No better way to start 2026 than seeing Thalaivar’s smile.
#SuperstarRajinikanth greets fans this New Year morning with positivity and love. ❤️⭐️🤘🏼
📸 : @Vaibhavvivekk
டைம் டிராவல் பண்ணி 25 வருஷம் பின்னாடி போன மாதிரி இருந்துச்சு.. இன்னும் 25 வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் ரீலிஸ் பண்ணா நல்லா தான் இருக்கும்.. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'படையப்பா' படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் குஷி பேட்டி
#Chennai | #HBDRajinikanth | #Fans | #PadayappaReRelease | #Movie | #Celebration | #PolimerNews
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🏻
இன்று 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar@rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!
#HBDSuperStarRajinikanth