‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
இந்த மின்வெட்டுகள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தாலும் (TVK) அதன் மாஃபியாவாலும் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம்.
மக்களை அவதிப்பட வைப்பது → 60 நாட்கள் வரை காத்திருக்க வைப்பது → அதன் பிறகு, மக்களின் நன்மைக்காகச் செய்வது போல 'அண்ணா' அதானி மின்சாரத்தைக் கொண்டு வந்து நிலைமையைச் சீராக்குவது!
இதன் மூலம்:
1 அதானி பவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியும்.
2 தமிழ்நாட்டின் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்த்த இரட்சகராக 'அண்ணா' மாற முடியும்.
கடந்த வாரம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, திடீரென்று இப்போது என்ன 'மின் பற்றாக்குறை'?
இது செயற்கையாக உருவாக்கப்பட்ட குழப்பம், இந்த நாடகத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
#TVKVijayFails
#அறிவோம்_தவெக
#தற்குறிகளை_அறிவோம்
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
'மாற்று அரசியல்' என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
நேற்று உங்கள் தனிப்பட்ட ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பொறுப்பைக் கொடுத்து facepalm ஆனது.
இப்போது உங்களின் Rolls-Royce கார் தொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் உங்கள் சார்பில் வாதாடிய Advocateக்கு மாநிலத்தின் மிக உயர்ந்த 'Advocate General' பதவியைத் தாரை வார்க்கப் பார்க்கிறீர்கள் என்ற தகவல் மிகக் கேவலமானது.
உங்களுக்குச் சேவை செய்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தமிழ்நாட்டின் முக்கியப் பதவிகளைத் தூக்கிக் கொடுப்பதற்கு இது என்ன உங்கள் ரசிகர் மன்றமா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVKFails
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.
340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.
கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.
சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.
அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது. 96 - 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.
ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.
ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.
ஹூண்டாய் வந்தது.
மிட்சுபிசி வந்தது.
ஃபோர்டு வந்தது.
சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.
இந்தக் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா? யாராவது அவரிடம் கேட்டார்களா? அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?
இவை எல்லாமே 18 ஆண்டுகளுக்கு முன்னால்...!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
பாசிசமும் பாயாசமும்
=======================
.
நிகழவிருக்கும் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், என்பது குறித்த எனது நிலைப்பாடு இது.
முதலில் யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
ரொம்ப சிம்பிள்: அறிவியல் மற்றும் செக்யூலரிசப் பாதையில் இருந்து நம்மைப் புரள வைக்கும் எந்தக் கட்சிக்கும் இந்தியாவில் யாருமே வாக்களிக்கக் கூடாது. இந்தப் பாதையில் இருந்து புரண்ட எந்த சமூகமும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. குறிப்பாக மதத்தைக் கட்டிக் கொண்டு அழும் எந்த சமூகமும் உருப்படவே முடியாது. இந்த வாதத்துக்கு எதிராக பேசுபவர்கள், இந்து மதம் மட்டுமே செக்யூலர் மதம். மீதி மதங்கள்தான் அடிப்படைவாதம் பேசுபவை என்று சொல்லலாம். அப்படி வாதாடுபவர்களுக்கு பண்டைய வரலாறும் தெரியவில்லை, இன்றைய வரலாறும் தெரியவில்லை. எனது புத்தகம் 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' அந்த வரலாறுகளை விளக்குகிறது.
பாஜக அறிவியலுக்கு, செக்யூலரிசத்துக்கு எதிரானது. இந்து அடிப்படைவாதம் சார்ந்து இயங்குவது. குறிப்பாக, வேதிய பிராமணியத்தைப் போற்றுவது. வேதிய பிராமணியம் எப்படிப்பட்டது? சாதியம், பெண், தலித் ஒடுக்குமுறைகள், மூட நம்பிக்கைகள், பிராமண உயர்வுவாதம் என்று பல்வேறு கொடூரங்களைப் போற்றுவது. அப்படிப்பட்ட ஒன்றை அரசியலில் நுழைப்பவர்கள் என்னைப் பொருத்தவரை மூடர்கள். அல்லது குரூரர்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.
எனவே, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாரும் பாஜக எனும் அடிப்படைவாத வன்முறைக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.
அடுத்தது, நாம் தமிழர் கட்சி. இவர்களோடு ஒப்பிடும் போது பாஜகவே தேவலாம் என்றுதான் தோன்றுகிறது. டிரம்ப்புக்கு அடுத்து 'முரட்டு முட்டாள்' எனும் பட்டத்துக்குத் தகுதியானவராக சீமான் கவனத்துக்கு வருகிறார். எனவே நாம் தமிழர் எனும் ஒரு முரட்டு முட்டாள் கூட்டத்துக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
அடுத்து தவெக. தனது முதல் மாநாட்டில் பல்வேறு தேசிய, மாநிலத் தலைவர்களை தங்கள் கொள்கை முன்னோடிகளாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார் விஜய். பாசிசம், பாயாசம் என்று இரண்டு தரப்பில் இருந்தும் தனித்து நிற்பதாக அறிவித்தது புருவத்தை உயர்த்த வைத்தது. ஆனால் அந்த ஆச்சரியம் ரொம்ப காலம் நிலைக்கவில்லை. எந்த ஒரு மாநில, தேசியப் பிரச்சினை குறித்தும் எதுவும் செய்யாமல் கடந்தது, கரூர் சம்பவத்தை ஹேண்டில் செய்த விதம், வெறுமனே பாயாசம் பற்றி மட்டுமே பேசி பாசிசத்தை கவனமாகத் தவிர்த்தது, ஜனநாயகன் சம்பவத்தில் வாயை மூடிக் கிடந்தது, தேர்தல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டுவது, என்று அரசியல் குறித்து எந்தத் தெளிவும் அக்கறையுமே இல்லாமல் விஜய் இயங்குகிறார். வெறித்தனமான ரசிகர் கூட்டம் மட்டுமே போதும் என்று அவர் நினைப்பதாகத்தான் தோன்றுகிறது. எனவே தவெக எனும் ரசிகக் குஞ்சுகளின் கூட்டத்துக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
தமிழக அரசியல் பற்றிப் பேசும் போது அதிமுக எனும் கட்சி அழியக்கூடாது என்று பலரும் எழுதுகின்றனர். திமுகவுக்கு மாற்றாக ஒரு வலிமையான மாநிலக்கட்சி இருப்பது அவசியம் என்பது அதன் பின்ணணி. அதாவது இந்தத் தேர்தலில் அதிமுக தோற்றால் அது அழிந்து விடும், என்பது அவர்களின் வாதம்.
என்னைப் பொருத்தவரை, தங்கள் கட்சி வாழ வேண்டுமா இல்லையா என்பதை அந்தக் கட்சியினர்தான் எடுக்க வேண்டும். அந்த முடிவை அவர்கள் ஏற்கனவே எடுத்து விட்டனர். பாஜக ஒரு மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்கிறது என்றால் விரைவில் அந்தக் கட்சியை மிஞ்சி அதனை இரண்டாம் நிலைக் கட்சியாக ஆக்கி விடும் என்பதுதான் தேசம் முழுக்க நாம் காணும் வரலாறு. அதே அணுகுமுறை தமிழ்நாட்டிலும் நடக்கலாம். அதாவது, வெற்றி பெற்றாலும் அதிமுக அழியத்தான் போகிறது. எனவே, அவர்களை அவர்களது பாதையில் விட்டு விடுவது நல்லது. சொல்லப் போனால், பாஜகவுடனான தோல்வியில் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டு தங்கள் வழியை மாற்றிக் கொள்ளும் ஒரு சிறிய சாத்தியக்கூறு உள்ளது. அது நடப்பதற்கு அவர்கள் தோற்க வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், தமிழ்நாட்டில் இன்றைய நிலவரத்துக்கு அதிமுகவின் வெற்றி என்பது பாஜகவின் வெற்றியாகவே பார்க்கப்படும். இந்த ஒரு காரணத்துக்காகவே அவர்களுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
இறுதியில் மிஞ்சி நிற்பது திமுகதான். திமுகவிடம் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தலித்திய பார்வையில் இந்த ஆட்சியில் பல போதாமைகள் உள்ளன. ஆணவக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டம், தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ளல் போன்றவற்றில் சுணக்கம் தென்படுகின்றன. தீபத்தூண் வழக்கில் வெளிப்படையாகவே minority appeasement தெரிந்தது. தங்கள் ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவர்களை உள்ளே தள்ளுவதில் காட்டும் உத்வேகம் ஆகியவை முக்கிய பிரச்சினைகள்.
ஆனால் இவற்றையும் மீறி நல்லாட்சிப் பயணம் இருக்கிறது. கல்வி, பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் காட்டும் ஆர்வம் குறிப்பிடத்தக்கவை. கடந்த ஐந்தாண்டுகளில் அமைக்கப்பட்ட நூலகங்கள், படிப்பகங்கள், மியூசியங்கள் கடந்த 40 ஆண்டுகளில் நிறுவப்பட்டவற்றை விட அதிகமானவை. கட்டுமானப்பணிகளிலும் முன்னேற்றம் இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடம் வந்து கெத்து காட்டினார்கள். எதிர்க்கட்சிகளை நயமாக அணுகும் விதமும் பாராட்டத்தக்கது.
