என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிடலாம்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் ஆளாத ஒரு மாநிலத்தில், ஒரு கம்யூனிஸ்ட்டின் மறைவிற்கு மாநில முதல்வர் செவ்வணக்க முழக்கங்கள் எழுப்பி வழியனுப்பி வைப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். அதனாலேயே நெகிழ வைத்தது இந்தத் தருணம்.
இது நிச்சயம் அரசியல் கணக்குகளினால் ஆனதல்ல. ஆத்மார்த்தமான நேசமும் மரியாதையும் இருந்திருக்க வேண்டும். அவர் பெருமையாக எண்ணாமல் கடமையாக செய்திருக்கிறார். நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்குமிருக்கிறது.
வருங்காலத் தலைமுறைகள் நிஜமென நம்ப மறுக்கும் அரசியல் வாழ்வை வாழ்ந்த மகத்தான மக்கள் தலைவரை, இப்படியோர் அழியா அஞ்சலி செலுத்தி வழியனுப்பியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள், தமிழக முதல்வரே 💜 @mkstalin
#BREAKING | "பாஜகவுக்கு இந்தச் செய்தி ஒரு தார்மீக மரண தண்டனை, அவர்கள் அவமானத்தில் துடிக்க வேண்டும்!"
-டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து
#SunNews | #ArvindKejriwal | #AkhileshYadav | #BJP
டெல்லி கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு புலனாய்வு அமைப்பு ஆயிரக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், அதில் சட்ட ரீதியான ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றம் அதைக் கண்மூடித்தனமாக ஏற்காது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
பாஜகவின் ஏவல் அமைப்புகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
#AravindKejrival
#ManishSisodia
தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்.. இ.பி.எஸ்ஸை சர்வாதிகாரி என அட்டாக் செய்து தி.மு.க காரராக ஓ.பி.எஸ் கொடுத்த முதல் பேட்டி
#DMK | #OPS | #CMMKStalin | #Pressmeet | #PolimerNews
திராவிட இயக்கத்தில் செயற்கரிய பல சாதனைகள் செய்த தந்தையின் கொள்கை வாரிசு!
திறன்மிக்க வழக்கறிஞர்!
மாசற்ற மக்கள் பிரதிநிதி!
கண்ணியமும் நடுநிலையும் மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவர்!
போற்றத்தக்கப் பல வளர்ச்சித் திட்டங்களை மதுரைக்குக் கொண்டு வந்த மதுரை மண்ணின் மைந்தர்!
மதுரை மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த..
‘பண்பாளர்’!
எனக்குள் அறிவுத் தேடலையும், மக்கள் பணியாற்றும் பொறுப்புணர்வையும் விதைத்த வழிகாட்டி!
பேரன்புமிக்க எனது தந்தை, திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவர்தம் பண்பையும் பணியையும் நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.
என்றும் அவர் வழித்தடத்திலேயே எனது பொதுவாழ்க்கை தொடரும்..
#IndiaTodayTNRoundTable | "We are anti-Hindi imposition. We are not anti-Hindi... We are anti-NEET and we are anti anybody trying to tell us what exam we should use to filter or select our applicants..." says Tamil Nadu’s IT & Digital Services Minister Palanivel Thiaga Rajan
@ptrmadurai #TamilNadu @sardesairajdeep
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில் தான். அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான்.
இது தான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்விணை.
- தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டுவிழாவில் பேசியது.
#தனித்தமிழ்_இயக்கம் _110
#நாடாளுமன்றம்_தமிழ்_உரைகள்
நீதிபதியின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு எதுவுமில்லை.
தீர்ப்பு என்பது வழக்கில் இருந்து எழுதப்பட வேண்டும். பணி ஓய்வுக்குப்பின் பெறப்போகும் பதவிக்கான நுழைவுத்தேர்வாக அமைந்துவிடக் கூடாது.
- திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா-2025 இன் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எனது உரை.
#திருத்தம்_மற்றும்_திரும்பப்பெறும்_மசோதா_2025
#RepealingAndAmendingBill_2025)
#நாடாளுமன்றஉரை
#Parliament_Speech
நீதிபதியின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு எதுவுமில்லை.
தீர்ப்பு என்பது வழக்கில் இருந்து எழுதப்பட வேண்டும். பணி ஓய்வுக்குப்பின் பெறப்போகும் பதவிக்கான நுழைவுத்தேர்வாக அமைந்துவிடக் கூடாது.
- திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா-2025 இன் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எனது உரை.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே ,
வணக்கம். இந்த மசோதா ஏறக்குறைய 70 க்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்களை கொண்டுவருகிறது.
சட்டங்கள் காலத்திற்கேற்றபடி மாற்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை .
ஆனால் நல்லவற்றை சிறந்தவையாக மாற்றுவதற்கும் , சிறந்ததை மிகச் சிறந்தவையாக மாற்றுவதற்கும் திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும்.
ஆனால் நல்லதை மோசமாக மாற்றுவதற்கும் , அதை விட மோசமாக மாற்றுவதற்குமான திருத்தங்கள் கொண்டு வரப்படக்கூடாது.
