தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் - 2026 வேட்பாளர்
பொறியாளர்
மு.கார்த்திகா
இளங்கலை பொறியியல்
தேர்தல் நாள் : 06.10.2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
‘தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது’ என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர். அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள்தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
அநீதி இழைக்கும் அதி ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய இடையூறாகவும் தடைக்கல்லாகவும் இருந்த காரணத்தினால்தான் அரசியல் போராளி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் உயிரைப் பறிக்கும் சதிச்செயல் நடந்தேறியது.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல
அக்கொடுஞ்செயல் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்றளவும் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. அக்கொடூர நிகழ்வில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வாழ்நாள் முழுவதும் குரலற்ற எளிய மக்களின் குரலாக, பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் இன்று நம்மோடு இல்லாதபோதிலும், அவர் கையளித்து சென்றுள்ள மக்கட் பணிகளை தடைபடாமல் தொடர்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
அருந்ததியர் மக்கள் கேட்டது இட ஒதுக்கீடு, உள் இட ஒதுக்கீடு கொடுத்து ஆதித்தமிழர் பறையர் மக்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி - அண்ணன் செந்தமிழன் சீமான்.
ஜன நாயக கடமையை சரியா செய்வதும்,
நாட்டுக்கு சரியாக வரி செலுத்தியும்,
சமுகவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும்,
இந்த மண்ணையும், மக்களையும், நேசிப்பது தான்
#தேசப்பற்று.
தர்மபுரி-தொப்பூரில் அருந்ததிய வகுப்பைச்சார்ந்த ஜீவா,சசிதரன்,தமிழ்ச்செல்வன் ஆகியோரை சாதியவாதிகள் படுகொலை செய்ய முயற்சித்தனர்.
காவல்துறையோ விபத்து என வழக்கை முடிக்க முனைவதை கண்டித்து #விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இன்று தர்மபுரியில் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம்
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலைஅணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது...