அனுவாவி சுப்ரமணியசுவாமி கோவில், கோவை உக்கடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
மருதமலைக்கு பின்புறம் உள்ளது இந்த அழகிய மற்றும் கூட்டம் இல்லாத அமைதியான கோவில்.
பேருந்து வசதி குறைவாகவே உள்ளது. இது தான் பேருந்து நேரம் காந்திபுரத்தில் இருந்து - 06:30, 09:15, 12:00, 14:30, 17:00, 19:50
உங்கள் வாகனங்களில் வருவது சிறந்தது. பார்க்கிங் வசதி நன்றாகவே உள்ளது விலாசமாக.
தோராயமாக ஒரு 300-500 படிக்கட்டுகள் இருக்கும். பெரியவர்களும் வரலாம், அனைத்து படிக்கட்டுகளுக்கு அருகிலும் அமரும்படி இருக்கை உள்ளது. மேலே செல்லு���் வரை தண���ணீர் இருக்காது ஆனால் மேலே ஊற்று தண்ணீர் இருக்கும் அது ஒரு சிறப்பு வாய்ந்தது. தேவைப்பட்டால் தண்ணீர் கொண்டு செல்லுங்கள். முருகனை தரிசித்த பிறகு அங்கிருந்து ஒரு 50 படிக்கட்டுகள் மீண்டும் மேலே ஏறினால் அங்கு ஆலமரத்தடியே சிவபெருமான் கோவில் இருக்கும், அங்கு சென்றால் சொர்கத்திற்கு வந்தது போல அந்த மரத்தின் நிழலும் அங்கிருந்து சுற்றி பார்த்தால் அந்த காட்சியும், என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நீங்கள் நேரில் சென்றால் மட்டுமே முழுமையாக உணர முடியும்.
மதியம் 1 மணி அளவில் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்(கொஞ்சம் என்றால் கொஞ்சம் தான்). மற்ற நாள் கூட்டமே இருக்காது.
கோவில் 9 மணியில் இருந்து 4 மணி வரை திறந்திருக்கும். நீங்களும் அந்த நேரத்திற்குள் செல்லுங்கள்.
நீங்கள் செல்லும் போது, சாமியை தரிசித்துவிட்டு, ஒரு 30 நிமிடம் ஃபோ��் இல்லாமல் யாருடனும் பேசாமல் அந்த சிவபெருமான் கோவிலில் ஆலமரத்தடியே அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி எதையும் நினைக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். திரும்பி போகும் போது கண்டிப்பாக உங்கள் கவலைகளில் 1% ஆவது குறைந்திருக்கும்.
ஏதாவது சந்தேகம் இருங்கள் கமண்ட் பண்ணுங்க, உரையாடுவோம்.