இவை அனைத்தையும் விட தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமாக நான் பார்ப்பது பாஜகவுக்கு எதிராக திமுக களமாடியதுதான். தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து இயங்கும் ஒரு சில கட்சிகளில் முதன்மையானது திமுக என்றே சொல்லி விடலாம். அதை விட, இந்துத்துவத்துக்கும் அது சார்ந்த வன்முறைக்கும் எதிரான திமுகவின் நிலைப்பாடு போற்றத்தக்கது. அந்த ஒரு அம்சத்துக்காகவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்துத்துவம் எனும் முரட்டு மூட வன்முறை சித்தாந்தம் இந்தியாவை விட்டு ஒழிய வேண்டும். அந்த மூட வன்முறையை போற்றிப் பாதுகாக்கும் பாஜக தேசிய அளவில் முறியடிக்கப்பட வேண்டும். அதற்கு திமுக போன்ற செக்யூலர் சக்திகளுக்கு நாம் வலுவூட்ட வேண்டும்.
எனவே செக்யூலரிசம், அறிவியல் பூர்வ வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் தொழில் துறையில் அதானி என்ற பெயரை யாருக்கும் தெரியாது.
சிமெண்ட் தொழிலதிபர்கள் யார் யார் என்று கேட்டால் இந்தியா சிமெண்ட் , அம்புஜா சிமெண்ட் எல்என்டி சிமெண்ட், சங்கர் சிமெண்ட் கோரமாண்டல் சிமெண்ட் என்று தான் எல்லோரும் கூறுவார்கள்.
ஆனால் இப்பொழுது இந்தியாவிலேயே சிமெண்ட் அதிகமாக உற்பத்தி செய்பவர் அதானி சிமெண்ட்ஸ்.
இந்தியாவிலேயே அதிகமாக நிலக்கரி சுரங்கங்கள் வைத்திருப்பவர் அதானி மைன்ஸ் !
இந்தியாவிலேயே அதிகமாக கம்ப்ரஸ்ட் நேச்சுரல் கேஸ் (CNG) எனப்படும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்பவர் அதானி கேஸ்.
இந்தியாவிலேயே அதிக சோலார் பவர் தயாரிப்பவர் அதானி.
இந்தியாவிலேயே அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் உற்பத்தி செய்து விநியோகம் செய்பவர் அதானி..
இந்தியாவிலேயே அதிகமாக ஏர்போர்டுகளையும் ரயில் நிலையங்களையும் தன்னுடைய குத்தகைக்குள் வைத்திருப்பவர் அதானி.
இவையெல்லாம் கடந்த 12 ஆண்டுகளுக்குள்..
. அதாவது மோடி அவர்கள் பிரதம மந்திரி ஆக ஆன பிறகு ! ஆனால் அதற்காக மோடிக்கும் அதானிக்கும் தொடர்பு இருக்கிறது என்று எண்ணிட வேண்டாம். இரண்டும் தற்செயலாக நடந்தவை தான்.
ஏனென்றால் பாஜக என்பது ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி..
#zerobjp
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/Vtg69nPi8T வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
#VoteForDMK
DMK தேர்தல் அறிக்கையில் சொன்ன ₹8,000 எலக்ட்ரானிக் சாதன வாங்கும் கூப்பன் பற்றி பலரும் “இது இன்னொரு freebie”ன்னு பேசுறாங்க. ஆனா உண்மையில் இது அப்படித்தான் பார்க்க வேண்டிய விஷயம் இல்லை.
சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினா, இது பொருளாதாரத்துக்கு நல்ல boost கொடுக்கக்கூடிய idea.
ஏன்னா இதுபோன்ற திட்டங்கள் உலகத்திலேயே நடந்திருக்குது.
🇭🇰 COVID காலத்தில் ஹாங்காங் அரசு மக்களுக்கு Consumption Voucher Scheme மூலம் HK$5,000 value vouchers கொடுத்தது. அந்த vouchers Octopus, AlipayHK, PayMe, WeChat Pay மாதிரி digital platforms-ல credit பண்ணப்பட்டது.
2021 இறுதிக்குள் HK$30 billionக்கும் மேல் வவுச்சர்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அரசு வெளியிட்டது. ()
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
ஹாங்காங் பொருளாதார ஆய்வில், voucher value-யின் 80% முதல் 101% வரை கூடுதல் செலவினமாக மாறியிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். அதாவது ₹1 அரசு கொடுத்தால் ₹10 வரை சந்தையில் சுழற்சி உருவாகலாம்.
நோக்கம் என்னனா — மக்கள் செலவு செய்யட்டும், local business revive ஆகட்டும், economy வேகமா திரும்பட்டும்.
அதன் effect என்ன?
கடைகள் sales பார்த்தது.
சந்தையில் பணச்சுழற்சி அதிகரிச்சது.
சிறு வியாபாரிகளுக்கு உதவிச்சு.
பொருளாதார recovery வேகமாயிற்று.
