இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடுபவர்களில் எத்தனை பேர் சூரியனை பரம்பொருளாகக் கருதி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்? யார் தமிழர் மரபைj பின்பற்றுபவர்கள்?யார் சீர்குலைப்பவர்கள்?
பொங்கல் பண்டிகையை விநாயகர் மற்றும் சிவபெருமானைத் தவிர்த்து சமத்துவம் என்றோ மதச்சார்பற்ற பொங்கல் என்றோ திராவிட பொங்கல் என்றோ நம் முன்னோர்கள் கொண்டாடியதாக யாதொரு சான்றுகளும் இல்லை. இல்லவே இல்லை. சூரியனைக்கூட "பரம்பொருளாக" எண்ணிதான் வழிபட்டனர்.