"Law Should Not Be Used To Target Specific Individuals": Madras High Court Grants Interim Bail To Savukku Shankar |@UpasanaSajeev
https://t.co/44YSC1BBaC
#Sirai ஒரு காவல்துறை அதிகாரிக்கும், குற்றவாளிக்குமான உரையாடலும் அதனால் ஏற்படும் மாற்றங்களுமே சுரேஷ் ராஜ்குமார் இயக்கியிருக்கும் சிறை.
Thoughts about the film, So, there might be few little spoilers, if you think them as spoilers.
AR (Armed Reserve) பொறுப்புல இருக்குற கதிரவனுக்கு ஒரு accused ah கூட்டிட்டு போற பொறுப்பு வருது. பஸ்ல இருந்து அவர் தப்பிக்க முயல, அங்க சில அசாம்பாவிதங்கள் நடக்குது. அந்த enquiry commisionல துளியும் empathy இல்லாம பேசறார் கதிரவன். குற்றவாளி தப்பிச்சாலும் enquiry, குற்றவாளிய நாங்க சுட்டாலும் enquiryல ஆரம்பிச்சு ரொம்பவே போல்டா பேசறார் கதிரவன். His stand on accused & criminals establishment is so clear. அப்படியான நபர்கிட்ட அப்துல் வந்து சிக்கறார். அடுத்து என்ன நடக்குது என்பதுதான் சிறை. Youngsters காதல் காட்சிகள்ல ரொம்பவே முக்கியமானது Innocence. அதைய அவ்ளோ அழகா வெளிய கொண்டு வந்திருக்காங்க, அனிஷா அணில்குமார். கற்றது தமிழ் அஞ்சலிக்கு அப்புறம் அப்படியானதொரு innocence நிறைந்த கதாபாத்திரம். ரொம்பவே கன்வின்ஸிங்கா பண்ணி இருக்காங்க. அப்துல்லா LK அக்ஷய் குமார். ஒரு மைனாரிட்டியா எல்லா விதத்துலயும் கூனிக்குறுகி நிக்கற கதாபாத்திரம். A very good debut performance. எதிர்த்து கத்தணும்னு கோபம் இருந்தாலும் , தன்னுடைய மதத்தாலே அமைதியா நிற்கும் ஒரு கதாபாத்திரம்.
படத்தோட பெரிய பிளஸ் supporting characters எழுதப்பட்ட விதம். எதா இருந்தாலும் வாடா பாத்துக்கலாம்னு சண்டைக்குப் போற அப்துல்லோட அம்மா. ரெட்ரோவுல சூர்யாவோட அம்மாவா வருவாங்கள்ல same lady தான் ரெம்யா சுரேஷ். அவங்க ஸ்லாங்குக்கு ஏத்த மாதிரி ஒரு லைன கதைல சேர்த்தது ஸ்மார்ட் மூவ். கலையரசி (அனிஷா அணில்குமார்) அக்காவா இஸ்மத் பானு (ரகு தாத்தா படத்துல வர்ற கீர்த்தியோட அண்ணி). விஜய் சேதுபதிகூட பல படத்துல ஒரண்டைக்குப் போற ரகுவுக்கு இதுலயும் அதே ரோல் தான். இதுல இன்னுமே prominent role. மூணாறு ரமேஷ் எல்லாம் நம்மள மாதிரி டிரெஸத்தான் வாடகைக்கு எடுத்து போடுவார் போல. போலீஸவிட அதிக காலம் காக்கி காஸ்டியூம்ல தான் சுத்தறார். இருந்தாலும் இதுல நினைவில் நிற்கும்படியான ரோல். கதிரவன் மனைவி மரியமா ஆனந்த தம்பிராஜா. ‘நான் அந்த பொண்ணுகிட்ட பேசணும்’நு அவங்க சொல்றதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. கும்கில இருந்தே கையறு, விரக்தி நிலைல இருக்குற மாதிரியான காட்சிகள் விக்ரம் பிரபுக்கு நல்லா வருது. டானாக்காரன், இறுகப்பற்றுக்கு அப்புறம் கதிரவனா வர்ற விக்ரம் பிரபுக்கு இதுலயும் நல்ல ரோல். இத்தனை கதாபாத்திரங்கள் நினைவுல நிக்கற மாதிரி பெர்பாமன்ஸ் வாங்கினதுல இருந்து, romba smart ah திரைக்கதை அமைச்சது வரை suresh rajkumar shines as a debut director.