இதுபோல Taiwan, Singapore, South Korea மாதிரி நாடுகளும் slowdown நேரங்களில் voucher-based stimulus schemes use பண்ணியிருக்காங்க. மக்கள் நேரடியாக செலவு செய்யும்படி vouchers கொடுத்து retail sales, tourism, local business activity-ஐ boost பண்ணினாங்க.
இதன் பெரிய impact என்னனா — சந்தையில் உடனடி demand உருவாகுது, small businesses survive ஆகுது, jobs protect ஆகுது, economy faster-aa recover ஆகுது.
தமிழகத்தில் ₹8,000 coupon வந்தா என்ன ஆகும்?
✅ TV, fridge, washing machine, mobile, laptop மாதிரி பொருட்கள் வாங்க பல குடும்பங்களுக்கு உதவும்
✅ Retail shops, dealers, transport, service centers எல்லாம் business பெறும்
✅ GST வருமானம் கூடும்
✅ சந்தையில் spending அதிகரிக்கும்
✅ வேலை வாய்ப்புக்கும் indirect benefit இருக்கும்
இதனால்தான் cash handoutக்கும் coupon schemeக்கும் வித்தியாசம் இருக்கு.
Cash கொடுத்தா சேமிக்கலாம்.
Coupon கொடுத்தா வாங்க வேண்டியது தான்.
வாங்கினா தான் market move ஆகும்.
சரியா design பண்ணினா இது செலவு இல்ல. Demand create பண்ணுற investment.
அதனால் எல்லாத்தையும் freebieன்னு dismiss பண்ணுறதுக்கு முன்னாடி, உலகத்தில் இதே மாதிரி திட்டங்கள் எப்படி வேலை செய்தது பார்க்கணும்.
நன்றி : விக்ரம் சதீஷ் அசோகன்
தவெகவிற்கு வாக்களிப்பதாக சொல்லும் முதன்முறை வாக்காளர்களிடம் எப்படி பேசுவது?
தவெக எந்தளவு திமுகவை விட சிறந்த கொள்கைகள், அரசியல் அறிவு, execution capacity உள்ளது என கேளுங்கள். அவர்களுக்கு எந்தளவிற்கு கட்சி கட்டமைப்பு உள்ளது, உணமையிலேயே வெற்றிபெறக் கூடிய கட்டமைப்பு இருக்கானு கேளுங்க. உடனே ஊழல்னு வந்து நிப்பாங்க.
ஊழலுக்கு எத்தனை பேர் திமுகவில் தண்டனை பெற்றுள்ளனர் னு கேளுங்க.
விஞ்ஞானம் என்பது தரவுகளின் மூலம் நிரூபிக்கக்கூடியது. விஞ்ஞான ஊழல் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கக் கூடியது. அப்படி நிரூபித்து தண்டனை பெற்று தர முடியாதவர்கள் அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டும் அதை பயன்படுத்துவாங்க.
மேலும் கோடி கணக்கில் செலவு செய்து தாவெகவில் சீட்டு வாங்கினவங்க, கோடி கணக்குல செலவு செய்து பிரச்சாரம், மாநாடு, பொதுக்கூட்டம் போடும் தவெகவினர் அந்தப் பணத்த எப்படி திருப்பி எடுப்பாங்கனு கேளுங்க.
இந்தியாவின் முதன்மை பிரச்சனைகள், சாதி ஒழிப்பு, அனைவருக்குமான கல்வி, மருத்துவம், பொருளாதார, உட்கட்டமைப்பு வளர்ச்சி. அதில் திமுகவின் பங்களிப்பு என்னெனு தரவுகளுடன் தொடர்ந்து பேசுங்க.
ஊழல் ஊழல் னு சொல்றவங்க சாதி, மதத்தை மறைமுகமாக தாங்கிப்பிடிக்கறவங்களுக்கு துணை போகிறவர்கள். நீங்க யார் பக்கம் நிப்பீங்கனு கேளுங்க.
இந்தியா வளரும் நாடு, ஊழல் இருக்கும் அது முதன்மை பிரச்சனை இல்லை. தொடர் டிஜிட்டலைசேஷன் மூலமே ஊழலை குறைக்க முடியும். அப்பவும் ஒழிக்க முடியாது. ஜப்பான் உட்பட அனைத்து வளர்ந்த நாடுகளும் வளரும் போது ஊழலை கடந்து தான் வளர்ந்திருக்கு.
இன்னைக்கும் மேல்மட்டங்களில் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் ஊழல் உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்ச் சமூகம், தமிழ்நாடு என்ற மாநிலம் மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது எப்படி வளர்ந்துள்ளது என்று தான் பார்க்க வேண்டும், அதில் திமுக வின் பங்கு என்ன என்று விளக்குங்கள். கண்டிப்பாக சிந்திப்பாங்க.