"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரிய பெருந்தலைவர் #காமராசர் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். @mkstalin அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இபிஎஸ் ஆதரவாளர்களின் அராஜகத்தால் தாக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ஆதரவாளரை கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் @OfficeOfOPS அவர்கள் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.
தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கி தாய்மண்ணிற்காக இன்னுயிர் நீத்த விடுதலை வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்
நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவன்
அம்மாவின் உண்மை தொண்டன்
வி ப ஜெயப்பிரதீப்
நீதி வேண்டும்!!
எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.
விடுதலை வீரரும், மக்களவை, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவரும், எளிமை, உண்மை, நேர்மை ஆகிய அருங்குணங்களோடு, கரைபடியா கரங்களுக்கு சொந்தக்காரருமான திரு.கக்கன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உள்ளது. #StopHindilmposition
உழைக்கும் மகளிருக்கு பெரிதும் உதவும் "அம்மா இரு சக்கரவாகனத் திட்டத்திற்கு" மூடு விழா நடத்தியுள்ள திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள்!
அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என #chennaihighcourt அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் #AIADMK-விற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று!
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடுக! #FuelPriceHike#PetrolDieselPriceHike