சாமிய கும்பிடற அளவுக்கு எனக்குப் பெருசா எந்த தொந்தரவும் இல்லைன்னு பகுத்தறவாதியா இருக்குற கதிரவன் , எல்லாமே கை மீறி போனதுக்கு அப்புறம் கடைசி நம்பிக்கையா பிடிப்பா சாமிய மட்டுமே நம்பிக்கியிருக்குற அப்துல்,கலையரசி. காவல்துறையோட சிஸ்டம் ரொம்பவே கோராமை மிகுந்தது. அதுல டாப்ல இருந்து அடிமட்ட லெவல்ல இருக்குற ஆள் வரைக்கும், அதிகாரத்திமிரோட சுவைய ருசிச்சுப் பார்க்கற ஆசை இருந்துட்டே இருக்கும். போலீஸ்ல நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்னு எல்லாம் ஒன்னுமே இல்லைன்னு சிலர் சொல்றதுக்குக் காரணமும் அதுதான். அப்படியான கதாபாத்திரங்கள் படம் முழுக்கவே இருக்காங்க. அந்த சிஸ்டம்குள்ள இருந்துக்கிட்டே தன்னாலான வரை சரியானத செய்யணும்னு நம்பற போலீஸும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் கதைகளும் இந்த சமூகத்துக்கு அவசியமானது. சிறை படத்தோட கதை, திரைக்கதை தமிழ். காவல்துறைல வேலை பார்த்த அனுபவம் அவருக்கு டானாக்காரனும், சிறையும் கொடுத்திருக்கு. ரெண்டுலயும், vulnerable , weak பத்தி, அவங்க தரப்பு நியாயங்கள பேசினது மகிழ்ச்சி. மலையாளத்துல ஷாஹி ஷபீரும் காவல்துறைல இருந்துட்டு சினிமாவுக்கு வந்தவர் தான். நாயாட்டு, officer on duty, ronth எல்லாம் அவர் தரப்பு கதைகள். This is where Tamil stands Tall.
பஸ்ல வர்ற முதல் காட்சியே மாதேஷ் மாணிக்கத்தின் உழைப்புக்கு நல்லதொரு சான்று. ஜஸ்டின் பிரபாகர் இசைல நிறைய நல்ல பாடல்களா பாடிட்டு வர்றார் யுவன். ராதே ஷ்யாம்ல யாரோ யார் இவனோ; இறுகப்பற்றுல வர்ற பிரியாதிரு; அடியே படத்துல காற்றினில் இவள் குரல். அந்த லிஸ்ட்ல இந்தப் படத்துல வர்ற மின்னு வட்டாம் பூச்சியும் இடம் பிடிச்சுடுச்சு. Just another from instant catchy number from justin . கார்த்திக் நேத்தாவின் வரிகளும் அழகு.
இதெல்லாம் தாண்டி எத்தனையோ முறை பெயில் கேட்டும் அஞ்சு வருசத்துக்கு மேல சிறைல இருக்குற உமர் காலித்; ஸ்டிரா கூட கொடுக்க முடியாதுன்னு அலைக்கழிக்கப்பட்டு செத்துப்போன ஸ்டான் சுவாமி; செய்தி சேகரிக்கப்போய் ரெண்டு வருசம் சிறைல இருந்த சித்திக் காப்பான்னு இந்தியாவுல நம்ம கண் முன்னாடி எத்தனையோ உதாரணங்கள். இந்தியாவுல ஒருமுறைகூட trial வராம, விசாரணைக் கைதியாவே சிறைல இருக்குற நபர்கள் கிட்டத்தட்ட 4 லட்சம். நேத்து நைட் சிறை படம் பாத்துட்டு, இன்னிக்கு காலைல நியூஸ் பாத்தா உன்னாவ் பாலியல் வழக்குல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கார் பெயில்ல வெளிய வந்திருக்கார். இப்படியான நீதித்துறையும், காவல்துறையும் இருக்குற இந்தியாவுல சிறை எல்லாம் fantasy படங்கள் தான். ஆனா, எல்லா நம்பிக்கையும் அத்துப்போன சனத்துக்கு சாமி மாதிரி, இந்த சிஸ்டம் மேல குறைந்தபட்ச நம்பிக்கையை சிறை நிச்சயம் தரும்.
#sirai Will be a good one to end the 2025 on a positive note. Watch it in theatres this weekend.
ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு இந்த வீடியோ...
யோவ் @actorvijay, அரசியல் சார்பில்லாம ஒரு சாதாரண மனுஷனா கேக்குறேன், உன்ன குடும்பத்துல ஒருத்தனா பாக்குறாங்க
ஒரு போன் கால் இல்லனா வீடியோ கால் பண்ணி அவங்களுக்கு ஆறுதல் சொல்லுயா, ஒருநாளாச்சும் அவங்க துக்கம் மறந்து தூங்குனா கூட போதும்.