@ChennaiRains Srikant Sir. In addition to your valud explanation, the young men from other localities ventures in group & firing crackersrockets etc with louder high decibel sound & times throwing inside our residences gates. Scary. Seiors & children & women living wih fear.. Silent sufferers.
தீபாவளித் திருநாளில் முதியோர் மற்றும் பார்வைக் மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள், உணவு வழங்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்த சென்னை காவல்துறையினர்
Chennai Police spread love and joy on the occasion of Diwali by distributing sweets and food to elderly people and persons with visual impairments.
#HappyDiwali #ChennaiCityPolice #TamilNaduPolice #TNPolice
குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்…
தீப ஒளித் திருநாளை முன்னிட்டு, அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வஞ்சிபாளையத்தில் அமைந்துள்ள மதர் தெரசா ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுடன் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் உணவு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குழந்தைகளுடன் அன்பாகக் கலந்துரையாடி, மகிழ்ச்சியாக உரையாடிய அந்த அழகான தருணங்கள் எனது மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது.
மழலைச் செல்வங்களின் முகங்களில் தவழ்ந்த புன்னகையிலும், அவர்களின் கள்ளமில்லா சிரிப்பிலும் நான் இறைவனைக் கண்டேன்!
இந்தக் குழந்தைகள் அனைவரும் எதிர்காலத்தில் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அன்பும் அரவணைப்பும் நிறைந்த சூழலில் சிறப்பாக வளர்ந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளின் புன்னகையைவிட அழகான தீப ஒளி வேறொன்றுமில்லை… அவர்களின் மகிழ்ச்சியே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தீபாவளிப் பரிசு!
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Warmest wishes and greetings to all those celebrating Diwali in the UAE and around the world.
May this festival of lights bring you peace, hope, and goodness, and may your days be filled with safety, happiness, and prosperity. Happy Diwali!
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
நம்மைச் சுற்றித் தூய்மையைப் பேணும் கரங்களுக்கு நன்றியின் தீப ஒளி!
தீப ஒளித் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்து, அவர்களுக்கு நேரில் வழங்கி, எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
நாம் வாழும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்காக நாள்தோறும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவை அளப்பரியது. அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நமது சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகத் திகழ்கின்றன.
சமூகத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் அவர்களின் மகிழ்ச்சியிலும் பண்டிகைக் கொண்டாட்டத்திலும் நானும் பங்கேற்று, அவர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.
நம் வீதிகளைத் தூய்மையாக்கும் அவர்களின் கரங்கள், அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் மலரச் செய்யட்டும்!
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பான இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Kilambakkam Bus Terminus – Diwali Crowd Management
Recorded this drone footage this evening.
This time, the Tamil Nadu government seems to have organised Diwali passenger movement quite well at Kilambakkam. 👏 👏
@TamilanParthib1@MtcChennai@ChennaiTraffic@COPTBM@CMOTamilnadu@UpdatesChennai
#Chennai #Diwali #Traffic