கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் மூன்று தாரக மந்திரங்களையும் உள்ளத்திலே ஏந்தி, பாடுபட்டுக்கொண்டு வருகிறோம். நாட்டின் நன்மைக்கான எந்தச் செயல்களிலும், நாங்கள் ஈடுபடாமலிருப்பதில்லை.
#Anna#Annaism#annainst#அறிஞர்_அண்ணா#ArignarAnna
அறிந்தோ, அறியாமலோ, நமது சக்தியின் அளவையும், நாம் காட்டும் அரசியல் கண்ணியத்தையும், நமது கொள்கையின் பாலுள்ள உண்மைத் தன்மையையும்
எவரும் ஒப்பிட நேருகிறது.
#Anna#Annaism#annainst#ArignarAnna#அறிஞர்_அண்ணா
விடுதலைப் போரில்
முதல் கட்டம், அலட்சியப் படுத்துவது.
இரண்டாம் கட்டம், அன்பாகப் பேசிப் பார்ப்பது. மூன்றாவது கட்டம், மமதையாக மிரட்டிப் பேசி அடக்கிப் பார்ப்பது.
நான்காவது கட்டம், இவ்வளவு ஆதரவா? திகைப்பது.
ஐந்தாவது கட்டம் சரி என்ன வேண்டும்?
என்ற சமரசம் பேசுவது
#Anna#Annaism
'நாமெல்லாம் ஒரு குடும்பம்' என்ற உறவும் பாசமும் உரிமையும் பந்தமும் யாருடைய குறிக்கீட்டால் சிதைந்து போயினும்; தங்கத் தாம்பாளத்தில் விழுந்த கீறலைப்போல மறுபடியும் உருக்கி ஒன்றாகி கொள்ளும் தன்மையில்தான் நமது குடும்பம் நடைபெற்று வருகிறது
#Anna#Annaism#annainst#ArignarAnna
எங்கே இருக்கிறது உணர்ச்சி?
ஆரிய மார்க்கத்தையும், ஆரிய அரசியல் பொறியையும் மகத்தானதென்று மனதிற்கொண்டு, நேரம் நினைப்பு பொருளை அதற்கழுது பாழாகும் தமிழா! உனது பொறுமைக்கு ஓர் எல்லை வேண்டாமா! தோல் தடித்தாலும், நெஞ்சமாவது துடிக்கலாகாதா? எங்கே இருக்கிறது உணர்ச்சி? #Anna#Annaism#annainst
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கிடையே தொடர்பு கொள்வதற்கு ஒரு மொழியும், வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு வேறொரு மொழியும் வேண்டும் என்று சொல்வது அரசியல் அதிகப்பிரசங்கித்தனமாகும்
#Anna#Annaism#annainst#ArignarAnna#அறிஞர்_அண்ணா