை அப்போ���ோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்து தர்ம போராளி பாசமிகு அண்ணன் திரு எச் ராஜா அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தேன் அவர் என்னிடம் பத்து நிமிடம் உரையாடினார் மிக விரைவில் களப்பணிக்கு வருவேன் என்று அண்ணன் சொல்லியபோது மணமகிழ்ச்சி ஏற்பட்டது அவர் குடும்பத்தாரையும் சந்தித்து நலம் விசாரித்தேன் அவர் பூரண நலம் அடைந்ததை என் மூலம் உங்களுக்கு சொல்வதில் பெருமை அடைகிறேன்
த���ன் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாடு.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் பாசமிகு சகோதரர் மக்களால் அண்ணாமலையார் என்று அன்போடு அழைக்கப்படும் என் அன்பு அண்ணன்
தி���ு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் என் அண்ணன் மகள் திருமணத்திற்கு வர முடியாத சூழலில் இன்று எனது இல்லத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார் அண்ணன் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..
சென்னை மதுராந்தகம் பகுதியில் நடக்க இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பொழுது. தமிழக மக்களுக்கு பாரதத்தின் உன்னத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கலந்து கொள்ள உள்ளார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் . தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அரசியல் வரலாற்றை திருப்பி போடும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தேசத்தை நேசிக்க கூடிய அனைத்து தேச பக்தர்களும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் தேசம் காப்போம் தமிழகம் மீட்போம் ஜெய்ஹிந்த்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாடு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பாசமிகு அண்ணன் மதிப்புக்குர���ய திரு டிடி வி. தினகரன் அவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இணைந்ததற்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் வெற்றி நிச்சயம் வெல்வதும் நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.நிதின் நபின் ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் என் சார்பாகவும் , தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்
திரு.நிதின் நபின் அவர்களின் தேசப் பணியும், மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறோம்
சமீபத்தில், மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டுமென்பதை கோரிக்கையாகக் கொண்டு, தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட திரு.பூரணச்சந்திரன் அவர்களது இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மேலும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டேன்.
ஓம் சாந்தி..!
இந்திய தேர்தல் வரலாற்றில் யாரும் கண்டிராத வெற்றி பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் இது ஜனநாயகத்தின் வெற்றி பல ஆண்டுகளாக போலி வாக்காளர்களை வைத்து நாங்கள் வெற்றி அடைந்து விட்டோம் என்று மார்தட்டிய கூட்டத்திற்கு எஸ் ஐ ஆர் மூலம் போலி வாக்காளர்களை நீக்கி ஜனநாயகத்தின் நிலைநாட��டி இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம் ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் எஸ் ஐ ஆர் பணியானது பல இடங்களில் தொய்வாகவும் பல இடங்களில் ஆளுங்கட்சியாலும் பல இடங்களில் பி எல் ஓ இல்லாமலும் போலித்தனமான வேலை நடந்து கொண்டிருக்கிறது பீகாரின் போல் தேர்தல் ஆணையம் வேலை செய்தால் தமிழ்நாட்டில் இந்த திராவிட கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி விடலாம் எனக்கு தெரிந்த அளவில் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதியில் 80 ���தவீதம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் குறிப்பாக மதுரை மேற்கு மற்றும் கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போலி வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையம் இந்த இரண்டு தொகுதிகளையும் உன்னிப்பாக கவனித்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்கக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாபெரும் வெற்றி அடையும் என்பதற்கு ஆகச் சிற��்த உதாரணம்தான் பீஹார் வெற்றி.
இந்த வெற்றிக்கு பெரும்பாடுபட்ட பாரதத்தின் உன்னத பிரதமர்
திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் வீகம் வகுத்துக் கொடுத்த திரு அமித்ஷா ஜி அவர்களுக்கும்திரு. நிதீஷ் குமார் அவர்களுக்கும் மேலும் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தோழமை இயக்கங்களுக்கும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.