சேலம் மாவட்டத்தில் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் பணியாளர்களிடம், "இனி நீங்கள் வேலைக்கு வரக்கூடாது; தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டும்தான் வேலை வழங்கப்படும்" என்று கூறி, தவெக நிர்வாகி சக்தி என்பவர் மதுபோதையில் அரிவாளை எடுத்து மிரட்டித் தாக்க முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கிடைத்து இரண்டு மாதங்கள் கூட முழுமையாகாத போதே தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தவெக நிர்வாகிகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்கத் தனி அதிரடிப்படையை உருவாக்கும் அளவிற்குச் சூழல் மாறியுள்ளது.
பொய்க்கால் குதிரை அரசினுடைய முதல்வர், தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத மற்றுமொரு பொம்மை முதல்வராகவே உள்ளார் என்பதற்குத் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய குற்றச் சம்பவங்களே சாட்சியாக உள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், பள்ளிகளில் தொடர்ந்து ரீல்ஸ் (Reels) எடுத்து அத்துமீறலில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய நபர்.
கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கிய அம்மா உணவகத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகச் சர்வநாசம் செய்து, கடந்த ஆட்சியின் நீட்சியாகச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசு.
திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் 'குதிரைப்பேர' அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்
என்று செயல்பட்ட கோயபல்ஸ்
என்றோ மறைந்துவிட்டான்.
ஆனால் அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
-கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் கழக சட்டமன்ற குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
#AIADMK