🚨 A 71-year-old NEET UG 2026 aspirant has moved the Allahabad High Court seeking 1% reservation or a special quota for senior citizens in MBBS admissions.
"இப்போ இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் யாருனு எனக்கு தெரியாது.. ஆனால் மா.சுப்ரமணியன் தான் எப்பவும் அமைச்சர்" - நடிகர் சத்யராஜ் பேச்சு
#Sathyaraj | #DMK | #Masubramanian
#மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுத்துள்ளது #திமுக.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய #விஜய், மேகதாது குறித்து அடுத்து பேசவே இல்லை !
தன் கட்சிக்கு எம்பி இல்லை என்றாலும் பார்லிமென்ட் துவங்குவதற்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி பேசி இருக்கலாம்.
குறைந்த பட்சம் தன்னுடைய கூட்டணியை கட்சியை ரிசார்ட்ல வச்சு பேசியதை போல கூட்டம் போட்டு அவர்களையாவது தீர்மானம் கொண்டு வர சொல்லி இருக்கலாம். ஆனா செய்யல.
மேகதாதுக்கு எதிராக கம்பு சுத்திய மாணிக்கம் தாகூரோ, திருமாவோ, வைகோ மகன் துரை வைகோவோ, உதயநிதி திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று கம்பு சுத்திய சண்முகம் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் மூலமாகவோ தீர்மானம் கொண்டு வரல. பாஜக பக்கம் போய்ட்டாங்க என்று எந்த கட்சிக்கு எதிராக வதந்தி பரப்பினார்களோ அதே திமுக தான் மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்ல நோட்டீஸ் கொடுத்துள்ளது.
எங்கே இந்த தீர்மானத்தில் #ராகுலை தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேச சொல்லுங்கள் பார்ப்போம். மாணிக்கம் தாகூர் செய்வாரா?
மொத்த பேரையும் ஒரே நோட்டீசில் expose பண்ணிருக்கு திமுக.
காவிரி விவசாயிகளுக்கு யார் நண்பன் என காட்டியுள்ளது இந்த நோட்டீஸ்.
யாசிர்
( படித்ததில் பிடித்தது)
திமுகவிற்கு ஆசை காட்டுகிறது பாஜக என கார்த்திக் சிதம்பரம் சொல்லியிருக்கிறாராம்.
நைட்டோட நைட்டா ஓடிப் போனவங்களுக்கு திமுக மேல என்ன அக்கறை?
தமிழ் நாட்டில் நடந்துக் கொண்டிருப்பதே பாஜக ஆட்சி தான், “பாஜக என்ற அந்த மூன்றெழுத்தை திரு.விஜய் அவர்கள் இன்னும் உச்சரிக்கவேயில்லை” தவெக பாஜகவை எதிர்க்க வேண்டும் என சொல்லும் துணிவிருக்கிறதா @KartiPC ?
திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது.
2025-26 ம் நிதியாண்டில் ௹.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன
அம்மா உணவகங்களின் கட்டிடங்கள்
புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ௹.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (௹.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது.
#WATCH | “தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் எந்த வடிவத்தில் வந்தாலும் திமுக அதை எதிர்க்கும்..”
டெல்லியில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
#SunNews | #Delimitation | #DMK | #ParliamentSession
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள Art Cube Gallery-யில் இளம் ஓவியர் செம்மொழி அவர்கள் தன்னுடைய ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை “GENESIS - Debut Collection” என்ற தலைப்பில் ஒருங்கிணைத்துள்ளார். அதனை தொடங்கிவைத்து, படைப்புகளை பார்வையிட்டோம். ஓவியர் செம்மொழியின் கலைப் பயணம் சிறக்க வாழ்த்தினோம்.
மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.
நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது, நம் தமிழ்நாடு!
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம்.
“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!
பழனிக் கோவிலுக்கு சொந்தமான நிலம் கொள்ளைப் போவதை தடுக்கத் தவறிய தவெக அரசை விமர்சித்தும், அறநிலையத்துறையில் நடந்திருக்கும் மோசடிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த திரு. வினோத் சூர்யகுமார் அவர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் சந்தித்தேன்.
சமூக நலன் சார்ந்து, கழகத்தின் கொள்கை வழி செயல்பட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் அந்த இளைஞருக்கு உறுதுணையாக கழகம் இருக்கும்.
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.