கழக பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் திரு. #TTVDhinakaran அவர்கள்,
தினமலர் நாளிதழ் எடிட்டர் திரு.#பாலாஜி அவர்களின் 60 ஆம் கல்யாணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்காள்.
#AMMK
இன்று காலை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில், காய்கறி வாங்குவதற்காக வந்து நிற்கும் இரண்டு போலீஸ் வாகனங்கள் இவை.
அதிகாரி வீட்டுக்கு காய்கறி வாங்க போலீஸ் வாகனம் கொடுக்க முடிகிறது. அரசுப் பணியை செய்ய டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு கொடுக்க வாகனம் இல்லையா ?
இதை எதிர்த்து கேட்டால் தண்டனையா ?
இதுதான் திராவிட மாடல் நிர்வாகமா ? @tnpoliceoffl@Chief_Secy_TN@CMOTamilnadu
It has been 100 days since Savukku Shankar was attacked on 24.3.2025 by Selva Perundakai under the leadership of Vanisree Vijayakumar. The puppet chief minister has not taken any action. Stalin is afraid of a rowdy.....
அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே இருக்கக்கூடிய Sports Development Authority of TamilNadu என்ற அமைப்பில், முக. ஸ்டாலினின் பினாமி ராஜாசங்கரின் மகனும், சிகப்பு பூதம் நிறுவனத்தில் உதயநிதியின் பார்ட்னரும் மட்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஏன் ?
குடும்பமாக சேர்ந்து கொள்ளையடிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா ? @mkstalin@Udhaystalin
https://t.co/D1nnLhmm7D
சென்னை தரமணியில் சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் கார் விழுந்து விபத்து.. நியாயம் கேட்டு கதறி அழுத கார் உரிமையாளர்..
#Chennai | #Car | #Road | #PolimerNews
இதற்கு கட்சித் தலைவர் @NainarBJP அனுமதி கொடுத்திருக்கிறாரா ? அவரிடம் தகவலாவது சொன்னீர்களா ? @annamalai_k
உங்கள் கட்சிக்கு தமிழகத்தில் யார் தலைவர் என்று தெளிவுபடுத்தவும் @AmitShah
உடல் உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் இந்நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்றி, சில முதலாளிகளின் கோரப்பிடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கம், ஒன்றுகூடி ஆர்ப்பரித்து போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த இந்த மே தினத் திருநாள் ”உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
“உழைப்பிற்கு என்றும் உயர்வு” என்ற வாக்கை மனதில் நிலை நிறுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும் – வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதலமைச்சரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார்.
இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர்.
தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.
2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது - மீனவர்களை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் திமுக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.
1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், அதன் பின் மத்திய ஆட்சி அதிகாரத்தில் சுமார் 16 ஆண்டுகள் அங்கம் வகித்தும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான துரும்பைப் கூட கிள்ளிப்போடவில்லை என்பதை தமிழக மீனவர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.
தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி என்ற வரிகளுக்கு ஏற்ப கச்சத்தீவு தாரைவார்க்கும் போது திரு.கருணாநிதி அவர்கள் எவ்வாறு மவுனம் சாதித்தாரோ, அதைப் போலவே தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தானே தவிர, தங்களின் மீதான உண்மையான அக்கறை அல்ல என்பதை தமிழக மீனவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் ஓராண்டில் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், கச்சத்தீவை மீட்கவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை - வாக்குறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்ற மறுப்பது சீர்மரபினருக்கு திமுக அரசு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒன்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீர்மரபு வகுப்பினர் (DNC) மற்றும் சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரகதியில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த சீர்மரபினர் சமூகத்திற்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும்.
தேர்தலுக்கு முன்பாக எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதும், மறந்து விடுவதும் திமுகவினரின் அடிப்படை குணம் என்பது, சீர்மரபினர் ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
எனவே, இனியும் சீர்மரபினர் சமூகத்தினரை ஏமாற்றாமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுவதோடு, சீர்மரபினர் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu