மாற்று இயக்கத்தை தழுவி வாழ்ந்தாலும்..
மனப்பூர்வமான உண்மையை உலகிற்கு எடுத்துரைத்த திரு.காரத்திக்சிதம்பரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
நம் எதிரிகளுக்கு தெரிகின்ற உண்மையான உணர்வுகளின் தாக்கமும்,ஏக்கமும்,பயமும்..
நம்மவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது!
பிரதமர் மோடி அவர்கள் ஒரு முறை கூறினார்கள்.
பாரதமானது உலகமே கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் என்று..
அதுதான்"மகேஸ்வரா அஸ்திரம்".
இதுவெறும் ஆயுதம் மட்டும் அல்ல..
ஒரே ஒரு நிமிடத்தில் எதிரிகளை அழிக்க வல்லமை கொண்ட "சிவனின்" அஸ்திரம்.
நம் பாரத தேசத்தின் மீது..
இஸ்ரேல் பிரதமருக்கு இருக்கும் பற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட தமிழகத்தில் உள்ள இந்த தேச துரோக கும்பல்களுக்கு இல்லையே..
தன் தாய் தேசத்தை விடவா..
பதவி பெரிது..
பகட்டு பெரிது..
மானங்கெட்ட
ஓட்டுப்பொறுக்கிகளே..
இனியாவது திருந்துங்கள்!
பணத்திற்கான அடையாளம் வேற்று மொழியில் இருப்பதால் மாற்றி விட்டீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்களில் 95% பெயர்கள் எல்லாம் வேற்று மொழிகளில் தான் இருக்கின்றன!! ஏன்
மாண்புமிகு முதல்வர் பெயர்கள் உட்பட..
அதையெல்லாம் மாற்ற முடியுமாங்க..
ரூ.என்பதே தமிழ் எழுத்து அல்ல
ஆமாங்க..ஆமா..
பெருந்தலைவர் உயர்திரு காமராஜர் அவர்களும்,அய்யா திரு.கக்கன் அவர்களும் தன் வாழ்நாளில் இறுதிவரை தனது துண்டை இடுப்பிலேயே தான் கட்டிக்கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள்.
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதே பொய்யையும்,புரட்டையும் சொல்லி தமிழக மக்க��ை ஏமாற்றி வாழ்வீர்கள்.
மத்திய அரசு இந்தி திணிப்பு என்று எங்கு கூறியிருக்கின்றது.
இவர் உறக்கத்தில் இல்லாத ஒவ்வொரு மணித்துளியிலும்..
ஒரே செயலுக்கு ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமாக பதிலை பதிவிடை செய்வார்கள்.
அதனால்..
இவர் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூடாது.
பாரத தேசத்தின் ஒவ்வொரு ��ுடிமகனும் பெருமை கொள்ள வேண்டிய அற்புதமான அழகான நிகழ்வு
நமது தேசத்தின் வரலாற்றில்..
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியைப்போன்று
தன் தாய் தேசத்திற்கு உலகளவில் மரியாதையையும்,பெருமையையும் தேடிக்கொடுத்த பிரதமர் கிடைப்பது என்பது அரிதிலும் அரிது.
பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்கள் கொள்கை உணர்வுகள் இல்லாமல் தான் நல்லாட்சி கொடுத்தார்களா!
இந்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு திணிக்கவ���ல்லையே
அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரத்திற்காக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொடுங்கள் என்று சொல்கின்றது.
திமுக வை சார்ந்த தலைவர்கள் வாரிசுகளில் 90 %பேர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை நன்கு கற்று தேர்ந்துள்ளார்கள்.
தமிழகத்தில் இன்றைய சூழலில் 35 வயதிற்கு உட்பட்ட மெத்தப்படித்த இளைஞர்கள் முதற்கொண்டு தற்பொழுது படித்துக்கொண்டிருக்கின்ற மாணாக்கர்கள் வரை..
90 % பேருக்கு தமிழ் தெரியாது
தமிழக கல்வி அமைச்சரின் மகன் தழிழ் மொழியை விடுத்து பிரெஞ்ச் மொழியில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்களின் மகன் இன்பநிதி அவர்கள்அந்நிய தேசத்தில் அந்நிய மொழியில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.
ஊருக்குத்தான் உபதேசம்.
தமிழக மக்களே விழித்துக்கொள்ளுங்கள்..
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில்..
அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை குழந்தைகளும் தமிழ்,ஆங்கிலம் ம
தவிர இலவசமாக ஒரு மொழியை படித்துக்கொள்ளலாம் என்கின்ற விதியை கொண்டு வந்துள்ளது.
அது இந்தி மொழி என்கின்ற கட்டாயம் எல்லாம் கிடையாது.
@shanmugamchin10 மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறவில்லையே..
தேசத்தின் வளர்ச்சிக்காக..
புதிய கல்வி கொள்கையை தேசமே ஏற்றுக்கொள்ளும் போது..
தமிழகம் மட்டும் என்ன விதிவிலக்கா?
அய்யன் ஆறுமுகப்பெருமானின்,
ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையில் வீட்டிருக்கும் என் அப்பன் குமரன் ஆலயத்தை மீட்டெடுக்க
மாநில தலைமையின் உத்தரவின் பேரில்.. இன்று 04.02.2025 மாலை சரியாக 3.00 மணிக்கு என் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நிகழ்த்திய அற்புத நிகழ்வு..
தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்கின்றது என்று கேட்கின்ற..
"திராவிட தற்குறிகளுக்கு" இந்த பதிவு சமர்ப்பணம்.
மத்திய அரசு
தமிழகத்திற்கு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதை தமிழக அரசு விரும்பவில்லை போலும்..
பணமாக (நிதி)ஒதுக்க வேண்டும் என்று விரும்புவது போல் தெரிகின்றது.
@annamalai_k திருப்பரங்குன்றம் நிகழ்வானது மனித குலத்தின் அமைதியை தகர்க்கின்ற செய்தியாக தெரிகின்றது.
அங்கே சுற்றி..
இங்கே சுற்றி..
இறுதியாக இந்துக்களின் வாழ்வியல் மரபுகளிலேயே கையை வைத்து விட்டது ..திராவிடம்.
சென்னிமலையில் ஆரம்பித்த பிரச்னை இன்று ஆறுபடை வீட்டில் வந்து நிற்கின்றது.
வருத்தம்!