யாகாவா ராயினும் நாகாக்க...
திமுக தோழர்களின் எல்லைமீறிய விமர்சனங்களுக்கு கடும் கண்டனங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வென்றதால் தன்னிச்சையாக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி 'குடியரசுத் தலைவர் ஆட்சி' என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மறைமுக 'பாஜக ஆட்சி' வந்துவிடக் கூடாதென்ற தொலைநோக்குப் பார்வையில் இடதுசாரித் தலைவர்களுடன் கலந்துப்பேசி தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என முடிவெடுத்தார் எழுச்சித் தமிழர் தலைவர் அவர்கள்.
திமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு எம்எல்ஏ-க்களை பெற்றோம் என மரியாதைக்காக திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தகவலை தெரிவித்துவிட்டுத்தான் தவெக-விடம் ஆதரவு கடிதத்தை கொடுத்தோம். அதற்காக, திமுகவிடம் அனுமதி வாங்கிவிட்டு ஆதரவளித்தோம் எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. பின்னர் சிறுத்தைகளின் விருப்பத்தையும் தவெகவின் கோரிக்கையையும் ஏற்று தவெக அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. தவெக அமைச்சரவையில் பங்கேற்ற நாள்முதல் திமுகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சிமீது தொடர்ச்சியான வன்ம பரப்புரை திட்டமிட்டே பரப்புகிறார்கள். அதற்கு வன்மையான கண்டனங்களையும் எச்சரிக்கையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நாளன்றே, கொச்சையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு அண்ணன் ஸ்டாலினின் கண்டனத்தை ஏற்று சிறுத்தைகள் மிகுந்த கண்ணியத்துடன் கடந்து சென்றோம். தற்போது மீண்டும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு தொடர்பாக ஜூன் 23-ம் தேதி சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் "திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை!" எனக் கேட்கிறார். இத்தகைய காட்டமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பணிவன்புடன் சில கேள்விகளை முன்வைக்க விழைகிறேன்... 40 நாட்களுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆசியுடன் பரம எதிரி அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயன்றதே... அப்போது உங்களுக்கு வெட்கமில்லையா? விஜய் முதல்வராகவிடாமல் தடுக்க ஒவ்வொரு கட்சியின் கதவுகளையும் நள்ளிரவில் தட்டினாரா உதயநிதி..
மக்கள் தீர்ப்பை திருட முயன்றபோது உங்களுக்கு வெட்கமில்லையா? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தது திமுக அப்போது வெட்கமில்லயா? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை விசிக தயவில் பெற்றுக் கொண்டு அதிகாரத்தில் பங்கு தர மறுத்தீர்களே.. அப்போது வெட்கமாகயில்லையா? 2026 தேர்தல் சமயத்தில் விசிக வேட்பாளர்களிடம் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் சாதிய துவேசத்தை வெளிப்படுத்தி, உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார்களே... அந்த செய்திக் கேட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா?
விழிம்பு நிலை மக்களுக்காகவே வாழ்வை அர்பணித்து, 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' முழக்கத்தை அரசியலை களத்தில் ஏந்திய எங்கள் தலைவர், சமூகநீதி வழி ஆட்சி நடத்த விரும்பும் விஜய்க்கு ஆதரவு அழித்து அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். இதைக்கண்டு வயிற்றெச்சல் அடைகிறீர்கள்... இதற்குத்தான் உள்ளபடியே நீங்கள் வெட்கப்பட வேண்டும். வாய்துடுக்கான பேச்சுகளும் கூட்டணிக் கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகியதும்தான் திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு நினைவுகூற விரும்புகிறேன். தோல்வியின் மனவேதனையில் பிதற்றிக் கொண்டிருக்காமல் இனியாவது ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
வழக்கறிஞர்.எழில் கரோலின்
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
23.06.2026
#vck #vckitwing #ezhilcaroline #tholthirumavalavan #tnpolitics
இன்னும் 6 மாதத்தில் திமுக ஆட்சி வந்து விடும் என்று சொல்லும் திமுகவினரே இது நல்ல அணுகுமுறை அல்ல, #TVK ஆள வேண்டும் என்பது மக்கள் அளித்த தீர்ப்பு அதை நாம் வணங்க வேண்டும் என்று தோழர் @Shanmugamcpim
திமுகவினரை சாடல்.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சராக தேர்ந்தெடுக்க பாட்டு இருக்கிறார்கள் அதை நாம் பாராட்ட வேண்டும் என்று தோழர் @Shanmugamcpim
சொல்லி இருக்கிறார்...
வாழ்த்துக்கள் @TVKVijayHQ...
#TVK #CPIM.
“எவன் இருந்தா என்ன…”
இந்த பேச்சுக்கு தான் தோற்கடிக்க பட்டிங்க என்று மறந்துடாதீங்க
கடைசிவரைக்கும் நாம எங்க தப்பு பண்ணினோம் என்று பரிசோதனை பண்ணிக்கிற மாதிரி தெரியல...😂
அந்தந்த கட்சிக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு, உன் இஷ்ட மயிருக்கு உடனே முடிவெடுக்க முடியாது,
வேணும்னா போய் NDA கூட்டணி கிட்ட கேட்டு ஆட்சி அமைக்க வழிய பாருங்க.