திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?
Power is temporary, but true statesmanship is eternal 🖤❤️
Through decades of relentless public life, you have shown the nation what it means to lead with dignity, resilience, and an uncompromising commitment to the people.
You are not just a political leader; you are the steadfast shield of the Dravidian ideology and the ultimate guardian of Tamil Nadu's rights.
#SalutingStalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர்,கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census.
This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented.
Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation.
It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years.
Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years.
🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
தேர்தல் நாள் :- 23-04-2026
#VoteForDMK