இங்கே நீதித்துறை சார்ந்த செயல்பாடுகளை நம்முடைய கல்யாண் பானர்ஜி அவர்கள் குறிப்பிட்டார். நீதித்துறையிலே ஒரு வழக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் பதிவு செய்யப்படுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிறது , பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வர எவ்வளவு மாதங்கள் ஆகிறது , விசாரணைக்கு வந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு எத்தனை ஆண்டு ஆகிறது என்று மரியாதைக்குரிய கல்யாண் பானர்ஜி அவர்கள் குறிப்பிட்டார்.
எங்களது அனுபவம் அதற்கு நேர் தலைகீழானது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையினுடைய ஒரு வழக்கு நவம்பர் 7 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டு , 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு , டிசம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. வெறும் இருபதே நாட்களில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் அந்தப் பிரச்சனை நூற்றாண்டுகளாக நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பல முறை தீர்ப்பு வழங்கப்பட்ட பிரச்சனை.
நீதிபதிகளின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு வேறெதுவும் இல்லை. தனக்கு அந்தப் பிரச்சனையில் ஒரு கருத்து இருக்கிறதென்றால் அதிலிருந்து விலகி வேறொரு நல்ல நீதிபதி விசாரிக்க வேண்டுமென்கிற நாகரிகத்தை நீதித்துறை தவறவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிக அதிர்ச்சியோடு நாங்கள் இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறோம்.
அதேபோல் எங்களுடைய கலாநிதி வீராச்சாமி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல , உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களே குறிப்பிட்டார்கள் “ சட்டம் இயற்றுகிற இந்த அவையில் போதுமான நேரம் எடுத்து விவாதிக்காமல் , அவசர கதியில் நீங்கள் சட்டம் இயற்றுவதால் எவ்வளவு புதிய பிரச்சனைகளை நீதிமன்றங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது ” என்று சொன்னார். வெறும் மூன்று நிமிடத்தில் நான்கு தொகுப்பு தொழிலாளர் நலச் சட்டங்களுக்கான விவாதமே இல்லாமல் நிறைவேற்றியது இந்த அவை. 140 கோடி மக்களில் பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிற மசோதாவைக் கூட எந்த விவாதமும் இல்லாமல் இங்கே நிறைவேற்றினீர்கள்.
முன்பெல்லாம் தீர்ப்பு என்பது வழக்குகளில் இருந்து உருவாக்கப்படுவது என்ற எண்ணம் இருந்தது. இப்போது தீர்ப்பு என்பது பணி ஓய்வு காலத்திற்குப் பிறகு அடையப் போகிற பதவிக்கான நுழைவுத் தேர்வுக்கான பரிட்சையோ என்று பலர் அச்சப்படுகிற அளவிற்கு தீர்ப்புகள் இன்றைக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .
நண்பர்களே நான் மிகுந்த வேதனையோடு இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த அவையிலே ஆளும் கட்சி முன்வைத்த மசோதாக்களில் எதிர்கட்சிகள் சொன்ன ஒரு திருத்ததையாவது ஏற்றுக் கொண்டு சட்டமாக்கி இருக்கிறீர்களா ? ஒரு கருத்தைக் கூட , திருத்தத்தைக் கூட ஆளும் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. உங்களது நோக்கம் நீங்கள் கொண்டு வருவதை சட்டமாக்க வேண்டும் என்பது தானேயெழிய , இந்த அவையில் 140 கோடி இந்தியர்களையும் கட்டுப்படுத்துகிற சட்டத்தை நிறைவேற்றுகிற ஜனநாயகத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கம் உங்களுக்கு சிறிதும் இல்லை. எனவே உங்களது இந்தச் சட்டத் திருத்தத்தை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன் என்பதை சொல்லி முடிக்கிறேன்.
#திருத்தம்_மற்றும்_திரும்பப்பெறும்_மசோதா_2025
#RepealingAndAmendingBill_2025)
#நாடாளுமன்றஉரை
#Parliament_Speech
#Watch | SIR-ன் நடைமுறை சிக்கல்கள்!
- கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்
இணையத்தில் கவனம் ஈர்க்கும் அவரின் தெளிவான கேள்விகள்!
#SunNews | #SIR | #PTR | #ElectionCommission
நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது உண்மையான "ஆப்பரேஷன் செந்தூர்"...தோழர் சுவெ வேள்பாரி அல்லவா? வேல் எடுத்து சுழற்றிக் கொண்டிருக்கிறார்...
கங்கையை வெல்வோம் என கவிஞர் கனிமொழி சோழர் கர்ஜித்துக்கொண்டிருக்கிறார் ..
எந்த அமெரிக்கவும் தலையிட முடியாது...இந்தியா வெல்லும்.
அமலாக்கத்துறைக்கு அஞ்சாத சிங்கங்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
எங்களை அடிமைப்படுத்த
உலகில் யாருமில்லை...
நீங்கள் அடிமை இல்லை.
ஆனால்
பாஜக வின் கொத்தடிமையாகவே மாறிவிட்டீர்கள்..
திரு எடப்பாடி அண்ணன் அவர்களின் கவனத்திற்கு..
@ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!
கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!