மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.10.2026)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.10.2026)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
எச்.ஐ.வி./எயிட்ஸ் தீவிர தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.10.2026)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.1,02,500/- நிவாரணத் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், தென்கரை முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி திருமதி க.பஞ்சு அவர்கள் கடந்த 23.12.2025 அன்று பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, அவரது கணவர் திரு. சி. கண்ணன் அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பொதுப்பிரிவினருக்கான விபத்து மரண நிவாரணத் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவிற்கான நிவாரணத் தொகை என மொத்தம் ரூ.1,02,500/- வழங்குவதற்கான வழங்கினார்.
மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
கனமழையினால் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில், மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நீர்வளத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாக வெளியேற்றவும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் தடையின்றி வழங்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசுத்துறைகளும் முழு ஒருங்கிணைப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அன்பழகன், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாப்தீன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் முக்கியப் பகுதியான மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலைய சுற்றுவட்டாரத் தாழ்வான பகுதிகளில், கனமழையினால் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலைகள் மற்றும் பாதசாரிகள் நடைபாதைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு, அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களைத் தொடர்ந்து கண்காணித்திடவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் மின்மோட்டார் பம்புகளை (High-power Dewatering Pumps) உடனுக்குடன் பயன்படுத்தித் தேங்கும் மழைநீரை விரைந்து அப்புறப்படுத்திடவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் பந்தல்குடி கால்வாய் பகுதியில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் தடையின்றி சீராக வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கால்வாயின் நீரோட்டப் பாதையில் எவ்வித அடைப்புகளும் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்திடவும், கரைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாதவாறு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2026),
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,
மதுரை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட வைகை - யானைக்கல் தரைப்பாலம் பகுதியில், வடகிழக்கு பருவமழையினால் பெருக்கெடுத்து வரும் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி சீராகக் கடந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பாலத்தின் கீழ்ப்பகுதியில் மரக்கட்டைகள், நெகிழி மற்றும் கழிவுகள் ஏதேனும் அடைப்பு ஏற்படுத்தாத வண்ணம் உடனுக்குடன் அகற்றிடவும்,
ஆற்றங்கரைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.10.2026),
மதுரை மாவட்டத்திற்கு நாளை (25.10.2026) ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார்.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று(24.10.2026)
மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆ.கொக்குளம் ஊராட்சி, செக்கானூரணியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
@CMOTamilnadu l @TNDIPRNEWS l @CTR_Nirmalkumar

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.10.2026)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டு, கூட்டுறவுத் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (23.10.2026)
மதுரை, ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம் – செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 15 மாவட்டங்களுக்கான "மூன்றாவது மண்டல மாநாட்டில்" அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
@CMOTamilnadu l @TNDIPRNEWS