அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்��� ஆலோசனைக் கூட்டம்
@CMOTamilnadu @TNDIPRNEWS
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று(22.08.2026)
மதுரை மாவட்டம், மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் ரூபாய் 19.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA 2025–2026) கீழ், குட்லாடம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் தோட்டத்தினைப் (Nursery) பார்வையிட்டார். அங்கு பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் பராமரிப்பு, நீர் மேலாண்மை மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ், குட்லாடம்பட்டி பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 5.3 கி.மீ நீளச் சாலைப் பணிகளைப் பார்வையிட்டு, சாலையின் தரம் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு’ (Kalaignar Centenary Aeruthazhuvuthal Arena) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் (Madurai Integrated Textile Park - MITPL) இயங்கி வரும் பல்வேற�� தொழில் உற்பத்தி அலகுகளை நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்ப���டு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரகனூர் சுற்றுச்சாலை அருகில் இருந்து பழைய தொண்டி சாலை சக்குடி வரை வைகை ஆற்றின் வடகரையில் ரூ.130 கோடி மதிப்பீ���்டில் சுமார் 8 கி.மீ தூரத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்
மதுரை மாவட்டம், மாநகராட்சி மண்டலம்–4, வார்டு எண் 86 வில்லாபுரம் நகர்ப்பு��� ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வார்டு, மருந்தகம்,ஆய்வகம்,பதிவு செய்யும் இடம், உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்
மதுரை மாவட்டம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் மதுரை தெற���கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சேவைகள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.