அமெரிக்கா சென்றுள்ள ஆர் .எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஹிந்து சமுதாய மக்களுடன் உரையாற்றவுள்ளார்
#RSS#USA#America#MohanBhagwat
உள்நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய சர்ஜிக்கல் ஆபரேஷன்
12 ஆகஸ்ட் 2026, நள்ளிரவு நாம் அனைவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த போது, பாதுகாப்பு படையினர் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, பாகிஸ்தான் கைக்கூலிகள் 253 பேரை, 14 மாநிலங்களில் கைது செய்தனர்.
இவர்களில் ஒரு குழு மக்கள் கூடும் இடங்கள், வழிபாடு தலங்கள், மருத்துவமனைகள், கண்டோன்மெண்ட் இடங்கள் உட்பட பல இடங்களை வேவு பார்த்து, தகவல் பரிமாறியுள்ளனர்.
இன்னொரு குழு, வெடிகுண்டுகள், அதிபயங்கர ஆயுதங்கள் மூலம, சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தன.
புலனாய்வு அமைப்புகள் அதிதீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு, ஒரே நாளில் அத்தனை பேரையும் வளைத்து பிடித்தது
#ஜம்புத்தீபபிரகடனம்
1801 ஜூன் 16 அன்று மருது பாண்டியர்கள் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனம், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க அழைப்பு விடுத்த வரலாற்றுச் சாசனமாகும். 1857 சிப்பாய் கலகத்திற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விடுதலைக் குரல் எழுந்தது.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
"ஜம்புத் தீவு" என்பது புராணங்கள், ஜைன மற்றும் பௌத்த இலக்கியங்களில் பாரத தேசத்தைக் குறிக்கும் பெயராகும்.
இந்தச் சொல்லின் மூலம் மருது பாண்டியர்கள், பிராந்திய எல்லைகளைத் தாண்டி முழு பாரத மக்களையும் நோக்கி அழைப்பு விடுத்தனர்.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
1800–1801 தென்னிந்தியப் புரட்சிக்கு ஜம்புத் தீவு பிரகடனம் அரசியல் அடித்தளமாக அமைந்தது. சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்ப்பு இயக்கங்கள் வலுப்பெற்றன.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் இந்தப் பிரகடனம் ஆங்கிலேயர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. அதனால் தென்னக கிளர்ச்சியை அடக்க பெரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
1801 அக்டோபரில் மருது பாண்டியர்கள் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அவர்களின் தியாகமும் சுதந்திரச் சிந்தனையும் பின்னாளில் பல தலைமுறைகளை ஊக்குவித்தது.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
பல வரலாற்றாசிரியர்கள் ஜம்புத் தீவு பிரகடனத்தை "இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனம்" எனக் குறிப்பிடுகின்றனர். இது 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பே தேசிய உணர்வை வெளிப்படுத்தியது.
#ஜம்புத்தீபபிரகடனம்2026#JambuDweepProclamation2026
தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மருது பாண்டியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர்களின் போராட்டம் ஒரு பிராந்திய கிளர்ச்சியாக மட்டுமல்லாமல் தேசிய எதிர்ப்பின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பல நாடகங்கள், புத்தகங்கள் மற்றும் கவிதைகளை வடித்த பன்முகத் திறமையாளர் வீர் சாவர்க்கர்!
#வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi
“ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டால் தீட்டுப்படும் ஒரு கடவுள், கடவுளாகவே இருக்க முடியாது" என முழங்கி தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் வீர் சாவர்க்கர்!
#வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi
50 ஆண்டுகள் அந்தமான் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் தேசப்பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்ட தளராத வீரன் வீர் சாவர்க்கர்!
#வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi
சிறைச்சுவர்களில் வடித்த 10,000 வரிக் கவிதைகளைத் தன் நினைவாற்றலால் மனப்பாடம் செய்து, விடுதலையான பின் மீண்டும் காகித வடிவில் கொண்டு வந்த இரும்பு மனிதர் வீர் சாவர்க்கர்!
#வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான 1857 ஆம் ஆண்டு எழுச்சியை, "இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்" என்று பிரகடனப்படுத்திய முதல் பாரத வீரன் வீர் சாவர்க்கர்!
#வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi
“பாரதத் தாய்! என் மனதை உனது பாதங்களில் சமர்ப்பித்துவிட்டேன்; தேச சேவையே தெய்வ சேவை என்று நம்பி உனக்குச் சேவை செய்தேன்!" — வீர் சாவர்க்கர். #வீரசாவர்க்கர்ஜெயந்தி#VeerSavarkarJayanthi