குடியரசுகட்சி தலைவர் எஸ் பி ராஜ் மறைவு:
___________________________________
பட்டியல் சமூகத்தினரின் ஒற்றுமைக்காகப் பாடாற்றியவர் !
இவரதுமறைவு அனைத்து சனாயக சக்திகளுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்!
____________________________________
இந்திய குடியரசு கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.எஸ்.பி.ராஜ் (86) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அண���ணன் எஸ்.பி.ராஜ் அவர்கள், ஸ்காம் (SCALM) என்கிற 'ஷெட்யூல்ட் இன விடுதலை இயக்க'த்தின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர். பட்டியல் சமூகத்தினரின் ஒற்றுமைக்காகப் பாடாற்றியவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்ட இவர் மிகச் சிறந்த ஓவியக் கலைஞரும் ஆவார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் சமூகநீதி, சமத்துவம் ஆக��யவற்றுக்காக தனது இறுதி மூச்சு வரையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். குடியரசு கட்சியின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.
தமி்நாட்டில் வசிக்கும் பழங்குடியினரின் பேச்சு வழக்கு மொழியைப் பாதுகாத்திடவேண்டும் என்கிற பெருமுனைப்பு கொண்டு அதற்கென 'எழுத்துரு'வைக் (script) கட்டமைத்த பெருமைக்குரியவர். இவரது இந்த அரிய படைப்பாக்கத் திறனை இந்திய ஒன்றிய அரசு அங்கீகரித்து அவரை ஊக்கப்படுத்தியது.
தனிப்பட்ட முறையில் என்மீது அதீதமான பற்றுதலைக் கொண்டிருந்தவர். விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறைகாட்டியவர். தனது பிள்ளைகளை சிறுத்தைகளாக இயங்கிட மனமுவந்து அனுமதித்தவர். 1990களின் தொடக்கத்திலிருந்து என்னைத் தட்டிக் கொடுத்து பேரூக்கம் அளித்தவர்.
இவரது மறைவு இந்திய குடியரசு கட்சிக்கு மட்டுமல்ல ; அம்பேத்கரிய, சனநாயக சக்திகள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அண்ணன் எஸ். பி ராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் இந்திய குடியரசு கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இர��்கலை தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எனது செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
"ஒரே அரிவாள்.. 3 பேர் மாறி மாறி.. உடலில் 21 வெட்டு காயங்கள்" - திருமாவளவன் பேச பேச தேம்பி அழுத மாணவனின் தாய்
#thirumavalavan#nanguneriissue
https://t.co/S0VSk5vRHC