ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதாது:
சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது கடன் தள்ளுபடி தொகையை ரூ.75,000 உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பும் உழவர்களின் கடன் சுமையை போக்குவதற்கு போதுமானது அல்ல.
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு , குறு மற்றும் பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். அதை விடுத்து 6.22 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35000 மட்டும் கடன் தள்ளுபடி செய்வது நியாயமல்ல.
2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. அதை நிறைவேற்றுவது தான் அறமாக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின் விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல. கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரு.2044 கோடி அளவுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் அளவு ரூ.5932 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் தள்ளுபடியை இந்த அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் விதிகளும், நிதிநிலையும், குறைந்தபட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனையாவது முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்காதா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டிலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.
எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu
@TNDIPRNEWS@Actor_Vijay@TVKVijayHQ@imrajmohan What type of an order is this.
Still not beneficial to many of poor farmers.
3 acre farmer can get upto 1.5 lacs amount.
Just 35,000 is just an eye wash loan waive.
Why does farmers with More than 5 acre also gets that same waive?
முடியாது! முட்டு கொடுக்க முடியாது!
விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் தான் இந்த பாரபட்சமான கடன் தள்ளுபடி என்பது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் வாக்குறுதி தரவில்லை உத்திரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம்!
உடனடியாக சிறு குறு விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் மற்றும் பெறு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யுங்கள்.
உங்களுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது IASகளின் பேச்சை கேட்டு இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது! இது தவெகவின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும்!
தேர்தல் வாக்குறுதி படி செயல்படுத்துங்கள்!
- திருவண்ணாமலையில் தவெகவின் சார்பாகப் போட்டியிட்ட விவசாயி அருள் ஆறுமுகம்
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
@CMOTamilnadu@TVKVijayHQ This is pure betrayal Vijay sir. 🙏🙏
We, as a farmer (below 3 acre) family won't have any benefits from your government. You could have waited for 2 months and announced full waive of loan
I cannot express my anger towards you in words.
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
@TNDIPRNEWS@Actor_Vijay@TVKVijayHQ@imrajmohan This is pure betrayal Vijay sir. Your 10 yr long fan from poor farmer family is disappointed with this announcement of yours.
We, as a farmer family don't have any benefits from your family.
I cannot express my anger towards you in words.
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
I extend my heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam (TVK) on their impressive victory in the 2026 Tamil Nadu Assembly elections. I also convey my warm wishes to Shri @TVKVijayHQ on being sworn in as the Chief Minister of Tamil Nadu.
This verdict reflects the aspirations, trust and democratic will of the people of Tamil Nadu. I am confident that under his leadership, Tamil Nadu will continue its journey of progress, welfare and inclusive development.
Wishing him and his government success in serving the people with dedication and commitment.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as the Chief Minister of Tamil Nadu. The Central Government led by PM Shri @narendramodi has assured all possible support to the State Government to further the progress of the state. May he have a fruitful tenure ahead. @TVKVijayHQ
Heartfelt congratulations to @TVKVijayHQ Chief Thiru @actorvijay AVL, on taking oath as the Chief Minister of Tamil Nadu, and to all those who took oath as Ministers.
I wish the new government will fullfill the aspirations of the people, ensure transparent and progressive governance, and lead Tamil Nadu towards greater growth and prosperity.
Dear Thiru Vijay avargal , @actorvijay
I congratulate you on taking oath as Chief Minister of #TamilNadu in the presence of Shri @RahulGandhi ji.
As Chief Minister of Tamil Nadu, I strongly believe that you will deliver welfare for the poor, justice for all and take your state to greater heights in development.
Hearty congratulations and best wishes.