இறந்துவிடவில்லையென்ற
சோகத்தை இருமி இருமியே மெய்ப்பித்துக்
கொண்டிருக்கும்
நான்! ஜனத்திரள் பிதுக்கியதில் சிறகொதுங்கினேன், என்
கையில் அவலின் கடிதம் அதன்
ஓரத்தில் கிழிந்து கொண்டிருந்தது என் ஆயுள்..🖤✨
உன்னை அறவே வெறுக்கிறேன்
மனதில் எழத்தான் செய்யும் ஆயினும்
இப்பிறவியில்
நான் பார்க்கவே விரும்பாத முகம் உனது
இனி என் வாழ்விற்குள் எத்தனை பெண்கள் வந்தாலும்
வந்தார் அனைவரும்
உன்னிலிருந்து என்னைக் காப்பாற்ற முடியாமல் தோற்பர்.
மறக்க முடியாதபடிக்கு மனதில் பதிந்த உன்னை
அறவே வெறுக்கிறேன்
ஒரு பார்வையில்
ஒரு சிரிப்பினில்
ஒரு அழுகையில்
கண்டுகொண்டேன்
நீ என்னை விரும்புவதை
நீ என்னைக் காதலிப்பதை
நீ எனக்காக உருகுவதை,
இனி நீ என்னுடன்
நெருங்கு
தொலைவுசெல்
வந்து வாழ்
வாராது போ
ஏதாகினும் என்ன?
என்னை உன் வாழ்வில் இருந்து அகற்ற முடியாது
அதற்காகத்தான் இம்மகிழ்வு
என் சகலமே..!