குடும்பத்திற்காக வேலைக்கு சென்ற பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை!
பெற்றோருடன் உறங்கும் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை!
இந்த காட்டாட்சிக்கு பெயர்தான் நல்லாட்சியா?
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அச்சமும் கேள்விகளும் எழுந்து வரும் நிலையில், இரண்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.
குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகப் பணிக்குச் சென்ற 26 வயது பெண் செவிலியர் ஆர்.உத்திரா காணாமல் போய், பின்னர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி அதிகாலையில் காணாமல் போன சம்பவத்தில், அவரை மீட்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வீட்டுக்குள் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே?
குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பணிக்குச் சென்ற பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், உழைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்ன?
ஒரு பெண் வீட்டுக்குள் இருந்தாலும் பாதுகாப்பில்லை. பணிக்காக வெளியில் சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை உருவானது எப்படி?
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கும் நிலையில், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் இல்லையே ஏன்?
பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் ‘சிங்கப்பெண்’ படை எதற்காக?
வெற்றிப் பயணத்தில் வெளியே செல்லும் பெண்கள், பாதுகாப்புடன் வீடு திரும்பி வர உத்தரவாதம் இருக்கிறதா?
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. விலைவாசி உயர்விலிருந்து நிம்மதி இல்லை. போதைப் பொருள் அச்சத்திலிருந்து விடுதலை இல்லை. இது ஆட்சி நிர்வாகமா? ரீல்ஸ் காட்சி நிர்வாகமா?
இதே நிலை நீடித்தால், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ படையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கே முழுமையான பாதுகாப்பு இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகிவிடாதா?
எனவே, காணாமல் போன சிறுமி ஹேமாவதியை விரைந்து, பாதுகாப்பாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உத்திராவின் மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி, அவரது மரணத்திற்கான முழுமையான காரணத்தை வெளிக்கொண்டு வந்து, குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கும், அவர்கள் பயணிக்கும் வழித்தடங்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
#WomenSafety #tamil #ChildSafety
#பெண்களுக்குபாதுகாப்பு #குழந்தைகளுக்குபாதுகாப்பு
@VelmuruganTVK நிலப் பரிமாற்றம் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பான புகார்கள் இருந்தால், சுயாதீனமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@VelmuruganTVK
@VelmuruganTVK நிலப் பரிமாற்றம் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பான புகார்கள் இருந்தால், சுயாதீனமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@VelmuruganTVK
@VelmuruganTVK தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட இயற்கை விவசாய நிலங்களை வணிக நோக்கங்களுக்காக தாரைவார்க்கக் கூடாது. ஆரோவில் நிலத்தை காப்போம்...
@VelmuruganTVK
சர்வதேச நகரமா?
மதவாத வேட்டைக்காடா? ஆரோவில்லின் சுதந்திரத்தில் அதிகாரம் செலுத்துவது யார்?
உலக அமைதிக்கும் மனித ஒருமைப்பாட்டிற்குமான சர்வதேசப் பெருவெளி ஆரோவில். அது எந்தவொரு மதவாதக் கும்பலின் ஆதிக்கச் சொத்தும் அல்ல, அரசியல் வேட்டைக்காடும் அல்ல.
தற்போது, நிலப் பரிமாற்ற ஊழல்கள், இயற்கை வளச் சுரண்டல்கள் என அரவிந்தர் அன்னையின் கனவைச் சீரழிக்கும் நிர்வாகத் துரோகங்கள் எல்லை மீறிவிட்டன. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட ‘அன்னபூர்ணா’ இயற்கை விவசாயப் பண்ணையின் 100 ஏக்கர் நிலத்தைச் சென்னை ஐஐடிக்கு 33 ஆண்டுகள் குறைந்த தொகையிலான குத்தகைக்குத் தாரைவார்த்த நிர்வாகத்தின் அதிகாரத் திமிரையும், ஆரோவில்லின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவச் சக்திகள் தங்களின் மதவாதக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் அப்பட்டமான அத்துமீறல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகளாவிய மனிதநேயக் களத்தை ஒரு மதத்தின் குறுங்குழுவாதச் சிறையாக்கத் துடிக்கும் இத்தகைய சூழ்ச்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். பன்னாட்டு மனிதர்களின் அமைதிப் பூங்காவை ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கார்ப்பரேட் ஏவலாளர்களுக்கும் விற்றுத் தீர்க்க எவருக்கும் உரிமையில்லை.
ஒன்றிய, மாநில அரசுகளே!
நில முறைகேடுகள், பண்ணைத் தாரைவார்ப்பு, இந்துத்துவ அதிகாரத் திணிப்பு என அனைத்தின் மீதும் தயவுதாட்சண்யமற்ற சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும், ஆரோவில்லின் நிலத்தையும் அதன் மாண்பையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#SaveAuroville
#ProtectAurovilleLand
#ஆரோவில்லைகாப்போம்
#மதவாததலையீட்டைநிறுத்து
@VelmuruganTVK கோலார் தங்கவயல் தமிழர்களின் பிரச்சினையை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்துகள். தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்...
@VelmuruganTVK
@VelmuruganTVK தமிழர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும் எந்தச் சூழலிலும் குரல் கொடுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்பாடு பாராட்டுக்குரியது...
@VelmuruganTVK
@VelmuruganTVK 21 தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும். ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் முக்கியமான குரலாக அமைந்துள்ளது...
@VelmuruganTVK
கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் அருகே 21 தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
@VelmuruganTVK Child-protection laws and support systems must function effectively. The government should take all necessary steps to ensure justice and protection for the affected child....
@VelmuruganTVK@CMOTamilnadu
@VelmuruganTVK With repeated reports involving crimes against children, the government must seriously review and strengthen preventive and protective measures...
@VelmuruganTVK@CMOTamilnadu
@VelmuruganTVK The government should provide all necessary assistance to the affected child and her family while ensuring their safety and privacy. There can be no compromise when it comes to children's rights....
@VelmuruganTVK@CMOTamilnadu
@VelmuruganTVK There can be no negligence in matters concerning law and order and child safety. A proper investigation must be carried out and the truth brought to light....
@VelmuruganTVK@CMOTamilnadu
@VelmuruganTVK The demand for stronger child-safety measures is important. The affected child must receive proper medical care, protection, support, and justice....
@VelmuruganTVK@CMOTamilnadu
@VelmuruganTVK குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தல் முக்கியமானது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவம், பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வேண்டும்....
@VelmuruganTVK
வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லையா?
மதுராந்தகம் சம்பவத்துக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
தமிழக அரசின் அலட்சியத்துக்கு முடிவு எப்போது?
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலிலும் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி தனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியிருப்பது, சட்டம் ஒழுங்கு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.
இதற்கு முன்பாக, வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக குழந்தைகள் தொடர்பான இதுபோன்ற செய்திகள் வெளியாகும் நிலையில், குற்றம் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதைத் தாண்டி, அவற்றை முன்கூட்டியே தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்கே?
குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைக் கடமை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை விரைந்து கண்டறிந்து, குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், காவல்துறை கண்காணிப்பையும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழுமையான மருத்துவம், பாதுகாப்பு மற்றும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#ChildSafety #tamil #JusticeForChildren
#குழந்தைகளின்பாதுகாப்பு #தமிழகவாழ்வுரிமைக்கட்சி