பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!
நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
இன்றைக்கு ரேஷன் கடைகளில் ரூ 2000 ரொக்கத்துடன்,அளிக்கப்பட்ட 14 பொருட்கள் தொகுப்புப் பையில் இருந்த பொருட்கள் அனைத்துமே மிகுந்த தரம் என மக்கள் பாராட்டினார்கள். இதுவரை நாங்கள் பார்த்திராதளவு தரமாக இருக்கு என பெண்கள் வீட்டுக்கே வந்து சொல்லிச் சென்றனர். @mkstalin@r_sakkarapani 👏🙏💐
சிறப்பான ஆட்சி என்பதற்கு சாட்சியாக உங்கள் தொகுதியில் @mkstalin திட்டப்படி மதுரையில் 801 மனுக்களுக்கு தீர்வளித்து,100 பயனாளிகளுக்கு அமைச்சர் மூர்த்தியும் இணைந்து உதவிகள் வழங்கினோம். நிலுவையிலுள்ள பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 3410 மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு செய்தோம்.
ஒன்றிய அரசின் #Hydrocarbon திட்ட ஏல அறிவிக்கையில் புதுக்கோட்டை- வடதெரு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் இத்திட்டம் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை. இதனை @PMOIndia-விடம் வலியுறுத்தியுள்ளேன்.
கண்ணை இமை காப்பது போல காவிரிப்படுகையைக் காப்போம்!
"பிரதமரும், பிற மாநில முதலமைச்சர்களும் பாராட்டும் அளவுக்கு சரியான திட்டமிடலோடு ஆட்சியை கட்டமைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்"
- @dinakaranonline பாராட்டு.
#CMMKStalin#DMK
திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக் காவலர் சகோதரர் புஷ்பராஜ். கரும்பூஞ்சை நோயால் பாதிப்புக்குள்ளானவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் பூரண குணமடைய வாழ்த்துகள். @Subramanian_ma
தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன்.
கழகத்தினர் நேரில் வர வேண்டாம்!
பேரிடர் காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்; காலம் மாறும்; உங்கள் அன்பு முகம் காண வருவேன்!
#LetterToBrethren