தென்கிழக்கு ஆசியாவில் சோழர் கொடியைப் பறக்கவிட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட வருகை தரும் நவீன பாரதத்தின் சிற்பி பிரதமர் திரு.@narendramodi அவர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் வருக வருக என வரவேற்கிறது!
தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் இணைந்து தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அழைக்கப்பட்டவருமான, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது நினைவு தினம் இன்று.
தமது பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலம், சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக் கனலை மூட்டியவர். பத்திரிக்கையாளர், புரட்சியாளர், சன்னியாசி, சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர்.
தாய்நாட்டு விடுதலைக்காக பல இன்னல்களை எதிர்கொண்டு, தமது இறுதி மூச்சு வரை போராடிய அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது நினைவைப் போற்றி வணங்குவோம்.
Our Hon PM Thiru @narendramodi avl has always displayed his deep reverence for Tamil language and culture and has taken historic steps to honour Tamil heritage nationally. The celebration of Kasi Tamil Sangamam, which reunites the timeless cultures of Kasi & Tamil Nadu, the celebration of Sourashtra Tamil Sangamam and the installation of the Chola Sengol in the Parliament are a testament to the same.
In yet another historic gesture, our Hon PM Thiru @narendramodi avl is set to visit the iconic Gangaikonda Cholapuram on July 27th and will release a commemorative coin honouring one of the greatest emperors of India, Rajendra Chola, marking 1,000 years since his Gangetic conquest, a milestone for Tamil culture & heritage. This is a historic moment that awaits Tamil Nadu & Bharat.
King Rajendra Chola was a visionary who transformed the Chola Empire into a global powerhouse. His reign was marked by expansion from southern India to the Ganges, including Bengal and the Pala empire & beyond.
Gangaikonda Cholapuram, meaning “the city of the Chola who conquered the Ganga”, was a symbol of his empire’s magnanimous glory and remained the Cholan Capital for 250 years. The city remains a timeless testament to a place that once functioned as the fulcrum of Bharat’s maritime, cultural, and strategic powerhouse.
King Rajendra Chola built the mighty “Chola Gangam” pond at his new capital, Gangaikonda Cholapuram. After his historic victory in the Gangetic plains, he brought sacred Ganga water to fill this vast lake, celebrating his northern conquests and legacy.
The unmatched naval supremacy of his reign made India a dominant force in the Indian Ocean and Southeast Asia, extending up to present-day Indonesia & Malaysia. Establishing Gangaikonda Cholapuram as his capital, a marvel of architecture and administration, he was a pioneer in local self-governance and fostered trade from China to the Arab world.
Our Hon PM’s tribute not only honours a timeless icon of Indian unity but also revives national pride in our civilizational achievements. By releasing this coin, our beloved PM reminds us to celebrate those who upheld the greatness of India both culturally and geographically, across the subcontinent and beyond.
July 27 is indeed a proud day for India, marking both its glorious past and vibrant future!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் எனப் போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படமால் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023 செப்டம்பர் மாதம் தான் அதைச் செயல்படுத்தியது. அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றியது திமுக. இதனால், தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க, தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு. முன்பு தகுதி இல்லை எனக் கூறி நிராகரித்த நிலையில், இப்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என நமது சகோதரிகள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிக் கொடுக்க திமுக அரசு முடிவு செய்தாலும் தமிழக பெண்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறையப் போவதுமில்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.
அப்படி உண்மையில் திமுக மனம் திருந்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்பினால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும். அதுதான், திமுக அரசால் ஏமாற்றப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் நியாயமாக அமையும்.
மதுரை ஆதீனம் அவர்களை துன்புறுத்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்..!
அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் விதத்தில் தமிழக காவல்துறையும் திமுக அரசும் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறையினர் துன்புறுத்தினர். தற்போது மதுரை ஆதீனம் அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விசாரணை என்ற பெயரில் உள்நோக்கத்துடன் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத் தலைவர்களையும், மடாதிபதிகளையும் திமுக அரசு தொடர்ந்து அவமதித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மதுரை ஆதீனம் அவர்களின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@tnpoliceoffl
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், சிறந்த பேச்சாளருமான தியாக சுடர் ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தில் நமது கட்சியின் வளர்ச்சிக்காகவும், தேச நலனுக்காகவும் சமூகப் பணிகள் மேற்கொண்டு வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்று நமது கட்சி அடைந்துள்ள வளர்ச்சி என்பது, ஆடிட்டர் ரமேஷ் ஜி போன்றோரின் உயிர் தியாகங்களால் நிகழ்ந்தவையாகும்.
மதிப்பிற்குரிய ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் நினைவு கூர்வோம்.
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுமக்களை வஞ்சிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில், பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000க்கும் அதிகமான ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறிய திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது.
ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கும்போதும், பொய்யான நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி வருகிறது திமுக அரசு. ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும்போதும், அவர்கள் கோரிக்கையை அத்தோடு மறந்து, விளம்பர ஷூட்டிங்கில் நடிக்கச் சென்று விடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்.
முதலமைச்சர் தொடங்கி, ஒட்டு மொத்த திமுக அமைச்சர்களும், சிலை வைப்பது, பெயர் வைப்பது என, ஊடகங்களில் ஒரு நாள் தலைப்புச் செய்திக்காக அலைந்து கொண்டிருக்கிறார்களே தவிர, உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, அற வழியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக அரசின் பதில் என்ன?
வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அவல நிலையில் வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உடனடியாக, பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கொச்சி - கோவை - கரூர் பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டம், விவசாய நிலங்கள் வழியாகச் செல்வதால், பாதிப்புக்குள்ளான விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கப் போராட்டக் குழு சார்பில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைத்திட, துணையிருப்போம் என்று உறுதி அளித்தோம். உடன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர், சொல்லேருழவன் ஐயா திரு. செல்லமுத்து, @BJP4Tamilnadu விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் திரு @GKNagarajBJP, திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. KCMB சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக பாஜக சார்பில், விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் @HardeepSPuri அவர்களை சந்தித்து மாற்று வழி குறித்துப் பரிசீலிக்க கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஏற்கனவே கெயில் நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதால், தேசிய நெடுஞ்சாலை எண் 544 வழியாக புதிய குழாய்கள் பதிக்க வாய்ப்பு இல்லை என்று, தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 81 வழியாக கொண்டு சென்றால், சூலூர், பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, மாநிலச் சாலைகள் வழியாக கொண்டு செல்ல, மாற்று ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய, தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், மிக முக்கியமான இடங்களில் உள்ள தங்கள் விவசாய நிலங்களைக் குழாய்கள் பதிப்பதற்காக கொடுத்த விவசாயிகள், தற்போது அந்த நிலங்களில் இருந்து பெரிய அளவில் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோரும் கோரிக்கையையும், முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சியை மாநில பொதுச் செயலாளர் அண்ணன் கருப்பு முருகானந்தம் அவர்கள் திறந்து வைத்தார் @BJP4TamilNadu@MSBalajiMSB
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகையில் தங்குமிடம் திட்டம்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2,588 குடியிருப்புகள் மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன. #TNWelcomesAmitSHAH
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம்..சாலையோர வியாபாரிகளுக்கு பிணை இல்லா கடன் 10,000 வரை வழங்கும் திட்டம் தந்தவரே வருக வருக. #TNWelcomesAmitSHAH