அண்ணா 1967ல் காங்கிரஸ் கட்சியை அடித்து நாக் அவுட் செய்தார். அந்த கட்சி எந்திரிக்கவேயில்லை. பின்னர் நாங்கதான் பாவம்னு ஐசியூல அட்மிட் செஞ்சு, இப்பத்தான் நார்மல் வார்ட்டுக்கு கொண்டு வந்தோம். இப்ப சொல்றாங்க நாங்க அடிச்சா தாங்க மாட்டேன்னு.
திமுக எம்.எல்.ஏ எழிலரசன்.
ஆட்சிக்கு வந்து அம்பது நாட்கள் தான் ஆகிறது. இதுவரை தனிக்கட்சி மெஜாரிட்டி என்று கிடைக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாக எதிர்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள். ஆண்ட கட்சி என்ற முறையில் ஜெயலலிதாவை பாசிஸ்ட் என்று இன்று வரை கூறுகின்றனர். விஜய் நிச்சயம் ஜெயலலிதாவை மிஞ்சுவார்.
எனக்கென்னவோ புரட்சி பயல் வைகோவால விஜய் பெரிய பெரிய சிக்கல்ல மாட்டுவாருன்னு தோணுது. இரண்டு எம்.எல்.ஏக்கள ராஜினாமா செய்ய சொன்ன விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவேன்னாருன்னு சொன்னதாக உண்மையான வாக்குமூலம் கொடுத்தது ஆரம்பம் தான்.
விகடன் இ மேகசின் என்கிற ஆனந்த விகடன் குரூப் பத்திரிக்கையின் இப்போதைய செய்தி. 'தவெக விஜயபாஸ்கர் இணைப்பு விழாவில் காலை உணவுக்கான மெனு என்ன?' எவ்வளவு சமூக அக்கறையோடு இந்த பத்திரிகை செய்தி வெளியிடுது பார்த்தீர்களா?
கில்லி சரத் தவெக அமைச்சராம். போதை பொருள் உபயோகித்ததாக அவர் மீது எதிர்கட்சிகள் புகார் சொல்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, சரத்தை புகழ்ந்து நிறைய பதிவுகள் வருகின்றன. அத்தனையும் ஒன்று போல இருக்கின்றன. சந்தேகமேயில்லை. இணைய கோல்மால் இது. எப்படியெல்லாம் கிரிமினல் வேலை செய்கிறார்கள்
தற்கொலை செஞ்சுக்கணும்னு தோணுதுன்னு நண்பர் சொன்னார். நான் சொன்னேன் 'காதர்பாய் பேச்சு கேளுங்கள்' னு சொன்னேன். நண்பர் ' அவ்வளவு தன்னம்பிக்கையோட பேசுவாரா?'ன்னு கேட்டார். 'இல்லையில்ல இவரெல்லாம் உயிரோடு இருக்கும் போது நாம ஏன் சாகணும்னு தோணும்' னு சொன்னேன்.
தலித் படுகொலைக்கு ஒருதலித்தே சமூகநீதி அமைச்சரானாலும் நீதி கிடைக்காது. தூத்துக்குடி ஆகாஷ் டெலிஷன் என்ற தலித் இளைஞர் படுகொலைக்கு இதுவரை வன்னியரசு அமைச்சரான பின்னும் நீதி கிடைக்கவில்லை. தலித்திய பிழைப்புவாதிகளால் ஒன்றும் ஆகப் போவது இல்லை. வர்க்க ஒற்றுமையே வழி.
ஒரு கிராஸ் பெல்ட் மந்திரியோட கி.வீரமணி ரயில்ல சந்திச்சதெல்லாம் இருக்கட்டும். கி.வீரமணிய நம்ப முடியாது. திமுக கை இறங்கியதும் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி வீராங்கனை பட்டம் கொடுத்தவர்.
ஆமா, வைகோவுக்கும் டி.ராஜேந்தருக்கும் என்ன பிரச்சினை? டி.ஆர் வைக்கப்போரை நம்பி போனாலும் வாழலாம். வைகோவை நம்பி போனால் வாழ முடியாதுன்னு எதுகை மோனைல பொளந்து கட்றாரே...
டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அரசு பதவி அல்ல. திருமாவளவன்.
அந்தாள் ஒரு கார்ப்பரேட். திருமாவளவன் எப்படி வரிந்து கட்டிக் கொண்டு இறங்குகிறார் பார்த்தீர்களா? அது சரி திருமா அவருக்கு தமிழ்நாடு மக்கள் வரிப்பணம் தான் தரப்படுகிறது.
டெல்லி சிறப்பு பிரதிநிதி விவகாரம் தவெகவின் உள் விவகாரம்.
திருமாவளவன்.
தமிழ்நாட்டில் இருக்கும் விவரமான அரசியல்வாதி என்று பலரும் நினைக்கிறார்கள். ஒரு அமைச்சர் பதவி என்னவெல்லாம் செய்கிறது?
என்னுடைய அடுத்த நாவல் 'நக்சல்பாரி குடும்பம் ' தற்போது வெளியாகி உள்ளது. நக்சல்பாரிகள் தங்களை மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தையும் இயக்கத்தில் ஈடுபடுத்தினார்கள். அப்படியொரு புரட்சிகர குடும்பத்தை நாவலாக எழுதியுள்ளேன். வாசகர்களுக்கு புதிய அனுபவமாக இந்த நாவல் அமையும்.
90430 50666
திமுக அதிமுக தவெக காங்கிரஸ் பிஜேபி என மக்களை முதலாளித்துவத்திற்கு அடகு வைக்கும் கட்சிகளுக்கு கொள்கை புடலங்காய் எதுவும் கிடையாது. என சொல்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட். ஆளும் வர்க்கத்தின் ஒருபிரிவை உயர்த்தி பிடிப்பவன் நிச்சயம் சந்தர்ப்பவாதி. சிபிஐ சிபிஎம் இரண்டுக்கும் பொருந்தும்.