என்னை அந்த வீதி ஞாபகம் வைத்திருக்கிறது இன்னும்
நானும் அந்த வீதியை ஞாபகம் வைத்திருகின்றேன் ;
ஒரு காதல் தான் அந்த வீதியின் மேல்,
சற்றே வலிமிகு காதல்...✨♥️
அன்பெனும் பெயரில் நீ செய்திடுபவைகளைத் தயகூர்ந்து விட்டொழி !
கருணையின் கண்கொண்டு எனைப்பார்,
உன் அன்பினால் நான் பட்ட வடுக்கள் ஏராளம் ;
அன்பு ஒரு சிறை,
நேசித்தல் ஒரு மனநோய்...🥺
சிலரை நாமாக
தேடிப் பெறுவதில்லை வாழ்வில் ;
அவர்களாகவே வந்துவிடுகிறார்கள் !
பின்னர்,
தவிர்க்க முடியாத அளவிற்கு
ஒன்றியும் விடுகிறார்கள் ;
இவை எல்லாம் தான்
வாழ்வின் அற்புதம் என்றாகியும்
விடுகிறார்கள் - தொலைந்த பின்னும்.♥️